search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரி மாவட்டத்தில் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு
    X

    ரோஸி ஸ்டார்லிங் பறவைகளை காணலாம்.

    நீலகிரி மாவட்டத்தில் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு

    • நீலகிரி மாவட்டத்திற்கு ரோஸி ஸ்டார்லிங் என்ற பறவை குளிர்கால பயணியாக வந்துள்ளது.
    • ஆண்டுதோறும் ரோஸி ஸ்டார்டிங் பறவைகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து தெற்காசியா முழுவதும் இடம் பெயர்கின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக வருகை புரிந்துள்ளது வெளிநாட்டு ரோஸி ஸ்டார்லிங் பறவைகள்.

    விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளி, பூச்சிகளை உண்ணும் விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படும் இந்த வெளிநாட்டு பறவைகளின் வருகையால் சுற்றுலா பயணிகள் மற்றும் பறவைகள் இன ஆவண புகைப்பட கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    உயிர் சூழல் மண்டலத்தில் மிகப்பெரிய அங்கமாக நீலகிரி மாவட்டம் திகழ்வதால் ஆண்டுதோறும் பறவைகளின் வலசை காணப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வலசை வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கொடநாடு, சோலூர் மட்டம், கேத்ரின் நீர்வீழ்ச்சி, கிளன்மார்கன், கோத்தகிரி, பர்லியார், குன்னூர் ஆகிய பகுதிகள் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் பகுதிகளாக உள்ளன.

    தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு ரோஸி ஸ்டார்லிங் என்ற பறவை குளிர்கால பயணியாக வந்துள்ளது. இந்த பறவைகள் ரோசா, மைனா, சோளபட்சி என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த பறவைகள் கூடு கட்டி வாழ்வதில்லை இருந்தாலும் 6 முதல் 8 முட்டைகள் வரை இடும். இந்த பறவை இனத்தில் ஆண், பெண் பறவைகள் 2ம் சேர்ந்தும் அடைகாக்கும் தன்மை கொண்டது. வெட்டுக்கிளி மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை இவை சாப்பிடுவதால் இந்த பறவைகளையும் விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கிறார்கள்.

    ஆண்டுதோறும் ரோஸி ஸ்டார்டிங் பறவைகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து தெற்காசியா முழுவதும் இடம் பெயர்கின்றன. குளிர்காலத்தில் இந்தியாவின் பயணம் மேற்கொள்கின்றன. இந்த பறவைகள் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் குளிர்கால சுற்றுலா பயணியாக இந்த பறவைகள் வந்து செல்கின்றனர். ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் தற்போது உதகைக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளது.

    இது குறித்து பறவைகளை ஆவணபடுத்தும் கலைஞர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு ஊட்டியில் நீர் பணியின் தாக்கம் அதிகரித்து மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் ஆசிய பறவைகளான ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் பனிக்காலத்தை அனுபவிக்க வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பறவை இனங்களுக்கு ஏற்ற பழ வகைகள் நிறைந்துள்ளதால் குளிர் காலங்களில் ரோஸ் ஸ்டார்லிங் பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படும் என கூறினார்.

    குறிப்பாக 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின் இந்த பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    Next Story
    ×