என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • வங்கி கூட்டமைப்புகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.8½ கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
    • வங்கிகளுக்கு செயல்திறன் விருதுகளை வழங்கினார்


    பெரம்பலூர்

    நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதபெருவிழாவினை முன்னிட்டு வங்கி கூட்டமைப்புகளின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார். விழாவில் இந்தியன் வங்கி உள்ளிட்ட 8 வங்கிகளின் மூலம் மொத்தம் 148 பயனாளிகளுக்கு ரூ.8.64 கோடி மதிப்பிலான கடன் உதவி தொகைக்கான காசோலையினை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து 2021-22-ம் நிதியாண்டில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு செயல்திறன் விருதுகளை கலெக்டர் வழங்கினார்.


    • கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிப்பதற்காக பெட்ரோல்-மண்எண்ணெயை கொண்டு வந்திருந்த ஒரு குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து விசாரணை நடத்தினர்


    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ஒரு குடும்பத்தினர் வந்தனர். அவர்கள் திடீரென்று தீக்குளிக்கப்பதற்காக குளிர்பான காலி பாட்டில்களில் கொண்டு வந்திருந்த பெட்ரோல் மற்றும் மண்எண்ணெயை கையில் எடுத்தனர்.

    இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஓடிச்சென்று அவர்களிடம் இருந்த பெட்ரோல், மண்எண்ணெய் ஆகியவற்றை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர், வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை அம்பேத்கர் தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 42) என்பதும், அவருடன் வந்திருந்தவர்கள் அவருடைய மனைவி லதா(32), மகன் சிவமுகுந்தன்(13), மகள்கள் ஹன்சிகா(10), நிஷாந்தினி(7) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

    இளையராஜா தழுதாழை கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கடை அருகே சுமார் 300 மீட்டர் தூரத்தில் தனக்கு சொந்தமான காட்டு நிலத்தில் பெட்டிக்கடையும், மேலும் இட்லி, பனியாரம், தட்டை பயறு உள்ளிட்டவையும் விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் டாஸ்மாக்கடை அருகே சட்ட விரோதமாக மதுபான கூடம் (பார்) நடத்தி வருபவரின் துண்டுதலின்பேரில், முக்கிய கட்சியை சேர்ந்தவர்கள் இளையராஜாவை அந்த இடத்தில் கடை வைக்கக்கூடாது என்று கூறி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

    சம்பவத்தன்று அவர்கள் இளையராஜாவை தாக்கியும், கடையை அடித்து நொறுக்கி விட்டனராம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதே இடத்தில் இளையராஜா கடை வைத்து நடத்துவதற்கு நடத்த நடவடிக்கை எடுக்கவும், அடித்து நொறுக்கப்பட்ட கடையை சரி செய்யவும்,

    தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதற்காக இளையராஜா குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல், மண்எண்ணெய் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது


    • வேத மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
    • நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செய்து சாமி கும்பிட்டனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் வேத மாரியம்மன் கோவில், ஆலந்துராயி அம்மன் கோவில், அடைக்களம்காத்தவர் ஆகிய கோவில்கள் உள்ளது. இக்கோவில்களில் திருவிழா நடத்துவது என விழாகுழுவினர் முடிவு செய்து

    கடந்த 13 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி குடி அழைத்தல் மற்றும் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. மேலும் பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செய்து சாமி கும்பிட்டனர்.

    தொடர்ந்து மங்கள இசையுடன் சுவாமி திருவீதி உலா ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை சென்றடைந்தது. முடிவில் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது.




    • சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    • சிறுமியை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்


    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சமீபத்தில் சிறுமியின் ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவிற்கு குன்னம் அருகே உள்ள சாத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் பரத்(வயது 23) என்பவர் வந்துள்ளார்.

    அங்கு சிறுமிக்கும், பரத்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறுமியிடம் தொலைபேசி எண்ணை பெற்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். நாளடைவில் சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி சிறுமியை வீட்டை விட்டு வருமாறு கூறி வெளியூருக்கு கடத்திச் சென்றார்.

    இந்நிலையில் சிறுமியின் தந்தை இதுகுறித்து குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குன்னம் போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் இருவரும் சென்னையில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சென்னை விரைந்தனர்.

    அங்கு இருவரையும் பிடித்து குன்னம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தி சிறுமியை பெண்கள் காப்பகத்திலும் சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக பரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர்.


    • சிறுவாச்சூர் மேம்பால பணியை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இப்பணி நடைபெறுகிறது.

    பெரம்பலூர்:

    திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் புகழ்பெற்ற புண்ணிய தளமான ஸ்ரீமதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மாநில முழுவதிலிருந்தும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    அப்போது அச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அங்கு மேம்பாலம் அமைக்கவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று அவ்வழியில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி ரூ. 13 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதையடுத்து கடந்த 2018 ஆண்டு மே மாதம் 14ம்தேதி சிறுவாச்சூரில் தரைவழி மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பாலம் 12 மீட்டர் அகலம், 5.50 மீட்டர் உயரம், வடக்கே 161.30 மீட்டர் நீளம், தெற்கே 355.95 மீட்டர் மற்றும் 402.56 மீட்டர் நீளமும் கொண்டதாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

    இப்பணியை பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணி நடைபெறுவது குறித்து நெடுஞ்சாலை அலுவலர்களிடம் கேட்டறிந்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.


