என் மலர்
புதுக்கோட்டை
பிற கட்சிகளை சேர்ந்த நபர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யும்படி மிரட்டல் வருவதாக அதிமுக கவுன்சிலர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதோடு மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளரின் ஆதரவோடு 9 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அ.தி.மு.க. அங்கு தலைவர் பதவியை கைப்பற்றும் நிலையில் உள்ளது.
8 அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என 9 பேரும் தாங்கள் பதவியேற்க வரும் போது போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 8 அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் 1 சுயேச்சை உறுப்பினர் ஆகிய 9 பேரும் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து பதவியேற்றனர்.
அதன்பின்னர், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு அதிமுக கவுன்சிலர்கள உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். பிற கட்சிகளை சேர்ந்த நபர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யும்படி மிரட்டல் வருவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை முடிந்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்னவாசல் பேரூராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீடு கட்டாமலேயே கணக்கு காட்டி ரூ.18 லட்சம் மோசடி சம்பவத்தில் 15 பேர் மீது வழக்கு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.
இதையடுத்து புதுக்கோட்டை லஞ்சம் ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2014&2015&ம் நிதியாண்டில் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில் 2 பயனாளிகளுக்கும் மற்றும் 2016&ம் ஆண்டு முதல் முதல் 2019&ம் ஆண்டு வரை, மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கும் வீடுகள் கட்டாமலேயே வீடு கட்டி முடித்ததாக ரூ.17.70 லட்சம் முறைகேடு நடத்திருப்பதும், இதில் 15 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக 2014&ம் ஆண்டு முதல் 2019&ம் ஆண்டு வரை கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், குளத்தூர் ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி தலைவர் என 15 பேர் மீது புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த 15 பேரில், பதவி உயர்வு பெற்ற ஒருவர், திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (தேர்தல்), மற்றொருவர் திருச்சி மாவட்ட ஊராட்சி செயலாளராகவும் தற்போது பணிபுரிகின்றனர். மேலும் சிலர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்களிடம் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றிவந்த லாரி தீப்பற்றி எரிந்து நாசம்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே அம்பலவானனேந்தர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 60). இவருக்கு சொந்தமான சரக்கு லாரியில் ஒக்கூர் கிராமத்தை சேர்ந்த சேகர் (32), நேற்று வைக்கோல் ஏற்றி நெய்வத்தளி கிராமத்திற்கு ஓட்டி வந்துள்ளார்.
ஆலங்குடி அருகே உள்ள பெரியாளூர் கிராமத்தில் சென்ற போது தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உரசி தீ பற்றியதால் வைக்கோலுடன் லாரியும் சேர்ந்து எரிந்தது. லாரியிலிருந்த வைக்கோலை அகற்றுவதற்குள் லாரியும் எரிந்து நாசமானது.
தகவலறிந்து வந்த கீரமங்கலம் தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது நெல் அறுவடை முடிந்து வயல்களில் பரவிக் கிடக்கும் வைக்கோலைகால் நடை வளர்க்கும் விவசாயிகள் மொத்தமாக வாங்கி வந்து கால்நடைகளுக்காக சேமித்து வைக்கின்றனர்.
அதனால் ஆவுடையார்கோவில் பகுதியிலிருந்து ஒவ்வொரு நாளும் 15&க்கும் மேற்பட்ட வாகனங்களில் வைக்கோல் ஏற்றி வரப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்குள் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வைக்கோல் ஏற்றி வந்த பல வாகனங்களில் தாழ்வாகச்செல்லும் மின்கம்பிகள் உரசி தீப்பற்றி எரிந்து நாசமாகி உள்ளது.
சேந்தன்குடி, குளமங்கலம், பெரியாளூர் உள்பட பல கிராமங்களில் வைக்கோல் ஏற்றி சென்ற வாகனங்கள் எரிந்துள்ளது. அதனால் கிராமச்சாலைகளில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்திக் கட்டினால் இது போன்ற விபத்துகளை தடுக்கலாம் என்கிறார்கள் பொது மக்கள்.

ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்க நிகழ்ச்சியாக, சாம்பல் புதன் சிறப்பு வழிகாடுகள் நடைபெற்றன.
