search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கூட்டநெரிசலை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும்

    போக்குவரத்து நெரிசலில் மாணவர்கள் சிக்குவதை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அதிகமான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம்  கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக் குழுத்தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது.  

    கூட்டத்திற்கு ஆணையர்கள் திலகவதி, ஸ்ரீதர், ஒன்றிய துணைத்தலைவர் செந்தாமரைகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கோமாபுரம் ஒன்றியக்குழு உறுப்பினர் பாண்டியன் (அதிமுக) பேசும் போது கந்தர்வகோட்டை பகுதியில் இயங்கும் நகரபேருந்துகளை பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி சரியான நேரத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

    கந்தர்வகோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் திமுக பேசும் போது கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் புதிய சிமெண்ட் தரை தளம் அமைத்து தர வேண்டும் என  கேட்டுக்கொண்டார்.

    சுந்தம்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி பிரியா (திமுக, ) பேசும்பொழுது மருங்கூரணி அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்களும் சுற்றுச் சுவரும் அமைத்து தர கேட்டுக்கொண்டார்.
    குளத்தூர் நாயக்கர் பட்டி கவுன்சிலர் வைரக்கண்ணு பேசும்பொழுது, நடுப்பட்டி க்கு புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர கேட்டுக்கொண்டார்.

     கவுன்சிலர் திருப்பதி (திமுக) பேசும்போது துவார் சுற்று வட்டார கிராமங்களுக்கு இதுவரை காவிரி கூட்டுக்குடிநீர்திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்றும், உடனடியாக செய்து தரவும் கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்திற்கு முறையாக அழைப்பு கடிதம் விடுத்தும் கலந்து கொள்ளாத பல அரசுத் துறை அதிகாரிகள் வரும் காலங்களில் கூட்டத்தில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×