என் மலர்
புதுக்கோட்டை
ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர்ந்திட அரசு உதவி செய்ய வேண்டும் என்று உக்ரைனில் இருந்து திரும்பிய கறம்பக்குடி மாணவர் கேட்டுக்கொண்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஓடப்பவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ்-ஆனந்தி தம்பதியின் மகன் அஜிஜ்ராஜ் (வயது 21). இவர் உக்ரைனில் உள்ள வினிசியா பிரிக்கோ மெமோரியல் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அங்கு போர் காரணமாக உக்ரைனில் தவித்து பின்னர் ருமேனியா வந்தடைந்த அவரை மத்திய அரசு மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்தது. டெல்லி வந்தடைந்த அவர் தமிழக அரசின் ஏற்பாட்டில் நேற்று மாலை சொந்த ஊருக்கு திரும்பினார்.
அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்றனர். பின்னர் அஜித்ராஜ் கூறியதாவது:
ரஷ்யா&உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே மிகவும் அச்சத்துடன் தவித்தோம். அங்கு மிகவும் புகழ்பெற்ற நூற்றாண்டு பழமைமிக்க கல்லூரியில் படித்ததால் பாதுகாப்பாக இருந்தோம்.
இருப்பினும் விமானங்கள் பறக்கும் சத்தமும், அடிக்கடி அபாய சங்கு ஒலியும் பெரும் பதற்றத்தை தந்தது. இரவு நேரங்களில் தூக்கமின்றி தவித்தோம். உணவு கிடைப்பதும் பெரும் சிரமமாக இருந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு எங்கள் பல்கலைக்கழகத்தின் சார்பாக வாகனம் ஏற்பாடு செய்து ருமேனியா சென்றடைந்தோம்.
அங்கு இந்திய தூதரகஅதிகாரிகள் உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பின்னர் நேற்று முன்தினம் இந்திய விமானத்தின் மூலம் டெல்லி வந்தடைந்தோம். அங்கிருந்து தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் சொந்த சென்னை வந்து பின் சொந்த ஊர் திரும்பினேன்.
எங்ளை பத்திரமாக மீட்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி கர்நாடகாவை சேர்ந்த மாணவர் உணவு வாங்க சென்றபோது குண்டு பாய்ந்து கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மரண பயத்தில் தவித்தோம். தற்போது மறுபிறவி எடுத்து வந்ததுபோல் உள்ளது.
ஏழ்மையான சூழவில் மருத்துவ கனவை நிறைவேற்ற உக்ரைன் சென்ற என்னை போன்ற மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர அரசு உதவிசெய்ய வேண்டும். மேலும் அங்கு சிக்கியுள்ள அனைத்து மாண வர்களையும் மீட்டு வரவேண்டும் என்றார்.
சம்பள பணம் குறித்து ஆன்லைனில் விவரம் தேடியபோது ரூ.2.70 லட்சத்தை பறிகொடுத்த கிராம அதிகாரி போலீசில் புகார்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் மகாலிங்கமூர்த்தி நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 30) . இவர் சிறுமறுதூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி தனது வங்கி கணக்கில் சம்பளம் ஏரவில்லையென, தான் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கி ஆன்லைன் மூலம் விபரம் தேடியுள்ளார்.
அப்போது போலியான குய்க் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்யச் சொல்லி தகவல் வந்துள்ளது. உடனே அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்த விக்னேஷ்வரன், அதில் கேட்கப்பட்ட விபரங்களையும் பதிவு செய்துள்ளார்.
விபரங்களை பதிவு செய்த கொஞ்ச நேரத்தில் வங்கி கணக்கிலிருந்த ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து விக்னேஷ்வரன் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் கவிதா தலைமையில் வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
சம்பளம் ஏரவில்லையென கிராம நிர்வாக அலுவலர் போலி ஆப்பில் தகவல் தெரிவித்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வரை ஏமாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி களப்பக்காடு பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பக்காடு பகுதியில் உள்ள ஆலமரத்து முனிஸ்வரர் கோவிலில் வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களி லிருந்து 13- காளைகள் போட்டியில் கலந்து கொண்டன.
போட்டியில் பங்கு பெற வந்திருந்த மாடுகள் முழு மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. அதே போன்று மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரி சோதனைக்கு பின்னரே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு குழுவிற்கு 9 வீரர்கள் வீதம் மொத்தம் 99 வீரர்கள் போட்டியில் பங்கு பெற்றனர். போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். அதையும் மீறி காளைகள் வீரர்களிடம் சிக்காமல் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தன.
