என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சம்பள பணத்திற்காக ரூ.2.70 லட்சத்தை பறிகொடுத்த கிராம அதிகாரி
சம்பள பணம் குறித்து ஆன்லைனில் விவரம் தேடியபோது ரூ.2.70 லட்சத்தை பறிகொடுத்த கிராம அதிகாரி போலீசில் புகார்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் மகாலிங்கமூர்த்தி நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 30) . இவர் சிறுமறுதூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி தனது வங்கி கணக்கில் சம்பளம் ஏரவில்லையென, தான் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கி ஆன்லைன் மூலம் விபரம் தேடியுள்ளார்.
அப்போது போலியான குய்க் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்யச் சொல்லி தகவல் வந்துள்ளது. உடனே அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்த விக்னேஷ்வரன், அதில் கேட்கப்பட்ட விபரங்களையும் பதிவு செய்துள்ளார்.
விபரங்களை பதிவு செய்த கொஞ்ச நேரத்தில் வங்கி கணக்கிலிருந்த ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து விக்னேஷ்வரன் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் கவிதா தலைமையில் வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
சம்பளம் ஏரவில்லையென கிராம நிர்வாக அலுவலர் போலி ஆப்பில் தகவல் தெரிவித்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வரை ஏமாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
Next Story






