என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    filephoto
    X
    filephoto

    பணியிட மாறுதலை ரத்து செய்ய கோரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்

    பணியிட மாறுதலை ரத்து செய்ய கோரி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    கரூர்:

     கரூர் மாவட்டத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட 6 ஆசிரியர்களின் மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்யவேண்டி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 2வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    முதல் நாளில் திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர் ஆகிய மத்திய மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாநிலச் செயலாளர் எஸ்.சுனில்குமார் தலைமையில் 2வது நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

     எஸ்டீஎப்ஐ (இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு) பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜான் கிறிஸ்துராஜ் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். முன்னாள் மாநிலத்தலைவர் ச.மோசஸ் போராட்ட விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர்கள் ஈரோடு ரா.மணி, நீலகிரி பெ.ஜெயசீலன், 

    நாமக்கல் ரா.மாதேஸ், திருப்பூர் அ.பிரஜெபாஸ்டியன், கோவை மாவட்ட துணை செயலாளர் ப.வீராச்சாமி ஆகியோர் போராட்ட உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் எம்.ஞானதம்பி போராட்ட நிறைவுரையாற்றினார். கரூர் மாவட்ட பொருளாளர் ஆ.தமிழரசி வரவேற்றார்.

    தொடர் உண்ணாவிரதத்தில், தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படு த்தும் விதமாக செயல்படும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.மதன்குமாரை கண்டித்தும், 

    கரூர்  மாவட்ட கல்வித்துறையில் அப்பட்டமாக விதிமீறலை கையாண்டு ஒன்றியம் விட்டு வேறு கல்வி  மாவட்டத்திற்கு பல கி.மீட்டர் தூரத்திற்கு பணி மாறுதல் ஆணைகளை வழங்கிய முதன்மைக்கல்வி  அலுவலர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்  எனவும் வலியுறுத்தப்பட்டன.
    Next Story
    ×