search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவரங்குளம் அருகே வேப்பங்குடியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தையும், அதன் அருகிலேயே திறந்த நிலையில் உள்ள கிண
    X
    திருவரங்குளம் அருகே வேப்பங்குடியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தையும், அதன் அருகிலேயே திறந்த நிலையில் உள்ள கிண

    அங்கன்வாடி அருகே ஆபத்தான கிணற்றை மூட நடவடிக்கை

    புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையம் அருகே அமைந்துள்ள ஆபத்தான கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வேப்பங்குடியில் உள்ள அங்கன்வாடி மையம் கட்டிடம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இங்கு 2 வயது முதல் 5 வயதுவரை உள்ள 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    மேலும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி போடுவது, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து பெருட்கள் வழங்குவது போன்ற பணிகள் இந்த மையத்தில் நடைபெறுகிறது.

    தொடர்ந்து, இந்த அங்கன்வாடி வளாகத்தில் ஒரு பாழடைந்த பழைய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்புள்ளது.

    ஆகையால், இந்த கிணற்றை மண் மூலம் மூடிவிட இப்பகுதி பொதுமக்கள், குழந்தைகளின் பெற்றோர் பல ஆண்டுகளாக, சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும், இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடம், கதவுகள், மேற்கூரை போன்றவை மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவே பெற்றோர்கள் தயங்குகின்றனர்.

    எனவே, குழந்தைகளின் நலன்கருதி வேப்பங்குடியில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள பாழடைந்த பழைய கிணற்றை மூட வேண்டும்.

    விபத்து ஏற்படுவதற்கு முன்பு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×