என் மலர்
நீலகிரி
- குரூப்-1 எழுத்து தோ்வு (குரூப்-1) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
- பறக்கும் படையினா் அவ்வப்போது தோ்வு மையங்களில் திடீா் சோதனை நடத்தினா்.
ஊட்டி,
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் வணிக வரி அலுவலா் உள்ளிட்ட பதவிக்கான நேரடி நியமன எழுத்து தோ்வு (குரூப்-1) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.எஸ்.சி.எம்.எம் மேல்நிலைப் பள்ளி, பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தோ்வு நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் 1,472 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 672 போ் மட்டுமே தோ்வு எழுதினா்.துணை ஆட்சியா் நிலையிலான அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையினா் அவ்வப்போது தோ்வு மையங்களில் திடீா் சோதனை நடத்தினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய ( டி.என்.பி.எஸ்.சி.) உறுப்பினா் கிருஷ்ணகுமாா், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் செயின்ட் ஜோசப் பள்ளி தோ்வு மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
- பாரம்பரிய பாடலுடன் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- வன காப்பு திருவிழா ஊட்டி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனத்தை காக்கும் வகையில் வன காப்பு திருவிழா ஊட்டி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்றது.
இதில், வனத்துறை அமைச்சா் ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரம் நடும் விழாவை தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து படுக இன மக்கள் தங்களின் பாரம்பரிய பாடலுக்கு நடனமாடி மரம் வளா்ப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
விழாவில் 2022 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.ஒவ்வொரு மரத்தையும் தங்களின் குழந்தைகளின் பெயா் சூட்டி வளா்க்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மரத்தினால் ஏற்படும் நன்மைகள், வனங்கள் ஏன் காப்பாற்றபட வேண்டும் என்பது குறித்து நாக்கு பெட்டா சங்கம், ஈஷா அறக்கட்டளை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவா் சச்சின் துக்காராம் போஸ்லே மற்றும் வன ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- இரவு நேரங்களில் வளைவுகள் தெரியாமல் பெரும்பாலான வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
- சாலை வளைவுகளில் வளைவுகளை குறிக்கும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் வளைவுகள் அதிகமாக இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வளைவுகள் தெரியாமல் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
பனிக்காலம் என்பதால் மாவட்டத்தில் அதிக அளவு பனி மூட்டம் காணப்பட்டு வருவதால் உள்ளூர் வாகன ஓட்டிகளும் வாகனங்களை ஓட்டுவதில் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு கோத்தகிரி நெடுஞ்சாலைத்துரை சார்பில் கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான சாலை வளைவுகளில் வளைவுகளை குறிக்கும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
- நீலகிரி மாவட்டத்திற்கு ரோஸி ஸ்டார்லிங் என்ற பறவை குளிர்கால பயணியாக வந்துள்ளது.
- ஆண்டுதோறும் ரோஸி ஸ்டார்டிங் பறவைகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து தெற்காசியா முழுவதும் இடம் பெயர்கின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக வருகை புரிந்துள்ளது வெளிநாட்டு ரோஸி ஸ்டார்லிங் பறவைகள்.
விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளி, பூச்சிகளை உண்ணும் விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படும் இந்த வெளிநாட்டு பறவைகளின் வருகையால் சுற்றுலா பயணிகள் மற்றும் பறவைகள் இன ஆவண புகைப்பட கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உயிர் சூழல் மண்டலத்தில் மிகப்பெரிய அங்கமாக நீலகிரி மாவட்டம் திகழ்வதால் ஆண்டுதோறும் பறவைகளின் வலசை காணப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வலசை வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கொடநாடு, சோலூர் மட்டம், கேத்ரின் நீர்வீழ்ச்சி, கிளன்மார்கன், கோத்தகிரி, பர்லியார், குன்னூர் ஆகிய பகுதிகள் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் பகுதிகளாக உள்ளன.
தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு ரோஸி ஸ்டார்லிங் என்ற பறவை குளிர்கால பயணியாக வந்துள்ளது. இந்த பறவைகள் ரோசா, மைனா, சோளபட்சி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பறவைகள் கூடு கட்டி வாழ்வதில்லை இருந்தாலும் 6 முதல் 8 முட்டைகள் வரை இடும். இந்த பறவை இனத்தில் ஆண், பெண் பறவைகள் 2ம் சேர்ந்தும் அடைகாக்கும் தன்மை கொண்டது. வெட்டுக்கிளி மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை இவை சாப்பிடுவதால் இந்த பறவைகளையும் விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கிறார்கள்.