போட்டியில் வென்ற மாடு மற்றும் வீரர்களுக்கு ரொக்கப்பணம், வெள்ளி நாணயம் ,சோபா சேர், அண்டா, சைக்கிள் மற்றும் நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் தலைமையில்,ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளி ட்ட 150க்கும் மேற்பட்டபோலீ சார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவகுழுவினர், தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
அன்னவாசலில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் போலீசார் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியில் இதுவரை காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க., கட்சிகள் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அ.தி.மு.க. தலைவர் பதவியை பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பான்மையுடன் இருந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முன் கூட்டியே நீதிமன்றத்தை நாடி உரிய போலீஸ் பாதுகாப்பு கேட்டு பெற்றிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீசார் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கி தேர்தல் நடத்த கடந்த 4-&ந் தேதி பேரூராட்சி மன்ற அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது தி.மு.க.வினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஏற்பட்ட பிரச்சினையில் போலீசார் தி.மு.க.வினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
தி.மு.க.வினர் நடத்திய கல்வீச்சில் பரமேஸ்வரி, நீலா, முகமது அசாருதீன், முகமது ஜாபர் ஷெரிப் ஆகிய 4 போலீசார் காயம் அடைந்தனர். தி.மு.க.வினர் சிலரும் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் காயமடைந்த போலீசார் கொடுத்த புகாரின் பேரில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் அன்னவாசல் போலீசார் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியில் இதுவரை காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க., கட்சிகள் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அ.தி.மு.க. தலைவர் பதவியை பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பான்மையுடன் இருந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முன் கூட்டியே நீதிமன்றத்தை நாடி உரிய போலீஸ் பாதுகாப்பு கேட்டு பெற்றிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீசார் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கி தேர்தல் நடத்த கடந்த 4-&ந் தேதி பேரூராட்சி மன்ற அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது தி.மு.க.வினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஏற்பட்ட பிரச்சினையில் போலீசார் தி.மு.க.வினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
தி.மு.க.வினர் நடத்திய கல்வீச்சில் பரமேஸ்வரி, நீலா, முகமது அசாருதீன், முகமது ஜாபர் ஷெரிப் ஆகிய 4 போலீசார் காயம் அடைந்தனர். தி.மு.க.வினர் சிலரும் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் காயமடைந்த போலீசார் கொடுத்த புகாரின் பேரில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் அன்னவாசல் போலீசார் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கந்தர்வக்கோட்டையில் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சி மல்லிகை நத்தம்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 தினங்களாக கோவில் எதிர்புறம் யாகசாலை அமைத்து, 4 காலபூஜைகள்நடை பெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி அளவில் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கோவிலின் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது.
விழாவை முன்னிட்டு சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி செல்வவிநாயகரை வழிபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் மல்லிகைநத்தம் கிராம மக்கள் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நாளை மாலை மாசி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும்.
விழாவையொட்டி பூச்சொரிதல் விழாவுடன் கூடிய தேரோட்டம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 20.02.2022 அன்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.
இதேபோல பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தம்பதிகள் கரும்புத் தொட்டில் கட்டி கோவிலுக்கு மேளதாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு புதுக் கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் அமைத்து கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர், மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியாக நாளை 07.03.2022 மாலை மாசி தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள். மாசிப்பெருந்திருவிழா 14.03.2022 ஆம் தேதி காப்புக் களைதலுடன் நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
ஆலங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அற்புதமாதா நடுநிலைப்பள்ளி மற்றும் கடைவீதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தினர்.
முகாமிற்கு ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் வள் ளியம்மை கேபிகேடி தங்க மணி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,
ஆலங்குடி சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ், சுகாதார செவிலியர் பிரேமா பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கந்தர்வகோட்டையில் மகளிர் தின விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அளவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான குடிநீர்,
தூய்மை பாரத இயக்கம், ஊட்டச்சத்து உணவு, பாலின பாகுபாடு ஆகிய தலைப்பில் கோலப் போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, நாடகப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி ஆகியவை கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கந்தர்வகோட்டை ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக்மழவராயர் பாராட்டி பரிசுகள் வழங்கினார். முன்னதாக, மாநில பயிற்றுனர் கருப்பையா வரவேற்புரையாற்றினார்.
