என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசிய போது எடுத்தப்படம்.
குழந்தைகளின் திறமைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் - முதன்மைக் கல்வி அதிகாரி பேச்சு
குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசினார்.
புதுக்கோட்டை:
குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் செய்துணர் கற்றல் திட்டம் மூலம் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டியில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த 35 பேருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசியதாவது:
பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள்.குழந்தைகளிடம் எதையும் திணிக்காதீர்கள்.குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பீடு செய்யாதீர்கள் .குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவியுங்கள்.குழந்தைகளை போட்டித் தேர்வுகளுக்கு அனுப்பி வையுங்கள் என்றார்.
விழாவில் 35 பேருக்கு ரூ 2 ஆயிரம் மதிப்பிலான பரிசுப்பொருள்கs; மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி வழங்கி்ப் பாராட்டினார். முன்னதாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடைபெற்ற வினாடி வினாப்போட்டியில் வகுப்பு வாரியாக சிறப்பிடம் பிடித்த பத்து பேர் வீதம் மொத்தம் 40 பேருக்கு ரூ 2 ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
Next Story






