என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEW GALLERY OPENING"

    • சிவன் கோவில் எதிரில் புதியதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
    • ரூ. 7.5 லட்சம் செலவில் கட்டப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவ ரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பொது நிதியிலிருந்து ரூ. 7.5 லட்சம் செலவில் திருவரங்குளம் சிவன் கோவில் எதிரில் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

    திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் கோகுலகிருஷ்ணன் முன்னிலையில், தமி ழ்நாடு சுற்றுச்சூழல் இளைஞர் நலன் விளையாட்டு துறை

    அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் கலந்துகொண்டு கலையரங்கத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் திருவரங்குளம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே பி கே தங்கமணி, திருவரங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    அனைவரையும் திருவரங்குளம் ஊராட்சி மன்றத் தலை வர் மகேஸ்வரி ஆறுமுகம் வரவேற்றார். துணைத்தலை வர் ஐயாத்துரை ரங்கநாயகி நன்றி கூறினார்.


    ×