என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு அரசின் சான்றிதழ்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மரவாமதுரை, வார்ப்பட்டு, மேலத்தானியம்,வாழைக்குறிச்சி, நல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள தன்னார்வலர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரால் பேரிடர் மேலாண்மை குறித்து நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதில் தீயணைப்பு படையினர் ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று முகாம் அமைத்து தன்னார்வலர்களுக்கு பேரிடர்காலங்களில் எவ்வாறு நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது என்று தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன
நிறைவு நாளில் பொன்னமராவதி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வட்டாட்சியர் ஜெயபாரதி, உள்ளிட்ட வருவாய்த்துறையினர்கள் கலந்து கொண்ட பேரிடர்மேலாண்மை பயிற்சியில்,
தன்னார்வலர்கள் தாங்கள் கற்றவற்றை அலுவலர்கள் முன் செய்து காண்பித்தனர். இதனை கோட்டாட்சியர் வெகுவாக பாராட்டினார். பின்னர் பயிற்சி பெற்ற 245 நபர்களுக்கும் அரசின் சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது.






