என் மலர்tooltip icon

    நீலகிரி

    வால்பாறையில் நள்ளிரவில் நடந்த இந்த தீ விபத்தில் 8 வீடுகளிலும் இருந்த மின் சாதன பொருட்கள் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
    வால்பாறை:

    வால்பாறை அருகில் உள்ள தனியார் காபி நிறுவனத்திற்கு சொந்தமான பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம் மற்றும் காபி தோட்டம் உள்ளது.

    இந்த தேயிலை மற்றும் காபித் தோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகம் சார்பில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 8 குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று காலை அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்தனர். பின்னர் இரவில் சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்றனர்.

    நள்ளிரவு நேரத்தில் அந்த பகுதியில் வசிக்ககூடிய தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் வீட்டிலிருந்து கூரை வழியாக கரும்புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கி கரும்புகை அதிகமாக வந்த வண்ணம் இருந்தது.

    இதனால் அதிர்ச்சியான ராஜேந்திரன் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியில் ஓடிவந்து சத்தம் போட்டனர்.

    அவர்களது சத்தத்தை கேட்டதும் அருகே வசிக்க கூடிய மக்கள் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது வீட்டில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயை அணைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.

    ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி அருகே உள்ள 7 வீடுகளுக்கும் பரவியது. அந்த வீடுகளிலும் தீ பற்றி எரிந்தது.

    இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயை அணைக்க முயன்றும் முடியாததால் சம்பவம் குறித்து எஸ்டேட் நிர்வாகத்தினர் வால்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 3 வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறி மேலும் தீ பரவி எரிந்தது.

    இதனால் தீயணைப்பு வீரர்களும் எஸ்டேட் தொழிலாளர்களும் தீயை அணைக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். 3 மணி நேரம் போராடிய தீயணைப்பு துறையினரும் எஸ்டேட் தொழிலாளர்களும் நள்ளிரவு 2 மணியளவில் தீயை அணைத்தனர்.

    நள்ளிரவில் நடந்த இந்த தீ விபத்தில் 8 வீடுகளிலும் இருந்த மின் சாதன பொருட்கள் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. வால்பாறை போலீசாரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரித்தனர். தொடர்ந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இன்று காலை தீ விபத்து நடந்த பகுதியில் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு மக்களிடம் தீ விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

    சுற்றுலா மையங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.
    ஊட்டி:

    மலைமாவட்டமான நீலகிரியில் ஏராளமான சுற்றுலா மையங்கள், இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்கள் உள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

    தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் அதை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் நடவடிக்கையாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்ற சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், சிம்ஸ் பூங்கா போன்ற அனைத்து சுற்றுலா மையங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    இன்று காலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பூங்காவுக்குள் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முதல் தவணை செலுத்தியிருந்தவர்களும், தடுப்பூசி செலுத்தாதவர்களையும் ஊழியர்கள் திருப்பி அனுப்பினர்.

    இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன், தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டு திரும்பி சென்றனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் பார்வை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மாலை 3 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.
    ஊட்டி:

    மலைமாவட்டமான நீலகிரியில் ஏராளமான சுற்றுலா மையங்கள், இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்கள் உள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

    தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் அதை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் நடவடிக்கையாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்ற சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், சிம்ஸ் பூங்கா போன்ற அனைத்து சுற்றுலா மையங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    இன்று காலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பூங்காவுக்குள் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முதல் தவணை செலுத்தியிருந்தவர்களும், தடுப்பூசி செலுத்தாதவர்களையும் ஊழியர்கள் திருப்பி அனுப்பினர்.

    இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன், தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டு திரும்பி சென்றனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    நீலகிரியில் நாள்தோறும் 1500 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 1500 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களை சுகாதார துறை, வருவாய் மற்றும் போலீசாரும் இணைந்து கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர். 

    மாநில அரசு நேற்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  என சில கட்டுப்பாடுகளை விதித்தது. நிலைமையை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.  

