என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டம்
- காங்கிரஸ் அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
- வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல், வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் மனோகரன், நல்லதம்பி, மாவட்ட பொருளாளர் அய்யம்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மேலிட பார்வையாளரும், தெலுங்கானா மாநில செய்தி தொடர்பாளருமான நோகா கிரண் யாதவ் கலந்து கொண்டு அமைப்பு தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசுகையில்,
நடைபெறவுள்ள கட்சியின் அமைப்பு தேர்தலுக்கான ஆயுத்தப்பணிகளை தொடங்குவது, தேர்தல் நடத்தும் தேர்தல் விதிமுறைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் ஒனிறய தலைவர்கள் சின்னசாமி, பத்தோதீன், நகர தலைவர் தேவராஜ், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பாலமுருகன், சட்டமன்ற இளைஞரணி துணை தலைவர் விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






