என் மலர்
பெரம்பலூர்
வேப்பந்தட்டை அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 37). இவரது மனைவி புஷ்பா(27). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புஷ்பா செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த சுரேஷ் சந்தேகப்பட்டு, யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டு புஷ்பாவை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் புஷ்பா படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த வி.களத்தூர் போலீசார், சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 9 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தலா 73 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீட்டின் கதவை உடைத்து நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி பார்வதி (வயது 60). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனது மகள் கயல்விழி வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீடு திரும்பிய பார்வதி வீட்டு கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 5-ம் கட்ட மாபெரும் சிறப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 5-ம் கட்ட மாபெரும் சிறப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராமங்களில் 207 இடங்கள் என மொத்தம் 240 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களில் 1,440 பேர் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 80 ஆயிரத்து 93 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போட தகுதி வாய்ந்தவர்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 200 பேரில், முதல் தவணை தடுப்பூசி 2 லட்சத்து 97 ஆயிரத்து 170 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 89 ஆயிரத்து 784 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு வீட்டிலும் தடுப்பூசி போட தகுதி வாய்ந்தவர்களில், இதுவரை தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு, தவணை காலம் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் மறக்காமல், மறுக்காமல் தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு, நமது பெரம்பலூரை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும், என்றார்.
பெரம்பலூரில் வீட்டின் பின்பக்க கதவை அறுத்து பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் 9-வது வார்டுக்கு உட்பட்ட நான்கு ரோடு துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் மகபூர் அலி (வயது 37). இவருக்கு நூர்ஜகான் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். துபாயில் வேலை பார்த்து வந்த மகபூர் அலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சொந்த ஊர் திரும்பினார். இதையடுத்து நூர்ஜகான் தனது கணவர், குழந்தைகளுடன் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு நடேசன் 2-வது தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் வசித்து வருகிறார். இதனால் மகபூர் அலியின் சொந்த வீடு பூட்டியே கிடந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் மகபூர் அலியின் சொந்த வீட்டின் பின்பக்க வாசலில் உள்ள மரக்கதவின் ஒரு புறம் ஆக்சா பிளேடு மூலம் அறுக்கப்பட்டிருப்பதாக அக்கம், பக்கத்தினர் நூர்ஜகானுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நூர்ஜகான் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் வெள்ளி கொலுசு, கை சங்கிலி உள்ளிட்ட கால் கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின்பக்க வாசலின் கதவை அறுத்து, அதன் வழியாக உள்ளே புகுந்து பணம், வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆலத்தூர் அருகே 2 வீடுகளில் 16 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதியின் மகன் செந்தில்(வயது 25). இவரது வீட்டின் ஒரு பகுதியில் தாயுடன் வசித்து வருகிறார். மற்றொரு பகுதியில் பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த வீட்டின் பூட்டை கடப்பாரையால் உடைத்து, அங்கிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
இதேபோல் அதே ஊரின் கிழக்குத்தெருவில் வசித்து வருபவர் மணிவேல்(40). இவர் அப்பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டின் கதவை மர்மநபர்கள் உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து இன்ஸ்பெக்டர் ஜெயராமனிடம் தீவிர விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார். ஒரே நாள் இரவில் 2 வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பெரியாண்டர் கோவிலில் 13 சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு அருகே, அந்த கோவில்களின் தல வரலாற்றின்படி மூலஸ்தான கோவிலான பெரியசாமி மலைக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 சாமி சிலைகளை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சிறுவாச்சூர் பேருந்து நிலையம் அருகே பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 13 சாமி சிலைகள் உள்ளன. இந்த கோவிலுக்கு வழக்கம் போல் இன்று காலை சாமி கும்பிட பக்தர்கள் சென்றனர். அப்போது கோவிலில் உள்ள சுடு களிமண்ணால் செய்யப்பட்ட 13 சிலைகளும் உடைக்கப்பட்டு, சேதமடைந்து கிடந்தை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்ததும் ஊர் பொதுமக்கள் கோவிலின் முன்பு குவியத் தொடங்கினர். பின்பு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவில்களில் உள்ள சாமி சிலைகளை உடைக்கும் மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதித்தது.