    இதுபற்றி  சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில் மாநில அரசு உத்தரவுப்படி  கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊட்டியில் 250, கூடலூரில் 200, குன்னூரில்  200, கோத்தகிரி  100, என 750படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளது  என்றார்.
    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய தனியார் பஸ் டிராவல்ஸ் உரிமையாளருக்கு நகராட்சி சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    ஊட்டி:

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, நீலகிரியில், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் தட்டு, வனவிலங்குகள் நலன் கருதி, பாலியஸ்டர் மற்றும் நைலான் பைகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதன்படி 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

    விதிகளை மீறி விற்போரை, அந்தந்த உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கண்காணித்து, அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது, குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த தடை உள்ளது

    இருப்பினும் சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக வரும் புகாரின் பேரில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் ஒன்றில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில்  நகராட்சி சூகாதார அலுவலர் மருத்துவர் ஸ்ரீதரன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள், அந்த தனியார் பஸ் டிராவல்ஸ் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதற்கிடையே நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என்றும், நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில், மேற்கண்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாநில எல்லைகளிலும் மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
    நீலகிரி மாவட்டத்தில் 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் 33 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் 33 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அதில் 15 குழந்தைத் திருமணங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்படி, பெண்ணின் திருமண வயது 18, ஆணின் திருமண வயது 21-ம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    இச்சட்டத்தின்படி குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர், பாதுகாவலர், மணமகன், மதத் தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அமைப்புகள், திருமண தரகர் அனைவரும் குற்றம் செய்தவராக கருதப்படுகின்றனர்.

    மேலும், இக்குற்றம் குழந்தை திருமணத்தில் ஈடுபடும் செயலானது பிடியாணையின்றி கைது செய்வது மற்றும் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும். 2 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை அல்லது ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    எனவே, நீலகிரி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக இருந்தால், மாவட்ட சமூகநல அலுவலரை 96559 88869 என்ற எண்ணிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 97153 10135 என்ற எண்ணிலும், சைல்டு லைன் அமைப்பினரை 1098 என்ற எண்ணிலும், ஒருங்கிணைந்த சேவைமையத்தை 99430 40474 என்ற எண்ணிலும், பெண்களுக்கான இலவச உதவி எண் 181லும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
    குன்னூர்:

    கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த மாதம் 8-ந் தேதி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் 14 பேர் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தனர்.

    ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் சென்றபோது, விபத்தில் சிக்கியது. இதில் முப்படை தலைமை தளபதி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ராணுவத்தினர், தீயணைப்புத்துறையினர் இணைந்து, ஹெலிகாப்டரின் உள்ள பாகங்களை மீட்கும் பணியில் துரித கதியில் ஈடுபட்டனர். முதலில் சிறிய பாகங்களை மீட்டனர். பின்னர் பெரிய பாகங்களை வெட்டி எடுத்தனர். பின்னர் மீட்கப்பட்ட பாகங்களை சூலூர் விமானப்படை தளத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    19 நாட்களாக நடந்த மீட்புபணிக்கு பிறகு கடந்த 26-ந் தேதி நஞ்சப்பசத்திரம் பகுதி ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமா னோர் வந்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ வீரர்களுக்கு, நஞ்சப்பசத்திரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் நஞ்சப்பசத்திரம் பகுதிக்கு எம்.ஆர்.சி ராணுவ முகாம் அதிகாரிகள் வந்தனர். அவர்கள், அங்கு எந்த பகுதியில் நினைவுத்தூண் அமைக்கலாம் என்பது குறித்துஆய்வு மேற்கொண்டனர். மேலும், நினைவுத்தூண் அமைப்பதற்கு இடமும் அளவீடு செய்யப்பட்டது. விரைவில் அந்த பகுதியில் நினைவுத்தூண் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நீலகிரி மாவட்டத்தில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 686 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அம்ரித் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    ஊட்டி சட்டசபை தொகுதியில் 98,135 ஆண் வாக்காளர்கள், 1,07,283 பெண் வாக்காளர்கள் 6 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,05,424 வாக்காளர்கள் உள்ளனர். கூடலூர்(தனி) சட்டசபை தொகுதியில் 92,955 ஆண் வாக்காளர்கள், 97,914 பெண் வாக்காளர்கள் 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என 1,90,871 வாக்காளர்களும், குன்னூர் தொகுதியில் 91,065 ஆண் வாக்காளர்கள், 1,00,323 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 1,91,391 வாக்காளர்கள் உள்ளனர்.

