என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவாச்சூர் மேம்பால கட்டும் பணி - பாராளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
    X

    சிறுவாச்சூர் மேம்பால கட்டும் பணி - பாராளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

    • சிறுவாச்சூர் மேம்பால பணியை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இப்பணி நடைபெறுகிறது.

    பெரம்பலூர்:

    திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் புகழ்பெற்ற புண்ணிய தளமான ஸ்ரீமதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மாநில முழுவதிலிருந்தும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    அப்போது அச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அங்கு மேம்பாலம் அமைக்கவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று அவ்வழியில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி ரூ. 13 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதையடுத்து கடந்த 2018 ஆண்டு மே மாதம் 14ம்தேதி சிறுவாச்சூரில் தரைவழி மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பாலம் 12 மீட்டர் அகலம், 5.50 மீட்டர் உயரம், வடக்கே 161.30 மீட்டர் நீளம், தெற்கே 355.95 மீட்டர் மற்றும் 402.56 மீட்டர் நீளமும் கொண்டதாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

    இப்பணியை பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணி நடைபெறுவது குறித்து நெடுஞ்சாலை அலுவலர்களிடம் கேட்டறிந்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.


    Next Story
    ×