என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த போது எடுத்த படம்
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா
கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமிக் கும், அம்பாளுக்கும் 4 கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மகா சிவராத்திரியை முன்னி ட்டு திருக்கோவில்வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Next Story






