என் மலர்
நீங்கள் தேடியது "கமலாயி கோவிலில்"
- கமலாயி கோவிலில் முருகனாக வழிபட்டு வந்ததது சமணர் சிலை என தெரியவந்தது.
- தொல்லியல்துறை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தினர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் புள்ளான்விடுதி கமலாயி கோவிலில் முருகனாக வழிபட்டு வந்ததது சமணர் சிலை என தெரியவந்தது.
புள்ளான்விடுதியில் உள்ள கமலாயி அம்மன் கோவிலில் உள்ள முருகனாக வழிபட்டு வந்த சிலையானது சற்று மாறுபட்ட நிலையில் இருந்துள்ளது. இது குறித்து தகவலின் பேரில், புதுக்கோட்டை தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்களான பாண்டியன், இந்திரஜித் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதில், அந்த சிலையானது சமணர் சிற்பம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பாண்டியன், இந்திரஜித் ஆகியோர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமணர் சிலைகள் கண்டறியப்பட்டிருந்தாலும்,
இங்குள்ள சிலை மட்டுமே நின்ற நிலையில் உள்ளது. சுமார் 20 செ.மீட்டர் உயரம் உள்ள இந்த சிலையின் இடது மற்றும் வலது பக்கத்தில் தலா ஒரு குத்துவிளக்கு, சாமரம் உள்ளது. மேலும் தலைக்கு மேல் முக்குடையும் உள்ளது. இந்த சிலையை முருகன் சிலை என்று பொதுமக்கள் இது நாள் வரை வழிபட்டு வந்துள்ளனர் என்றனர்.






