என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ஆலங்குடி செட்டிகுளம் தென்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில் எடுத்தல், காவடி எடுத்து ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சா மி தரிசனம் செய்தனர்.
    அறந்தாங்கி அருகே தொழிலதிபரை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிருஷ்ணாஜிபட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் பேசிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா, கொரொனா நெருக்கடிகள் நீங்கிய பிறகு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும் என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. அண்டை நாடான இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் பொருளாதார நெருக்கடியை ஒன்றிய அரசு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சிறுபான்மை மக்களை வஞ்சித்து ஒரு அரசை நடத்திட இயலாது. எனவே ஒன்றிய அரசு 3 சட்டங்களை மீண்டும் செயல்படுத்த நினைத்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்.

    அறந்தாங்கி அருகே ஆவுடையார்பட்டினத்தில் நிஜாம் என்ற தொழிலதிபரை கொலை செய்து 170 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் நடைபெற்று 10 நாட்களை கடந்தும் இதுவரை காவல்த்துறையினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

    நகரின் முக்கிய பகுதியில் வீட்டில் இருந்தவர் கொலை செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே டி.ஜி.பி. உடனடியாக நேரில் பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் செய்யதுஅகமது, மாவட்ட பொதுச் செயலாளர் அரபாத், மாவட்ட துணைத் தலைவர் குலாம்முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையம் அருகே அமைந்துள்ள ஆபத்தான கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வேப்பங்குடியில் உள்ள அங்கன்வாடி மையம் கட்டிடம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இங்கு 2 வயது முதல் 5 வயதுவரை உள்ள 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    மேலும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி போடுவது, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து பெருட்கள் வழங்குவது போன்ற பணிகள் இந்த மையத்தில் நடைபெறுகிறது.

    தொடர்ந்து, இந்த அங்கன்வாடி வளாகத்தில் ஒரு பாழடைந்த பழைய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்புள்ளது.

    ஆகையால், இந்த கிணற்றை மண் மூலம் மூடிவிட இப்பகுதி பொதுமக்கள், குழந்தைகளின் பெற்றோர் பல ஆண்டுகளாக, சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும், இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடம், கதவுகள், மேற்கூரை போன்றவை மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவே பெற்றோர்கள் தயங்குகின்றனர்.

    எனவே, குழந்தைகளின் நலன்கருதி வேப்பங்குடியில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள பாழடைந்த பழைய கிணற்றை மூட வேண்டும்.

    விபத்து ஏற்படுவதற்கு முன்பு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மணமேல்குடி வேட்டணிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் வேட்டணிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக்குழு மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.

    தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமையில்   நடைபெற்றக் கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு)சிவயோகம் முன்னிலை பொறுப்பு வகித்தார்.

    பள்ளி மேலாண்மைக் குழு புதிய தலைவராக பாண்டியம்மாள், துணைத் தலைவராக கவிதா மற்றும் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர்  சான்றிதழ்களை வழங்கினார். இறுதியாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர்  மேரிவெர்ஜின் உதயா நன்றியுரை கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    பொன்னமராவதியில் சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன்புதுப்பட்டி நகர சிவன் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புவனேஸ்வரி சமேத பூலோகநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.  

    இக்கோயில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது நடைபெறுவது 6 வது கும்பாபிஷேகம் ஆகும்.

    14 ஆண்டுக்கு பிறகு இந்த திருக்கோயிலில்  கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.


    கந்தர்வகோட்டையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க ஆண்டு விழா நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  

    விழாவிற்கு வட்ட கிளை தலைவர் சொக்க இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.மாவட்ட அமைப்புச் செயலாளர் தன ராசு அனைவரையும் வரவேற்றார் முன்னாள் மாநில செயலாளர்அய்யனப்பிள்ளை தொடக்க உரையாற்றினார்.

    கூட்டத்தில் ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கான குறைகளையும் அரசு செயல்படுத்த வேண்டிய நல திட்டங்களையும் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் வர்த்தக சங்கத் தலைவர் பழ.மாரிமுத்து, பொருளாளர் செந்தில்குமார், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய துணை பெருந்தலைவர் செந்தாமரை குமார், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  

    கூட்டத்தில் 80-வயது நிறைவு செய்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக துணைத் தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

    கந்தர்வகோட்டையில் பேரிடர் காலங்களில் செயல் படும் முறை குறித்து தன்னார்வர்லர்களுக்கு பயிற்சி முகாம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை தாலுக்காவில் உள்ளகிராமங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் செயல்படும் விதம் குறித்து பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புதிய அரசு தலைமை தாங்கினார்முகாமில் கந்தர்வகோட்டை, அரசம்பட்டி, வடுகப்பட்டி, மங்கனூர், கோமாபுரம், மெய்குடி பட்டி, சோத்துப்பாளை, வளவம்பட்டி  

    கிராமங்களைச் சேர்ந்த 40 தன்னார்வலர்களுக்குமழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை பேரிடலிருந்து எவ்வாறு காப்பாற்றுவது
     
    என்பது தொடர்பான பயிற்சியினை கந்தர்வகோட்டை தீயணைப்புத்துறை நிலையஅதிகாரி ஆரோக்கியசாமி தலைமையில் காவலர்கள் பயிற்சி அளித்தனர்.

    முகாமில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கந்தர்வகோட்டையில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது.

    போராட்டத்திற்கு வடக்கு ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய தலைவர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.  

