என் மலர்
நீங்கள் தேடியது "MERCHANT SUICIDE BY DRINKING POISON"
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கீழநெம்மகோட்டையை சேர்ந்த பாஸ்கர் ( வயது 47 ). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.
இவர் ஆலங்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தள்ளுவண்டி மூலம் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார்.
அவருக்கு கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பாஸ்கர் விஷ மருந்தை குடித்து விட்டு, ஆலங்குடி அருகில் மீனாட்சிபுரம் பிரிவு ரோட்டில் சாலையோரம் மயங்கி விழுந்து கிடந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆலங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ேபாலீசார் விரைந்து சென்று பாஸ்கரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






