என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Warning signs"

    • இரவு நேரங்களில் வளைவுகள் தெரியாமல் பெரும்பாலான வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
    • சாலை வளைவுகளில் வளைவுகளை குறிக்கும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் வளைவுகள் அதிகமாக இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வளைவுகள் தெரியாமல் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

    பனிக்காலம் என்பதால் மாவட்டத்தில் அதிக அளவு பனி மூட்டம் காணப்பட்டு வருவதால் உள்ளூர் வாகன ஓட்டிகளும் வாகனங்களை ஓட்டுவதில் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு கோத்தகிரி நெடுஞ்சாலைத்துரை சார்பில் கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான சாலை வளைவுகளில் வளைவுகளை குறிக்கும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    ×