ஆண்டுதோறும் ரோஸி ஸ்டார்டிங் பறவைகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து தெற்காசியா முழுவதும் இடம் பெயர்கின்றன. குளிர்காலத்தில் இந்தியாவின் பயணம் மேற்கொள்கின்றன. இந்த பறவைகள் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் குளிர்கால சுற்றுலா பயணியாக இந்த பறவைகள் வந்து செல்கின்றனர். ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் தற்போது உதகைக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளது.
இது குறித்து பறவைகளை ஆவணபடுத்தும் கலைஞர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு ஊட்டியில் நீர் பணியின் தாக்கம் அதிகரித்து மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் ஆசிய பறவைகளான ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் பனிக்காலத்தை அனுபவிக்க வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பறவை இனங்களுக்கு ஏற்ற பழ வகைகள் நிறைந்துள்ளதால் குளிர் காலங்களில் ரோஸ் ஸ்டார்லிங் பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படும் என கூறினார்.
குறிப்பாக 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின் இந்த பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
- டான்டீ நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று, நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கு அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டம் கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஊட்டி:
இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் அவர்களின் வாழ்வாதரத்திற்காக டான்டீ நிர்வாகமும் உருவாக்கப்பட்டது. அவர்கள் அந்த தொழிலை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர், கோத்தகிரி, கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் பராமரிப்பு இல்லாத தேயிலை தோட்டங்களை தமிழ்நாடு தோட்ட கழகம்(டான்டீ) வனத்துறைக்கு ஒப்படைத்ததுடன், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்யும்படி நோட்டீசும் ஒட்டியுள்ளது.
மேலும் டான்டீ நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று, நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கு அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.
அரசின் இந்த முடிவால் இந்த தொழிலை நம்பி இருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க சார்பில் சில தினங்களுக்கு முன்பு வால்பாறையில் உண்ணாவிரத போராட்டமும் நடந்தது.
இந்தநிலையில் டான்டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், தமிழ் குடும்பங்களை மீண்டும் அகதிகள் ஆக்குவதை கண்டித்தும் பா.ஜ.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.
ஆர்ப்பாட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கோவை பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் கூடலூர் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
போராட்டத்திற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட பா.ஜ.கவினர் செய்து வருகின்றனர். பா.ஜ.க போராட்டத்தையொட்டி கூடலூர் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
- காடல் டிவிசன் பகுதியில் வேணுகோபால், ஜெபாஸ்டின், தேவா ஆகிய 3 ஊழியர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் ராணுவ வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இங்கிருந்து நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அவர்கள் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காடல் டிவிசன் பகுதியில் வேணுகோபால், ஜெபாஸ்டின், தேவா ஆகிய 3 ஊழியர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் 3 பேரும் காயம் அடைந்தனர்.
இதனை பார்த்த மற்ற தொழிலாளர்கள் வெளியில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ராணுவ அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருவங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் வெடிமருந்து ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அல்லஞ்சி பகுதியில் நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை அமைச்சா் கா.ராமசந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
- இந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒவ்வொரு வீடுகளும் ரூ.14 லட்சம் மதிப்பிலானவை.
ஊட்டி,
ஊட்டி அருகேயுள்ள அல்லஞ்சி பகுதியில் நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை அமைச்சா் கா.ராமசந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதையடுத்து அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஊட்டி அல்லஞ்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகளை டேன் டீ தொழிலாளா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இங்கு கட்டப்பட்டு வரும் ஒவ்வொரு வீடுகளும் ரூ.14 லட்சம் மதிப்பிலானவை. இந்நிலையில், இந்த வீடுகளுக்கு தொழிலாளா்கள் ரூ.3 லட்சம் கட்ட வேண்டும் என நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் கூறியிருந்தது.
ஆனால், அந்த தொகையை செலுத்த முடியாது என்று டேன் டீ தொழிலாளா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, ஓய்வுபெற்ற டேன் டீ தொழிலாளா்களுக்கு வீடுகள் வழங்குவதற்காக அவா்கள் கட்ட வேண்டிய தொகையை அரசே ஏற்கும் எனக் கூறி அதற்காக ரூ.12.43 கோடியை முதல்வா் விடுவித்துள்ளாா்.
இந்த தொகையை நகா்ப்புற மேம்பாட்டு வாரியத்துக்கு அரசு செலுத்தும். இதன் மூலம் 677 டேன் டீ தொழிலாளா்கள் பயன்பெறுவா்.
தற்போது டேன் டீ குடியிருப்புகளில் இருக்கும் ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் சிலருக்கு பணப் பலன்கள் வழங்கப்படாமல் உள்ளன.
