என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் சீறிப்பாய்ந்த காளையை படத்தில் காணலாம்.
வடமாடு மஞ்சு விரட்டு போட்டி
அறந்தாங்கி களப்பக்காடு பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பக்காடு பகுதியில் உள்ள ஆலமரத்து முனிஸ்வரர் கோவிலில் வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களி லிருந்து 13- காளைகள் போட்டியில் கலந்து கொண்டன.
போட்டியில் பங்கு பெற வந்திருந்த மாடுகள் முழு மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. அதே போன்று மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரி சோதனைக்கு பின்னரே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு குழுவிற்கு 9 வீரர்கள் வீதம் மொத்தம் 99 வீரர்கள் போட்டியில் பங்கு பெற்றனர். போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். அதையும் மீறி காளைகள் வீரர்களிடம் சிக்காமல் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தன.
போட்டியில் வென்ற மாடு மற்றும் வீரர்களுக்கு ரொக்கப்பணம், வெள்ளி நாணயம் ,சோபா சேர், அண்டா, சைக்கிள் மற்றும் நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் தலைமையில்,ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளி ட்ட 150க்கும் மேற்பட்டபோலீ சார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவகுழுவினர், தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
Next Story






