என் மலர்
நீங்கள் தேடியது "9 ARRESTED FOR SELLING DRUGS புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் கைது"
புகையிலை பொருட்கள் விற்ற 9 பேைர போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் லாட்டரி மற்றும் குட்கா பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் அறிவுருத்தலின் பேரில்,
பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன், உதவி ஆய்வாளர் ரகுராமன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பெரியார்நகர் பகுதியில் 3 நம்பர் லாட்டரி மற்றும் சிங்கப்பூர் லாட்டரி விற்ற அதே பகுதியை சார்ந்த ரா.சுப்பையா(40), பி.கமர்தீன்(50),நெ.ஜெயராமன்(24) ஆகியோரை கைது செய்யத போலீசார், அவர்களிடமிருந்த பில் புக்,லாட்டரி சீட்டு மற்றும் ரொக்கம் ரூ 17,900 பறிமுதல் செய்தனர்.
அதேபோல் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதியில் மளிகைகடைகளில் சோதனை மேற்கொண்டபோது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குட்கா புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கை.மாயாண்டி என்ற கண்ணன்(50), ஆறுமுகம்(43), கு.அடைக்கன்(36) மீனாட்சிசுந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து பொன்னமராவதியில் மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டபோது அங்கு மொத்த விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்கள் ந.பாஸ்கர், சே.அப்துல்சலாம் ஆகிேயாரை போலீசார் கைது செய்தனர். குட்கா விற்ற 6 பேரிடமிருந்து மொத்தம் 113 கிலோ குட்கா புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






