என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "THE YOUTH WHO KIDNAPPED THE GIRL WAS ARRESTED"

    • சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    • சிறுமியை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்


    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சமீபத்தில் சிறுமியின் ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவிற்கு குன்னம் அருகே உள்ள சாத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் பரத்(வயது 23) என்பவர் வந்துள்ளார்.

    அங்கு சிறுமிக்கும், பரத்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறுமியிடம் தொலைபேசி எண்ணை பெற்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். நாளடைவில் சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி சிறுமியை வீட்டை விட்டு வருமாறு கூறி வெளியூருக்கு கடத்திச் சென்றார்.

    இந்நிலையில் சிறுமியின் தந்தை இதுகுறித்து குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குன்னம் போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் இருவரும் சென்னையில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சென்னை விரைந்தனர்.

    அங்கு இருவரையும் பிடித்து குன்னம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தி சிறுமியை பெண்கள் காப்பகத்திலும் சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக பரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர்.


    ×