    இந்த போராட்டத்தில் அரசு புறம்போக்குநிலங்களில் குடியிருந்து வரும் நபர்களுக்கு பட்டா கேட்டும், வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டும் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசனிடம் மனு கொடுத்தனர்.

    முன்னதாக கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்  

    இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ராமையன், சிஐடியு  கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அறந்தாங்கி அருகே வீட்டை விட்டு வெளியே செல்ல பாதை இல்லாததால் பள்ளி சிறுமி மூதாட்டி உட்பட 4 பேர் உணவு, தண்ணீர் இன்றி வீட்டில் ஒரு வாரமாக முடங்கி உள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குண்டகவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டிற்கு செல்லும் பொதுப்பாதையில் அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராதிகா சண்முகம் என்பவர் வீடு கட்டியுள்ளார்.

    இதனால் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் வெளியில் செல்ல வழி இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்ததில் கோட்டாட்சியர் சொர்ணராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    ஆய்வைத் தொடர்ந்து ஊராட்சிமன்றத் தலைவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ள இடத்தின் வழியாக பாதை அமைத்து தராமல், வேறு ஒருவரின் நத்தம் புறம்போக்கு இடத்தில் தற்காலிக பாதை அமைத்து கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் நத்தம் புறம்போக்கு இடத்தில் வசித்து வருபவர், இது எனக்கு சொந்தமான இடம் என நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று, அவருக்கு சொந்தமான இடத்தை முள் வேலி போட்டு அடைத்துள்ளார். இதனால் பாதையின்றி ராமகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்த பள்ளி சிறுமி உட்பட நான்கு பெண்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

    கடந்த 30ந்தேதி அடைக்கப்பட்ட வேலியால், ஒரு வார காலமாக வெளியில் செல்ல முடியாமல் உணவு, குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் சிறுமி பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலே அடைக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக வீட்டிலிருப்பவர்கள் கூறுகையில், எங்கள் வீட்டிலிருந்து கடை வீதிக்கு செல்ல பொதுப்பாதை ஒன்றை பயன்படுத்தி வந்தோம். இதில் பாதையின் குறுக்கே ஊராட்சி மன்றத் தலைவர் வீடுகட்டியுள்ளார். இதனால் எங்கள் வீட்டைச் சுற்றி வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் ஒரு வார காலமாக வீட்டிற்குள்ளேயே அடைக்கப்பட்டுள்ளோம். எனது குழந்தைக்கு 2 நாட்களாக மூக்கில் ரத்தம் வடிவதோடு உடல் நிலையும் சரியில்லாமல் உள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூட வழியில்லாமல் தவித்து வருகிறோம். இன்னும் 2 நாட்கள் ஆனால் உணவு தண்ணீர் இன்றி இறந்து விடுவோம் என தெரிவித்தனர்.

    எனவே அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளனர். அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று வேதனை தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    போக்குவரத்து நெரிசலில் மாணவர்கள் சிக்குவதை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அதிகமான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம்  கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக் குழுத்தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது.  

    கூட்டத்திற்கு ஆணையர்கள் திலகவதி, ஸ்ரீதர், ஒன்றிய துணைத்தலைவர் செந்தாமரைகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கோமாபுரம் ஒன்றியக்குழு உறுப்பினர் பாண்டியன் (அதிமுக) பேசும் போது கந்தர்வகோட்டை பகுதியில் இயங்கும் நகரபேருந்துகளை பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி சரியான நேரத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

    கந்தர்வகோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் திமுக பேசும் போது கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் புதிய சிமெண்ட் தரை தளம் அமைத்து தர வேண்டும் என  கேட்டுக்கொண்டார்.

    சுந்தம்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி பிரியா (திமுக, ) பேசும்பொழுது மருங்கூரணி அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்களும் சுற்றுச் சுவரும் அமைத்து தர கேட்டுக்கொண்டார்.
    குளத்தூர் நாயக்கர் பட்டி கவுன்சிலர் வைரக்கண்ணு பேசும்பொழுது, நடுப்பட்டி க்கு புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர கேட்டுக்கொண்டார்.

     கவுன்சிலர் திருப்பதி (திமுக) பேசும்போது துவார் சுற்று வட்டார கிராமங்களுக்கு இதுவரை காவிரி கூட்டுக்குடிநீர்திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்றும், உடனடியாக செய்து தரவும் கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்திற்கு முறையாக அழைப்பு கடிதம் விடுத்தும் கலந்து கொள்ளாத பல அரசுத் துறை அதிகாரிகள் வரும் காலங்களில் கூட்டத்தில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.

    மின்மயானம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்மயானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.  

    இந்நிலையில் மின்மயானம் அமைப்பதற்காக திருப்பத்தூர் சாலையில் உள்ள இடத்தை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், துணை வட்டாட்சியர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


    கோவில் பூச்சொரிதல் விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரின் காவல் தெய்வமாக விளங்கும் பட்டமரத்தான் கோயில் பூத்திருவிழா கடந்த  மாதம்  29-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள்  பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து பட்டமரத்தான் சுவாமிக்கு சாத்தி வழிபட்டனர்.

    நிகழ்வில் தமிழக சட்டத்துறைஅமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று பால்குட ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.  ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, துணைத்தலைவர் தனலெட்சுமி அழகப்பன், பேரூராட்சிதலைவர் சுந்தரி அழகப்பன்,  ஒன்றிய ஆணையர்கள் பி.தங்கராஜூ, வை.சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×