    • காங்கிரஸ் அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல், வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் மனோகரன், நல்லதம்பி, மாவட்ட பொருளாளர் அய்யம்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கட்சியின் மேலிட பார்வையாளரும், தெலுங்கானா மாநில செய்தி தொடர்பாளருமான நோகா கிரண் யாதவ் கலந்து கொண்டு அமைப்பு தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசுகையில்,

    நடைபெறவுள்ள கட்சியின் அமைப்பு தேர்தலுக்கான ஆயுத்தப்பணிகளை தொடங்குவது, தேர்தல் நடத்தும் தேர்தல் விதிமுறைகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் ஒனிறய தலைவர்கள் சின்னசாமி, பத்தோதீன், நகர தலைவர் தேவராஜ், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பாலமுருகன், சட்டமன்ற இளைஞரணி துணை தலைவர் விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
    • பொது மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் கொத்தடிமைகள் முறை ஒழிப்பு குறித்து திடீராய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாண்டியன் மேற்பார்வையில் பெரம்பலூர் நகரில் குழந்தை தொழிலாளர் ஆணையர் மூர்த்தி, குழந்தை தொழிலாளர் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் மருதமுத்து, ஏட்டு தேவி மற்றும்

    அலுவலர்கள் பாலாரியாஷினி, ரேகா ஆகியோர் கொண்ட குழுவினர் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், நான்குரோடு, பாலக்கரை, சிறுவாச்சூர் போன்ற பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியும், பொது மக்களிடம் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • ரஞ்சன்குடி கோட்டையை சீரமைக்க கோரி மனு அளிக்கப்பட்டது
    • புத்தக கண்காட்சி நடத்தவும் மனு அளித்தனர்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில் பெரம்பலூர் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ளது ரஞ்சன்குடி கோட்டை. 17 வது நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

    மசூதியும், கோயிலும் உள்ளடக்கிய இக்கோட்டை சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாகவும் உள்ளது

    கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழையால் இக்கோட்டையின் ஒரு பகுதி சரிந்து விழுந்துவிட்டது.

    ஆறுமாதங்கள் கடந்த பின்பும் சிதிலமடைந்த பகுதி சரி செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் மீண்டும் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனால் சேதமடைந்துள்ள ரஞ்சன்குடி கோட்டையை சீர்செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    சமூகநீதி படைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் தாஹிர் பாஷா தலைமையில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.




    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
    • முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி துவங்கியது.

    பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில்,

    அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன்படி பெரம்பலூர் ஒன்றியத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு எசனை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்திற்கு குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,

    ஆலத்தூர் ஒன்றியத்திற்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த பயிற்சி 5 நாட்கள் நடைபெறுகிறது என தெரிவித்தார். இந்த பயிற்சியில் இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 3ம்வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 551 பேர் கலந்து கொண்டுள்ளனர்.


    • உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
    • மரக்கன்றுகள் நடும் விழாவும் நடந்தது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா மற்றும் இளைஞர் மன்றத்தின் சார்பில் கொட்டரை கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பரஞ்சோதி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் திருமுருகன், துணை தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா மரக்கன்று நடுதலை தொடங்கிவைத்தார்.

    சிறப்பு விருந்தினராக தத்தனூர் எம்ஆர்சி கல்விநிறுவன செயலாளர் கமல்பாபு கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில் 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆதனூர் அரசு டாக்டர் முத்துசாமி, கிராம முக்கியஸ்தர்கள் பொன்னுசாமி, தர்மதுரை, மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பாஞ்சாலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


    • கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பட்டா வழங்க கோரி தீக்குளிக்க முயன்றார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் வடக்குமாதவி ஏரிக்கரையை சேர்ந்த ரெங்கராஜ் மகன் சந்துரு (வயது54). இவர்கலெக்டர் அலுவலக வளாக்ததில் தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார், அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்து போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து அவரிடம் விசாரித்தனர்.

    சந்துரு கூறுகையில், கடந்த 1972ம் ஆண்டு பெரம்பலூர் திருநகரில் குடிசை வீடு கட்டி வசித்து வந்தோம். அந்த இடத்தை பிஎஸ்என்எல் அலுவலகத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது எனது அம்மா கனகத்தம்மாள் பெயரில் உள்ள நிலமும் கையகப்படுத்தப்பட்டது.

    அதற்கு பதிலாக வடக்கு மாதவியில் 3 சென்ட் நிலம் கனகத்தம்மாள் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தோம் எனது தாய் 2010ல் இறந்து விட்டார்.

    அதன் பிறகு பிழைப்புக்காக சென்னை சென்று விட்டேன். எனது தாய் பெயரில் உள்ள இடத்தில் மாணிக்கத்தம்மாள் என்பவர் நத்தம் பட்டா வாங்கி கொண்டு அந்த இடத்தில் தற்போது ஆறுமுகம் மனைவி லெட்சுமி என்பவர் வீடு கட்டி வருகிறார்.

    எனவே மாணிக்கத்தம்மாள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்துவிட்டு எனது பெயரில் பட்டா வழங்கவேண்டும் என கூறினார். இந்த தீக்குளிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருவோடு ஏந்தி விவசாயிகள் தர்ணா போராட்டம்
    • கலெக்டரை சந்திக்க விடாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்காக கொட்டரை, ஆதனூர் கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.

    நீர்த்தேக்கத்தின் மறுகரையில் உள்ள நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்துதரக்கோரி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலத்துக்கு திரண்டு வந்தனர்.

    அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் 5 பேர் மட்டுமே கலெக்டரை சந்திக்க செல்ல வேண்டும் என தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு கைகளில் திருவோடு ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×