இயேசு பிரான், தான் சிலுவையேற்கும் காலம் நெருங்குவதை முன்கூட்டியே அறிந்து, உலக மக்களின் பாவங்களை போக்குவதற்காக விரதமிருந்து, தவம் இயற்றினார் என்பது விவிலியத்தின்கூற்று,
அதன்படி ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் கிறிஸ்தவர்களின் தவக்கால மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கொடை அளித்தல், அசைவம் தவிர்த்தல் போன்றவற்றை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பது வழக்கம்.
கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமாக கடைப்பிடிக்கப்படும் சாம்பல் புதன், ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் முதல் நிகழ்வாக ஆர்கே அடிகளார் தலைமையில் , கித்தரி முத்து அடிகளார் முன்னிலையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.
இதில் கும்மங்குளம் பாத்திமாநகர் வாழைக்கொல்லை, வண்ணாச்சிகொல்லை, ஆலங்குடி சம்பட்டிவிடுதி நால்ரோடு அயங்காடு ஆகிய பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி அருகே மணல் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ் பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்&இன்ஸ்பெக்டர் பழனிகுமார் மற்றும் போலீசார் புதுப்பட்டி, பல்லவராயன் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி சென்ற 3 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் அந்த பகுதியில் உள்ள காட்டாற்றில் இருந்து மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தங்கராசு வயது 55, லட்சுமணன் 55 உள்பட 3 பேரை கைது செய்தனர்.
இதேபோல் ரெகுநாதபுரம் சப்&இன்ஸ்பெக்டர் செல்வ குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது செங்கமேடு பகுதியில் அனுமதியின்றிமணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கந்தர்வக்கோட்டையில் கூடுதல் பஸ்களை இயக்க அமைச்சர் ரகுபதி உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை:
கந்தர்வக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த நகர பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் உரியநேரத்திற்கு கல்வி கூடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமைச்சர் ரகுபதி கந்தர்வக்கோட்டை வழியாக குளத்தூர்நாயக்கர் பட்டியில் நடைபெறும் வடமாடு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வருகை தந்தார்.
அப்போது கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு காத்திருந்த மாணவிகள் மற்றும் மாண வர்கள் அமைச்சர் ரகுபதியின் வாகனத்தை நிறுத்தி தங்களின் கோரிக்கையை நேரடியாக கூறினர்.
உடனடியாக அமைச்சர் ரகுபதி மாவட்ட போக்குவரத்து அலுவலரைதொலை பேசியில் தொடர்புகொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பேருந்தை இயக்க உடனடியாக உத்தர விட்டார்.
அமைச்சரின் உத்தரவின் பேரில் இன்று முதல் காலை 7:30 மற்றும் மாலை 3.30 மணி அளவில் கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்கப் படும் என்று நிலைய அதிகாரி கூறினார்.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அமைச்சர் ரகுபதிக்கு நன்றி கூறினர்.
கந்தர்வக்கோட்டையில் பாரம்பரிய உணவு போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்ட பாரம்பரிய உணவு போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை ஒன்றிய ஆணையர் காமராஜ் தலைமை தாங்கினார். போட்டியில் உடலுக்கு வலுவூட்டும் சிறுதானிய உணவுகள், அனைவருக்கும் ஏற்ற ஊட்டச்சத்து உள்ள பாரம்பரிய உணவுகள் மற்றும் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ற தலைப்பில் பாரம்பரிய உணவு போட்டி நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மகளிர் திட்ட மேலாளர் சந்திரசேகரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் முரளி, தேவராஜன், தேவி, சத்யா, சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.
திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா வருகிற 7-ந்தேதி அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் ஸ்ரீமுத்து மாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா வருகிற 7-ந்தேதி அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்,
கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 26.03.2022 சனிக்கிழமை அன்று பணி நாள் எனவும், வழக்கமாக சனிக் கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங் களுக்கு 27.3.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கிறேன்.
