என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
    X

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
    • முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி துவங்கியது.

    பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில்,

    அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன்படி பெரம்பலூர் ஒன்றியத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு எசனை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்திற்கு குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,

    ஆலத்தூர் ஒன்றியத்திற்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த பயிற்சி 5 நாட்கள் நடைபெறுகிறது என தெரிவித்தார். இந்த பயிற்சியில் இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 3ம்வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 551 பேர் கலந்து கொண்டுள்ளனர்.


    Next Story
    ×