இதனையறிந்து விரைந்து வந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அதிகாரி, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இந்த அசம்பாவித செயல்களில் ஈடுபடும் மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
சிறுவாச்சூர் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு அருகே, அந்த கோவில்களின் தல வரலாற்றின்படி மூலஸ்தான கோவிலான பெரியசாமி மலைக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 சாமி சிலைகளை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சிறுவாச்சூர் பேருந்து நிலையம் அருகே பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 13 சாமி சிலைகள் உள்ளன. இந்த கோவிலுக்கு வழக்கம் போல் இன்று காலை சாமி கும்பிட பக்தர்கள் சென்றனர். அப்போது கோவிலில் உள்ள சுடு களிமண்ணால் செய்யப்பட்ட 13 சிலைகளும் உடைக்கப்பட்டு, சேதமடைந்து கிடந்தை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்ததும் ஊர் பொதுமக்கள் கோவிலின் முன்பு குவியத் தொடங்கினர். பின்பு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவில்களில் உள்ள சாமி சிலைகளை உடைக்கும் மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதித்தது.
இதனையறிந்து விரைந்து வந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அதிகாரி, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இந்த அசம்பாவித செயல்களில் ஈடுபடும் மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
சிறுவாச்சூர் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை (வயது 46). இவரது கணவர் அண்ணாதுரை, மகன் வீரமணி ஆகியோர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். மகள் ஷோபனாவுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அஞ்சலை நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு ஆத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது.
இது குறித்து கை.களத்தூர் போலீசில் அஞ்சலை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை (வயது 46). இவரது கணவர் அண்ணாதுரை, மகன் வீரமணி ஆகியோர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். மகள் ஷோபனாவுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அஞ்சலை நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு ஆத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது.
இது குறித்து கை.களத்தூர் போலீசில் அஞ்சலை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4-வது கட்ட சிறப்பு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
பெரம்பலூர்:
கொரோனா வைரசின் 3-ம் அலை வராமல் தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நேற்று 4-வது கட்டமாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன்படி 4-வது கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 198 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 300 இடங்களிலும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
முகாமில் கோவிஷீல்டு, கோேவக்சின் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுச்சென்றனர்.
சில முகாம்களில் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுச்சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆய்வு செய்தார்.
ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் நடந்த முகாமில் ஏராளமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆதிச்சனூர், சுத்தமல்லி, வெண்மான்கொண்டான், நாயகனைப்பிரியாள், தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபுரந்தான், சாத்தாம்பாடி, முத்துவாஞ்சேரி ஆகிய இடங்களில் கலெக்டர் ரமணசரஸ்வதி ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தடுப்பூசி பணிகளை கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் பயனாளிகளுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன், தா.பழூர் ஊராட்சி தலைவர் கதிர்வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 9 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அரியலூர் மாவட்டத்தில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 89 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 95 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 386 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 419 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 627 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
குன்னம் அருகே தாய் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேள்விமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தளபதி. இவரது மகள் தர்ஷினி (வயது 15). இவர் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தர்ஷினி வீட்டு வேலை செய்யாமல் இருந்து வந்ததாகவும், இதனால் அவரது தாய் சித்ரா, தர்ஷினியை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தர்ஷினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த எலி பசையை(விஷம்) தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து சித்ரா கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 6 ஆயிரத்து 358 பேரில், இதுவரை 5 ஆயிரத்து 180 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 6 ஆயிரத்து 336 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை 2 லட்சத்து 61 ஆயிரத்து 932 பேருக்கும், 2-ம் தவணை 66 ஆயிரத்து 403 பேருக்கும், இதேபோல் கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணை 24 ஆயிரத்து 210 பேருக்கும், 2-ம் தவணை 11 ஆயிரத்து 510 பேருக்கும் என மொத்தம் 3 லட்சத்து 64 ஆயிரத்து 55 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 6 ஆயிரத்து 358 பேரில், இதுவரை 5 ஆயிரத்து 180 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 ஆயிரத்து 702 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.