இந்த உள்ளூர் விடுமுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும்
அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கிறேன். மேலும், அரசு பொதுத் தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும், இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமிக் கும், அம்பாளுக்கும் 4 கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மகா சிவராத்திரியை முன்னி ட்டு திருக்கோவில்வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
விராலிமலையில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த முன்னாள் காதலியுடன் பேசிய வாலிபரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் பாலு. இவர் அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். திடீரென்று காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்கள் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் பாலு காதலித்து வந்த பெண்ணுடன் விராலிமலையை சேர்ந்த முகமது யாகூப் மகன் ரசூல் என்ற வாலிபர் பேசி பழகி வந்துள்ளார். இதைப் பிடிக்காத பாலு அவரை கண்டித்தார். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாத ரசூல் தொடர்ந்து பேசி வந்துள்ளதாக தெரிகிறது.
நேற்று சிவராத்திரி விழா விராலிமலை அருகே உள்ள விராலூர் பூமீஸ்வரர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அங்கு வழிபாடு நடத்த சென்ற பாலுவின் முன்னாள் காதலியான அந்த பெண்ணுடன் ரசூல் நின்று பேசிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலு மற்றும் அவரது நண்பர்கள் ரசூலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரசூலை குத்தினார். இதில் கழுத்து, நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
சம்பவ இடத்தில் மயங்கிய ரசூலை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கத்திக்குத்தில் நிறைய ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலையில் ரசூல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் காதல் விவகாரத்தால் குத்திக்குத்து நடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கார்த்திக்கை பிடித்த போலீசார் தப்பியோடிய ராசு மகன் பாலு (23) அவரது தம்பி அருண், நண்பர் சக்தி ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விராலிமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகள் பங்கேற்றன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மாசித்திரு விழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு விழாவானது அரசு விதிகளுக்கு உட்பட்டு செங்கவள நாட்டவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கோவிலூர் பெரியகுளம் பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி அருகில் அரசு அதிகாரிகள் அமர்ந்து பார்வையிடுவதற்கான கேலரி அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு காளைகள் கால்நடை மருத்துவர்களின் சோதனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டது.
டோக்கன் முறைப்படி மாடுகள் வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டது. அதுபோல் மாடுகளை அடக்கும் வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் மற்றும் கொரோனா சான்றிதழுடன் மூன்று அணிகளாக களத்தில் இறக்கப்பட்டனர். வாடிவாசல் அருகில் மருத்துவ முகாமும் திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர்களால் அமைக்கப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், ஏடிஎஸ்பி, ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, திருவரங்குளம் குழுத்தலைவர் வள்ளியம்மை, தங்கமணி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். களத்தில் 300 மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
வாடிவாசலில் முதன்முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ் வொரு காளைகளாக வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முற்பட்டனர். பல காளைகள் வீரர்கள் கட்டுக்கு அடங்காமல் ஓடின, சில காளைகள் வீரர்களை அடைக்கினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், சைக்கிள், மேஜை, கட்டில், மிக்சி கிரைண்டர் பாத்திரங்களும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து காளைகள், காளையர்கள் கலந்துகொண்டன. ஆலங்குடி டி.எஸ்.பி. வடிவேல், காவல் ஆய்வாளர் அழகம்மை, சப்-இன்பெக்டர் குணசேகரன் மற்றும் திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர்கள் வைத்தியலிங்கம், ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி பயிற்சி நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும், மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2021&2022 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட சூழலில் காய்கறி சாகுபடி மாநிலத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி, ரெட்டியார் சத்திரம் காய்கறி மகத்துவ மையத்திற்கு மூன்று நாள் பயிற்சிக்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
இப்பயிற்சியினை வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் பெரியசாமி துவக்கி வைத்தார். இதில் ரெட்டியார் சத்திர காய்கறி மகத்துவ மைய உதவி தோட்டக்கலை அலுவலர், கோபால்பட்டியில் இயங்கி வரும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் உதவி வேளாண்மை அலுவலர், உதவி விதை அலுவலர் சொ.கிருஷ்ணமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர் ஆ.அருண்குமார் ஆகியோர் காய்கறி சாகுபடி பற்றி விளக்கமாக எடுத்து கூறினர்.