அவா்களுக்கும் உடனடியாக பணப்பலன்கள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேயிலைத் தோட்டங்களுக்கு உரங்கள் வாங்குவதற்கு ரூ.4 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டேன் டீ தேயிலைத் தோட்டங்கள் மீண்டும் புத்துயிா் பெறும். விரைவில், இந்த வீடுகள் தொழிலாளா்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கூடலூா் சேரக்கோடு பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகள், அங்கு தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு வழங்கப்படும்.
அதேபோல், கோத்தகிரி பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகள், அங்கு பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கும், அல்லஞ்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகள் குன்னூா் பகுதியில் பணியாற்றி ஓய்வுபெற்ற டேன் டீ தொழிலாளா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
- நீலகிரியின் சுற்றுச்சூழலைக் கணக்கில் கொண்டு அதற்கு முன்னரே 19 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டா், 2 லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஊட்டி,
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை 2019 ஜனவரி முதல் தடை செய்து தமிழ அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நீலகிரியின் சுற்றுச்சூழலைக் கணக்கில் கொண்டு அதற்கு முன்னரே 19 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், சுற்றுலா பயணிகளின் வருகையால் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் அதிகம் இருந்ததால் நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டா், 2 லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிக அளவில் இருப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நகராட்சி சுகாதாரத் துறையினா் பிளாஸ்டிக் ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
அதன்படி, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய உதகை காந்தல் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள தங்கும் விடுதியுடன் கூடிய உணவகத்துக்கு வியாழக்கிழமை 'சீல்' வைத்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, சுற்றுலாப் பயணிகள் வந்த பேருந்துகளை சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களைக் கொண்டு வந்த இரு பேருந்து ஓட்டுநா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது."
- தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த காட்டெருமை கம்பி வேலியை தாண்டி புற்களை மேய்ந்தது.
- காட்டெருமையை கண்ட பொதுமக்களும், அலுவலர்களும் அச்சமடைந்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் மற்றும் கோர்ட்டு வளாகம், எப்போதும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாக உள்ளது. இங்கு காட்டெருமை ஒன்று தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள கம்பி வேலியை தாண்டி சென்று புற்களை மேய்ந்தது. பின்னர் அலுவலக வளாகத்தில் உலா வந்தது. காட்டெருமையை கண்ட பொதுமக்களும், அலுவலர்களும் அச்சமடைந்தனர். மேலும் அவர்கள் கட்டிடத்துக்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொண்டனர். சற்று நேரம் அப்பகுதியில் உலா வந்த காட்டெருமை, அதன்பிறகு அங்கிருந்து சென்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டது
- முதுமலை மறுகுடியமர்வு மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனியாக ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.
இதில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டது. மேலும் முன்னதாக பெறப்பட்ட மனுக்கள் உரிய துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 89 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-
தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் செடிகளின் விபரங்களை விலையுடன் கூடிய காட்சி பதாகைகள் வைக்க வேண்டும்.
பி.எம்.கிஷான் பயனாளிகளில் 13-வது தவணை தொகை பெற இயலாத காரணத்தால் பயனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் கூடலூர் வட்டாரத்தில் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்றும், முதுமலை மறுகுடியமர்வு மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனியாக ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை Nilgiris Tree Cutting Service என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர்(பொறுப்பு) ஷிபிலா மேரி, உதவி இயக்குநர்கள் சாம்சாந்த குமார்(ஊராட்சிகள்), இப்ராகிம்ஷா (பேரூராட்சிகள்) மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் குரும்பா் இனத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், பா்லியாறு ஊராட்சிக்குட்பட்ட சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் குரும்பா் இனத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இதில், பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனா். இதுகுறித்து தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தலைமையில் பழங்குடி கிராம மக்களுக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 21 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சா் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேம்புக்கரை பழங்குடி கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டா் வரை சாலை அமைத்தால் இப்பகுதி மக்கள் பா்லியாறு வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வசதியாக இருக்கும்.
ஆனால், இடையில் ெரயில்வே தண்டவாளம் இருப்பதால், சாலை அமைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதுகுறித்து ெரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் இருந்து வந்த 21 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார், குன்னூர் தாசில்தார் சிவக்குமார், பர்லியார் ஊராட்சி தலைவர் சுசீலா, தி.மு.க பொதுக்குழுஉறுப்பினர் காளிதாஸ், செல்வம், குன்னூர் நகர துணை செயலாளர் வினோத்குமார், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
- 2 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது.
- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கடந்த சில மாதங்களாக உலவி வருகிறது. இந்நிலையில் கூடலூர் உதகை நெடுஞ்சாலையில் மேல் கூடலூர் பகுதியில் 2 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. சில மணி நேரங்களுக்குப் பிறகு யானைகள் தானாகவே சாலையை கடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் சென்றன. இதை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் அருகில் சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