விழாவில் கந்தர்வகோட்டை ஒன்றிய ஆணையர்கள் திலகவதி, காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் தேவராஜன், முரளி, சரண்யா, தேவி ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் வட்ட இயக்க மேலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
கந்தர்வக்கோட்டையில் பிறப்பு இறப்பு பதிவு சிறப்பு முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன் தலைமை தாங்கினார். முகாமில் கந்தர்வகோட்டை தாலுக்காவில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுகளை நேரில் விசாரணை செய்து உடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர் சாலை விபத்தில் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டியில் வசித்து வரும் கோவிந்தராஜ் மகன் சக்திவேல்(வயது 46) இவர் ஆண்டிப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
மேலும் இவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
இவருக்கு திருமணமாகி பிரகதாம்பாள் என்ற மனைவியும், அருளி (19), பாலபாரதி (13 )என்ற மகளும் உள்ளனர்.
இவர் சம்பவத்தன்று இரவு நடுப்பட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாக வீட்டுக்கு வராததால் சக்திவேலை நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்த போது பருக்கைவிடுதி-பகட்டுவான்பட்டிக்கும் இடையே உள்ள பாலத்தில் சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் விழுந்து கிடந்துள்ளது. அருகில் சென்று பார்த்த போது சக்திவேல் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்த காவல் ஆய்வாளர் செந்தில்மாறன், உதவி ஆய்வாளர் அருணகிரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி மருந்துவமனைமக்கு பிரேத பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சக்திவேல் உறவினர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை செய்து வருகிறார்கள் ."
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டியில் வசித்து வரும் கோவிந்தராஜ் மகன் சக்திவேல்(வயது 46) இவர் ஆண்டிப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
மேலும் இவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
இவருக்கு திருமணமாகி பிரகதாம்பாள் என்ற மனைவியும், அருளி (19), பாலபாரதி (13 )என்ற மகளும் உள்ளனர்.
இவர் சம்பவத்தன்று இரவு நடுப்பட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாக வீட்டுக்கு வராததால் சக்திவேலை நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்த போது பருக்கைவிடுதி-பகட்டுவான்பட்டிக்கும் இடையே உள்ள பாலத்தில் சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் விழுந்து கிடந்துள்ளது. அருகில் சென்று பார்த்த போது சக்திவேல் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்த காவல் ஆய்வாளர் செந்தில்மாறன், உதவி ஆய்வாளர் அருணகிரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி மருந்துவமனைமக்கு பிரேத பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சக்திவேல் உறவினர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை செய்து வருகிறார்கள் ."
விநியோகிக்கப்படாத பொங்கல் தொகுப்பை சிறப்பு பள்ளிக்கு வழங்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
அறந்தாங்கி பகுதியில் 122 நியாவிலை கடைகள் இயங்கி வருகின்றன. இதில் கடந்த ஜனவரி மாதம், தைத்திருநாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதனால் அநேக பயனாளிகள் பயனடைந்தனர். இருந்த போதிலும் வெளியூர்களில் தங்கியுள்ள போன்ற காரணங்களால் ஒரு சில பயனாளிகளால் பொங்கல் தொகுப்புகளை பெறமுடியாத சூழ்நிலை இருந்து வந்துள்ளது.
எனவே 10ற்கும் மேற்ப்பட்ட கடைகளில் 119 தொகுப்புகள் மீதமடைந்தன. அதனை பயனுள்ள வகையில் மாற்றும் விதமாக, மாவட்ட கலெக்டர் கவிதாராமு அறந்தாங்கி காரைக்குடி சாலையில் உள்ள செவித்திறன் குறைந் தோருக்கான சிறப்புப் பள்ளியில் வழங்க உத்தர விட்டார்.
உத்தரவின் அடிப்படையில் கோட்டாட்சியர் சொர்ணராஜ், வட்டவழங்கல் தாசில்தார் கருப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு பள்ளிக்கு சென்று பொங்கல் தொகுப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர்கள், சிறப்பு பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் உள்ளிட்ட அரசுப் போக்கு வரத்துத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து புதுக்கோட்டையில் சி.ஐ.டி.யு சங்கத்தினர் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) புதுக்கோட்டை மண்டல பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். போராட்டத்தை தொடங்கி வைத்து சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உரையாற்றினார்.
போராட்டத்தை வாழ்த்தி சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளார் எஸ்.இளங் கோவன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.அன்பு மணவாளன் ஆகியோர் பேசினர். கோரிக் கைகளை விளக்கி சங்க நிர்வாகிகள் ஆர்.மணி மாறன், கே.கார்த்திக்கேயன், எஸ்.சாமிய அய்யா, என்.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.






