என் மலர்
புதுக்கோட்டை
- கமலாயி கோவிலில் முருகனாக வழிபட்டு வந்ததது சமணர் சிலை என தெரியவந்தது.
- தொல்லியல்துறை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தினர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் புள்ளான்விடுதி கமலாயி கோவிலில் முருகனாக வழிபட்டு வந்ததது சமணர் சிலை என தெரியவந்தது.
புள்ளான்விடுதியில் உள்ள கமலாயி அம்மன் கோவிலில் உள்ள முருகனாக வழிபட்டு வந்த சிலையானது சற்று மாறுபட்ட நிலையில் இருந்துள்ளது. இது குறித்து தகவலின் பேரில், புதுக்கோட்டை தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்களான பாண்டியன், இந்திரஜித் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதில், அந்த சிலையானது சமணர் சிற்பம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பாண்டியன், இந்திரஜித் ஆகியோர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமணர் சிலைகள் கண்டறியப்பட்டிருந்தாலும்,
இங்குள்ள சிலை மட்டுமே நின்ற நிலையில் உள்ளது. சுமார் 20 செ.மீட்டர் உயரம் உள்ள இந்த சிலையின் இடது மற்றும் வலது பக்கத்தில் தலா ஒரு குத்துவிளக்கு, சாமரம் உள்ளது. மேலும் தலைக்கு மேல் முக்குடையும் உள்ளது. இந்த சிலையை முருகன் சிலை என்று பொதுமக்கள் இது நாள் வரை வழிபட்டு வந்துள்ளனர் என்றனர்.
- அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்
புதுக்கோட்டை:
அறந்தாங்கி தாலுகா கூகனூர்குடியிருப்பு கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ சிவந்தபெருமாள்
அய்யனார் திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 1 ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான வெள்ளியன்று நான்காம்காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு
பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீ சாமிநாதகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைக்காண அப்பகுதியைச்சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்து ஸ்ரீ சிவந்தபெருமாள் அய்யனார் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வாகன விபத்தில் டிரைவர் பலியானார்
- இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம்கீரமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல் (வயது 48). டிரைவரான இவர் சம்பவத்தன்று பனங்குளத்திற்கு மரம் வெட்டுவதற்காக அதற்கான எந்திரங்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது,
எதிரே மதுரையிலிருந்து வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சித்திரவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம் புலன்ஸ் உதவியுடன் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்ன்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி யில் சேர்க்கப் பட்ட சித்திரவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீரமங்கலம் போலீசார் வேன் ஓட்டுநர் இளங்கோவை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
- சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா சடையம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி பூர்ணாகுதி உள்ளிட்ட முதற்கால யாக வேள்வி பூஜைகள் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலை பந்தலில் ஞானசேகர சிவாச்சாரியர், மணிகண்ட சிவாச்சாரியர் ஆகியோர் தலைமையில் காசியிலிருந்தும் ராமேஸ்வரத்திலிருந்தும் எடுத்து வரப்பட்ட புனித நீர் குடத்தை வைத்து
யாகசாலையில் யாக வேள்வி பூஜைகள் நடத்தி பின்பு பூசிவாச்சாரியார்கள் புனிதநீர் குடத்தை தலையில் சுமந்து கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டு விமான கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகம்
செய்தனர். தொடர்ந்து சித்திவிநாயகர் கோவிலின் மூலஸ்தான கோபுரத்தில் கிழ் கருவறையிலுள்ள சித்தி விநாயகருக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்தனர். பின்பு சிவன்,
நந்தி, நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விஷ்ணு உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- சிவன் கோவில் எதிரில் புதியதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
- ரூ. 7.5 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவ ரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பொது நிதியிலிருந்து ரூ. 7.5 லட்சம் செலவில் திருவரங்குளம் சிவன் கோவில் எதிரில் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் கோகுலகிருஷ்ணன் முன்னிலையில், தமி ழ்நாடு சுற்றுச்சூழல் இளைஞர் நலன் விளையாட்டு துறை
அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் கலந்துகொண்டு கலையரங்கத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் திருவரங்குளம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே பி கே தங்கமணி, திருவரங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அனைவரையும் திருவரங்குளம் ஊராட்சி மன்றத் தலை வர் மகேஸ்வரி ஆறுமுகம் வரவேற்றார். துணைத்தலை வர் ஐயாத்துரை ரங்கநாயகி நன்றி கூறினார்.
- புனித வியாகுல மாதா ஆலய தேர் பவனி நடைபெற்றது.
- தேர் பவனியுடன் கொடியிறக்கம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே அரசடிபட்டியில் புனித வியாகுல மாதா ஆலயம் உள்ளது. இக்கோவிலில் ஆலய திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முக்கியஸ்தர்களால் தினந்தோறும், புனித வியாகுல மாதா திருஉருவ கொடிறே்று கூட்டுப்பாடல் திருப்பலி மற்றும் கொடி சுற்றுப்பவனியும் நடைபெற்று வந்தது.
நவநாள் சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. அரசடிபட் அருட்திரு பங்குதந்தையர்கள் திருவிழா 9-ம் நாளான நேற்று முன்தினம் தேர்பவனி நடைபெற்றது. மாலையில் திருப்பலி மற்றும் தேர்ப்பவனியும் நடைபெற்றது. இதில் அரசடிபட்டி, பாத்திமா நகர், தவளைப்பள்ளம் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 3 மணிக்கு தேர்ப்பவனியும் கொடியிறக்கமும் நடைபெற்றது.
- சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- உள்ளாட்சி பிரநிதிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
புதுக்கோட்டை:
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொன்னமராவதி பேரூராட்சியின் சார்பாக 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ. கணேசன் மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அடக்கி பழனியப்பன், சாத்தையா நாகராஜ், ராஜா, மருத்துவர் நடராஜன், பேரூராட்சி சுய உதவி குழு , மஸ்தூர் பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தினமும் காலை மற்றும் இரவு மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளி குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் விராலிமலை முருகன் கோவில் சிறப்பு பெற்ற தலமாகும். இங்கு அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து அஷ்டமா சித்தி வழங்கி திருப்புகழ் பாடச் செய்த தலமாக விளங்கி வருகிறது.
இங்கு மலைமேல் முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் ஆண்டுதோறும் இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா, கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கமாகும். இதில் வைகாசி திருவிழாவானது 11 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு வைகாசி திருவிழாவானது நேற்று காலை சுமார் 11.35 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி (முருகன்) வள்ளி, தெய்வானைக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக தீபாரதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமி முன்பு உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் முருகன் கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலாவானது அடுத்த 11 நாட்களுக்கு நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழச்சியாக வரும் ஜூன் 12 -ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்பட்டு 4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைகிறது. அதனை தொடர்ந்து 13-ம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 14-ம் தேதி விடையாற்றியுடன் வைகாசி திருவிழா நிறைவடைகிறது.
விழா ஏற்ப்பாடுகளை புதுக்கோட்டை தேவஸ்தான இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவாச்சரியர்கள், மண்டகபடிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துவருகின்றனர்.
- புதுக்கோட்டை அருகே குளிக்க சென்ற மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த வாலிபர் நகையை பறித்தார்.
- மூதாட்டியிடம் இருந்த நகையை பறித்த மாரிமுத்து மூதாட்டியின் காது, மூக்கு, கழுத்தையும் அறுத்துவிட்டு தப்பி சென்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கிருஷ்ணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி ராமாயி. இவரது கணவர் தங்கப்பா பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.
இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்த நிலையில் குடும்பத்தினருடன் ராமாயி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை ராமாயி தனது ஊருக்கு அருகாமையில் உள்ள கிருஷ்ணம்பட்டியில் உள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள பம்புசெட்டில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த கிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (33) என்பவர் ராமாயியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் இருந்த நகையை பறித்த மாரிமுத்து மூதாட்டியின் காது, மூக்கு, கழுத்தையும் அறுத்துவிட்டு நகையை பறித்து சென்றார்.
இதில் காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த உறவினர்கள் ராமாயியை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து ராமாயி கூறியுள்ளார்.
இது குறித்து மழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த ராமாயியின் உறவினர்கள் அவரை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராமாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன் பின்னர் ராமாயியின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த மாரிமுத்துவை கைது செய்த மழையூர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான மாரிமுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டாலும், அவர் கட்டிட வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மரவாமதுரை, வார்ப்பட்டு, மேலத்தானியம்,வாழைக்குறிச்சி, நல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள தன்னார்வலர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரால் பேரிடர் மேலாண்மை குறித்து நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதில் தீயணைப்பு படையினர் ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று முகாம் அமைத்து தன்னார்வலர்களுக்கு பேரிடர்காலங்களில் எவ்வாறு நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது என்று தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன
நிறைவு நாளில் பொன்னமராவதி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வட்டாட்சியர் ஜெயபாரதி, உள்ளிட்ட வருவாய்த்துறையினர்கள் கலந்து கொண்ட பேரிடர்மேலாண்மை பயிற்சியில்,
தன்னார்வலர்கள் தாங்கள் கற்றவற்றை அலுவலர்கள் முன் செய்து காண்பித்தனர். இதனை கோட்டாட்சியர் வெகுவாக பாராட்டினார். பின்னர் பயிற்சி பெற்ற 245 நபர்களுக்கும் அரசின் சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது.
- மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து ஆலங்குடியில் பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன் மூர்த்தி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் கொண்டாடப்பட்டடது.
இதில் ஆலங்குடி நகரில் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தலைவர் வில்லன்துரை, பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் இளஞ்செழியன், சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன் மூர்த்தி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநில தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆலங்குடி காவல் நிலையம், ஆலங்குடி பேருந்து நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் இனிப்புகள் வழங்கி கொண்ாடினர்.
அத்துடன் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் 8-வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி மத்திய அரசின் நலத்திட்டங்கள் அடங்கிய பத்திரிகை செய்தி மற்றும் பொதுமக்களிடம் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கீழநெம்மகோட்டையை சேர்ந்த பாஸ்கர் ( வயது 47 ). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.
இவர் ஆலங்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தள்ளுவண்டி மூலம் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார்.
அவருக்கு கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பாஸ்கர் விஷ மருந்தை குடித்து விட்டு, ஆலங்குடி அருகில் மீனாட்சிபுரம் பிரிவு ரோட்டில் சாலையோரம் மயங்கி விழுந்து கிடந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆலங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ேபாலீசார் விரைந்து சென்று பாஸ்கரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






