என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    சிறு பான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சிறு பான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    அரசு துறை  அலுவலர்கள்  மற்றும்  சங்க  பொறுப்பாளர்கள்  இடையே  நலத்திட்டங்கள்  தொடர்பாக  விரிவான  ஆய்வினை  சிறுபான்மை நலத்துறை  இயக்குநர் மேற்கொண்டனர்.  மேலும்  நிகழ்வில் கிறித்தவ  மகளிர்  உதவும்  சங்கம்,  முஸ்லீம்  உதவும்  சங்கம்  மூலம் 10 பயனாளிகளுக்கு  ரூ.1,33,500&க்கான காசோலை கள் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் வழங்கினார்.

    இதனைதொடர்ந்து  டாம்கோ  மூலம்   குழுக் கடன்  பெற்ற  24   பயனாளிகளை  முறையே, புதுக்கோட்டை   சின்ன  ரயில்வே கேட்  மற்றும்  கலீப் நகர் 2ம்  விதியிலும்  நேரில்  சென்று திட்டங்களின்  பயன்  குறித்தும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார்.

    அதே  போன்று  மாவட்ட  முஸ்¢லீம்  மகளிர்  உதவும் சங்கம்,  மாவட்ட கிறித்தவ  மகளிர்  உதவும்  சங்கம்  மூலம்  நலத்திட்ட  உதவிகள்  பெற்ற பயனாளிகளிடமும்  திட்டத்தின்  பயன்பாடு  குறித்து  சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார்கள்.

      நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) மாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.



    கந்தர்வக்கோட்டையில் மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை வட்டாட்சியர்  அலுவலகத்தில், புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான  மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன் தலைமை தாங்கினார். முகாமில் மாவட்டமாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவக்குமார், கந்தர்வகோட் டை வட்டாட்சியர் புவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கந்தர்வகோட்டை தாலுகாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது  விண்ணப்பங்களை கொண்டு வந்து கொடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொண்டனர்.
    ஆலங்குடியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட கருத்தரங்கம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி ஊராட்சி கிராமம் தச்சன்கோரைப்பத்தை கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் திட்டம் காச நோய் மையம் கட்டமைப்பின் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்ட கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    கருத்தரங்கிற்கு  ஊராட்சி மன்றத்தலைவர் ரெங்கசாமி ராஜாங்கம் தலைமை தாங்கினார். முகாமில் துணை இயக்குநர் சங்கரி கருத்து ஆலோசனைகள் வழங்கினார்.


    கருத்தரங்கில் காசநோய் குறித்தும், காசநோய்க்கான அறிகுறிகள், காசநோய் கிருமி காற்றில் பரவும் விதம் குறித்தும், உடல் எடை குறைதல், அடிக்கடி தும்மல், விட்டு விட்டு காய்ச்சல், இருமல், பாதுகாப்பாக இருமும் முறைகள் குறித்தும்,

    முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், குழந்தைகளையும் தாய் மார்களையும் டிபி கிருமி தாக்குவது குறித்தும் இதற்கு சத்தான உணவு உண்ணுவதன் அவசியம், உணவு முறைகள் குறித்தும், டிபி (எலும்புருக்கி) நோய்க்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்றும் பொது மக்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

    மேலும் நோய் குறித்தும், டிபி நோய் குணமடையும் விதம் குறித்தும் டிபி நோயாளிகளுக்கு சத்துப் பொருட்கள், ஆகாரத் தொகை அரசு மருத்துவ மனையில் வழங்கப்படுவது குறித்தும் சரியாக மருந்து உண்ணும் முறை கள் குறித்தும், ஆறு மாதத்தில் காசநோய் முற்றிலுமாக குணமடையும் வி தம் குறித்தும், டிபி பரவாமல் தடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவான கருத்துரை வழங்கினார்.
    ஆலங்குடியில் மாணவர்ளுக்கு பல் மருத்துவமுகாம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளியில் பல் மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமில் மருத்துவர் செந்தில் தலைமையில் 5 பேர் குழுவினர்  பல்பரிசோதனை செய்தனர்.  

    முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆர்.கே.அடிகளார்,  சூசைராஜ் மற்றும்  மருத்துவர் செந்தில் ஆகியோர் பற்களை எவ்வாறு சுத்தமாக   வைத்திருக்க வேண்டும் என்றும்,  கிருமிகள் நம்மை தொற்றாத வண்ணம் காலையும் மாலையும் மறந் திடாமல் பல் துலக்கிட வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர்.


    முகாமிற்கு மருத்துவர்கள்  செந்தில்ராஜ், ஆனந்தி, விஜயராஜா மற்றும் உதவியாளர்கள்  கௌ சல்யா, யமுனா, சங்கீதா ஆகியோர் சுமார் 950 மாணவ மாணவிகளின் பற்களை பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை எடுத்துரைத்தனர்.
    புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி மற்றும் 8 பேரூராட்சி தலைவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 19&ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதியும் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை நகராட்சியில் தி.மு.க. 24 இடங்களையும், அ.தி.மு.க. 8 இடங்களையும்,

    அ.ம.மு.க. மற்றும் விஜய் மக்கள் யக்கம் தலா ஒரு இடங்களையும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கவுன்சிலராக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர்.

    இதில் 25-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் திலகவதி புதுக்கோட்டை நகராட்சி தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இதே போல் அறந்தாங்கி நகராட்சி தலைவராக தி.மு.க.வேட்பாளர் ஆனந்த் பதவியேற்றுக்கொண்டார்.

    இதே போல் பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக 10-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சுந்தரி அழகப்பன் பதவியேற்றுக்கொண்டார்.

    கறம்பக்குடி பேரூராட்சி தலைவராக, 8-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் முருகேசன் பதவியேற்றுக் கொண்டார். ஆலங்குடி பேரூராட்சி தலைவராக, 13-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ராசி பதவியேற்றுக் கொண்டார். கீரமங்கலம் பேரூராட்சி தலைவராக, 2&வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார்.

    இலுப்பூர் பேரூராட்சி தலைவராக, 14-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் சகுந்தலா பதவியேற்றுக் கொண்டார். கீரனூர் பேரூராட்சி தலைவராக, 1-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ஜெயமீரா பதவியேற்றுக் கொண்டார்.

    அன்னவாசல் பேரூராட்சி தலைவராக, 1-வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வேட்பாளர் சாலை பொன்னம்மாள் பதவியேற்றுக் கொண்டார். அரிமளம் பேரூராட்சி தலைவராக, 13&வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் மாரிக்கண்ணு பதவியேற்றுக் கொண்டார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.3.56 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவிகள் 457 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட் டத்தில் ரூ.3.56 கோடி  மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் 3,656 கிராம்  தங்கத்தையும் 457 பயனாளிகளுக்கு அமைச் சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசும் போது, அரசின் தற்போதைய நிதி சுழலிலும் கடந்த காலங்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட திருமண நிதியுதவி கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் திருமண நிதியுதவித் திட்டங்களை செயல்படுத்தி எதையும் தாங்கும் சுமைதாங்கியாக தமிழ்நாடு முதலமைச்சர்  செயல்பட்டு வருகிறார்கள்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் சிறப்பான நலத் திட்டங்கள் தொடரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நல் ஆதரவினை அளிக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் மேம்பாட்டில் முன்னுரிமை அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்குதல், நகர்ப்புற பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற திட்டங்களை செயல்படுத்தியதன் அடிப்படையில்¢ நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் மகளிர் அனைவரும் ஆதரவு அளித்தனர்.

    இதுபோன்ற மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தொடர்ந்து ஆதரவினை அளிக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, ஒன்றியக்குழுத் தலைவர் பி.சின்னையா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    மாநில அளவில் நடை பெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
    புதுக்கோட்டை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாநில அளவில் நடை பெற்ற 40&ம் ஆண்டு ஜூனியர்  சிலம்ப போட்டியில்  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிலம்பம் விளையாடினர். 