    நீலகிரியில் ஊட்டி, கூடலூர், குன்னூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் 2,82,155 ஆண் வாக்காளர்களும், 3,05,520 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 11 பேர் என  மொத்தம் 5,87,686 வாக்காளர்கள் உள்ளனர்.  ஆண்களை விட பெண்கள் 23,365 பேர் அதிகமாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றனர். கடந்த நவம்பர் 1-ந் தேதி முதல் ஒரு மாதம் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடந்தது. இதில் விண்ண ப்பங்கள் பெறப் பட்டு பரிசீலனை  மூலம் பட்டியலில் சேர்க்கப் பட்டன. 2,147 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 8,026 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர்.


    கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது, கூடுதலாக 5,879 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதில் 18 வயது பூர்த்தி  அடைந்த புதிய வாக்காளர்கள் அதிகம் பேர் இடம் பெற்றனர். ஊட்டி தொகுதியில் 239 வாக்குச்சாவடிகள், குன்னூர் தொகுதியில் 225 வாக்குச்சாவடிகள், கூடலூர் தொகுதியில் 222 வாக்குச் சாவடிகள்என மொத்தம் 686 வாக்குச் சாவடிகள்  உள்ளன. இவ்வாறு அவர் கூறினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) தனபிரியா, வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), சரவண கண்ணன்(கூடலூர்), தேர்தல் தனி தாசில்தார் புஷ்பாதேவி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான உணவகங்கள், ஓட்டல்கள் உள்ளன. தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாபயணிகள் குவிந்து வருகின்றனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் சில உணவகங்கள், ஓட்டல்களில் தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகள் வழங்குவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து ஊட்டி நகராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் நகராட்சி சுகாதார அதிகாரிகள்  சுகாதார அலுவலர் டாக்டர் ஸ்ரீதரன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர்.  இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர் ரத்னகுமார், சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தராஜன், நாதன் ஆகியோர் ஈடுபட்டனர். 
     
    டீக்கடை, ஓட்டல், பேக்கரி, மளிகை கடை, டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடந்தது. ஊட்டி  கிளப் சாலையில்  சுகாதாரமற்ற  நிலையில் உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த  உணவகத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தரமற்ற நிலையில் இருந்த உணவு பொருட்களை கைப்பற்றி அழித்தனர். 
     
    இது குறித்து  நகராட்சி சுகாதார அலுவலர்  ஸ்ரீதரன்  கூறுகையில், காலாவதியான பொருட்கள், கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. சுகாதாரமான உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். சில கடைகளில் தொடர்ந்து சுகாதாரமில்லாத உணவு வகை மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை உட்கொள்ளும் பொதுமக்களுக்கு கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

    எனவே, வணிகர்கள் சுகாதாரமான உணவு பொருட்கள், தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.கடைகள் மற்றும் ஓட்டல்களை  சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம்.  மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
    மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    ஊட்டி:

     பிளாஸ்டிக் பையின் பயன்பாடு சராசரியாக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ குறைந்தபட்சம் 100 முதல் 400 ஆண்டுகள். அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக் காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு துர்நாற்றம் வீசுவதற்கும், வெள்ளக்காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் முக்கிய காரணியாக உள்ளது.

    ஆட்கொல்லி நோய்களை பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்புகளை உருவாக்குகிறோம் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் பயன் இல்லை. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த பிளாஸ்டிக் பயன்பாடு  சமீபகாலமாக படிபடியாக அதிகரித்து வருகிறது. சாலையோர வனப்பகுதியில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதை  வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    சுற்றுலா தலங்கள் கொரோனா தொற்று காரணமாக, வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை இன்றி, சாலையோர வனங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குறைந்தன. தற்போது அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு உள்ளதால்  கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள், வெகுவாக வருகை அதிகரித்தது.

    இவர்கள் எடுத்து வரும் உணவை, சாலையோரங்களில் அமர்ந்து உண்டுவிட்டு, பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோர வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால் வனச் சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, மாநில நுழைவுவாயில் பகுதியில் உள்ள நீலகிரியில் பிளாஸ்டிக் தடை குறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதன் மூலமே இதனை தடுக்க முடியும். நீலகிரியில் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு வேதனை அளிக்கிறது என்றனர். 
    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முதற்கட்டமாக சால்வியா, டெல்பீனியம், பெஸ்டிமன், டிஜிட்டாலிஸ் போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் கோடைசீசனை முன்னிட்டு இந்த ஆண்டு நடைபெற உள்ள 124-வது கண்காட்சிக்காக வண்ண மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. இந்த பணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்தினர் தொடங்கி வைத்தார்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள 124-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல வண்ண மலர் செடிகளை கொண்டு மலர் பாத்திகளை அமைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    முதற்கட்டமாக சால்வியா, டெல்பீனியம், பெஸ்டிமன், டிஜிட்டாலிஸ் போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டில் சிறப்பம்சமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஜெரேனியம், சைக்ளமன், சினரேரியா, கிளக்ஸ்ஸீனியா, ரெனன்குஸ், பல புதிய ரக ஆர்னமென்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியா டிக் லில்லி, டேலியாக்கள், இன்கா மெரிகோல்டு, பிகோனியா உள்ளிட்ட 275 வகையான விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு மலர்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    நடவு செய்யப்படும் மலர் நாற்றுகளுக்கு பனியின் தாக்கம் ஏற்படாத வண்ணம் கோத்தகிரி மெலார் செடிகளை கொண்டு பாதுகாப்பு செய்யப்படும்.

    இந்த ஆண்டில் மலர் கண்காட்சியையொட்டி மலர் காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35 ஆயிரம் வண்ண மலர்த் தொட்டி செடிகள் அடுக்கி வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கலெக்டர் அம்ரித், ஊட்டி எம்.எல்.ஏ.கணேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்(பொறுப்பு) ஷிபிலா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கவர்னரின் வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் வரக்கூடிய சாலைகள், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று மாலை ஊட்டிக்கு வருகிறார்.

    இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளில் கவர்னர் உரையாற்றினார். அதன்பின்னர் அவர் பிற்பகலில் சென்னையில் இருந்து விமானத்தில் கோவைக்கு வருகிறார்.

    கோவையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் நீலகிரிக்கு பயணமாகும் கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு செல்கிறார். அங்கு 2 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    தொடர்ந்து 2 நாட்கள் ஊட்டியில் இருக்கும் கவர்னர், 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை ஊட்டியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு வருகிறார். அங்கு மேட்டுப்பாளையம், அரசு வனவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் கவர்னர் கலந்து கொள்கிறார்.

    கோவை, நீலகிரியில் 2 நாட்கள் நிகழ்ச்சியை முடித்து கொள்ளும் கவர்னர் ஆர்.என். ரவி அன்று மாலை கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.

    கவர்னரின் வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் வரக்கூடிய சாலைகள், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக கவர்னர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு சென்று விட்டு, திரும்பும் வழக்கம் இருந்து வந்தது. கடந்த மாதம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

    இதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் முக்கிய விருந்தினர்களின் பயண வழிகாட்டு நெறிமுறை புத்தகமான நீல புத்தகத்தில் மிக அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலையில் நீலகிரியில் வான்வழி பயணத்தை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் கவர்னர் ரவி சாலை மார்க்கமாகவே கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்கிறார்.
    ×