    இதில் 11 ம் வகுப்பு படிக்கும் அருண்ராஜ் என்ற மாண வர்  34 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் முதலிடம் பெற்றார். இதே போல் 65 கிலோ எடை பிரிவில் 12ம் வகுப்பு மாண வர் கோகுல்சந்தோஷ் 2ம் இடம் பிடித்து பரிசு பெற்றார். 

    மாநில அளவில் நடை பெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று  மழையூர் அரசு  மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்த  மாணவர்களுக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் அரங்கசாமி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கநிர்வாகிகள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    மாநில அளவில் நடை பெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
    புதுக்கோட்டை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாநில அளவில் நடை பெற்ற 40&ம் ஆண்டு ஜூனியர்  சிலம்ப போட்டியில்  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிலம்பம் விளையாடினர். 

    இதில் 11 ம் வகுப்பு படிக்கும் அருண்ராஜ் என்ற மாண வர்  34 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் முதலிடம் பெற்றார். இதே போல் 65 கிலோ எடை பிரிவில் 12ம் வகுப்பு மாண வர் கோகுல்சந்தோஷ் 2ம் இடம் பிடித்து பரிசு பெற்றார். 

    மாநில அளவில் நடை பெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று  மழையூர் அரசு  மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்த  மாணவர்களுக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் அரங்கசாமி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கநிர்வாகிகள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மறைமுக தேர்தலையொட்டி அதிமுக, திமுகவினர் இடையே நிகழ்ந்த மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதால் அன்னவாசல் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி தேர்தலில் அதிமுக 
    8 இடங்களையும் , திமுக 6 இடங்களையும் கைப்பற்றி இருந்தது.

    இதையடுத்து பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. 

    இந்நிலையில் தலைவர் தேர்வு குறித்து அதிமுக,திமுகவினர் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது. மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. 

    அன்னவாசல் பகுதியில் திமுக, அதிமுகவினர் மோதல்

    இதனிடையே, மறைமுக தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சாலை பொன்னம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

    தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளுக்கு வலை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சக்திநகர் வடக்கு விரிவாக்கப்பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்.  இவரது மனைவி சித்ராதேவி (வயது 52). இவர் மேலத்தோப்பு அரசு ஆரம்பபள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர்,  வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் தனது பைக்கில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். லெட்சுமி குமரப்பா நகர் வந்த போது,  
    பின்னால் பைக்கில் வந்த 2 பேர் சித்ராதேவி கழுத்தில் அணிந்திருந்த 3பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.

    இதுகுறித்து சித்ராதேவி கொடுத்த புகாரின்பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி மாயமான சம்பவத்தில் போலீசார் விசாரணை
    புதுக்கோட்டை:
     
    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பனைய கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகீம். இவரது மகள் குர்சித் பேகம்(வயது20). 

    இவர் புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு ஆட்டாங்குடியில் உள்ள உறவினர் வீட்டி தங்கி பயின்று வருகிறார். 

    நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர். வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது தாய் நூர்ஜகான் (48) கொடுத்த புகாரின்பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காரணம் எதுவும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பள்ளி கட்டிடத்தை இடித்த அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2019&ம்ஆண்டு மே மாதம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் அ.தி.மு.க. வை சேர்ந்த  சரீப் அப்துல்லா என்கிற ஜிம். பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் சேதமாக இருப்பதாக கூறி இடித்து தள்ளிவிட்டார்.

    கட்டிடத்தின் மதிப்பு ரூ.2.50 லட்சமாகும். இதுகுறித்து கல்வித்துறையில் எந்தவித அனுமதியும் பெற வில்லை எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் என்டோஸ்மென்ட் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தர விட்டுள்ளார். அதன்படி கோட்டை பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×