என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. மேலும் உப்பு நிறமும் மங்கியதால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்திக்கு சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, உற்பத்தியாளர்கள் மற்றும் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்து வருகிறது.
ஆண்டுதோறும் கோடைகாலத்தில் இங்கு உப்பு உற்பத்தி தொழில் தீவிரமாக நடந்து வரும். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்கியது முதல் உப்பு உற்பத்தி சிறப்பாக நடந்து வந்தது.
இந்த நிலையில் அண்மையில் பெய்த பருவம் தவறிய மழையால் உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. மேலும் உப்பின் நிறம் மங்கி, படிகமடையும் தன்மை தளர்ந்து உணவிற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
தற்போதைய மழையினால் உப்பு உற்பத்தி கடந்த ஒரு வாரமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீண்டும் மழை பெய்யும் பட்சத்தில் உப்பளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் உற்பத்தி தடைபடும் என்றும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உப்பு உற்பத்திக்கு சூரிய ஒளியே பிரதானம், வானம் மேகமூட்டமாக காணப்பட்டால் அது உப்பு தட்டுப்பாட்டிற்கு வழிவகை செய்யக்கூடும் என்று வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் சங்க தலைவர் வேதரத்தினம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்து பாதுகாக்கப்பட்டு எதிர் வரும் குளிர் காலத்தில் விற்பனை செய்யப்படும். மங்கிய நிறம் உப்பு சந்தையில் டன் ஒன்றிற்கு ரூ.3500 விற்கப்படுகிறது. மங்கிய நிலையில் இருந்தாலும் உற்பத்தி குறைந்துள்ளதால் இதற்கான தேவையை பூர்த்தி செய்ய இயலாது.
உப்பு தட்டுப்பாடு காணப்படும் இந்த நிலையில் தொழில் நிறுவனங்களின் உப்பிற்கான தேடல் அதிகரித்துள்ளது. மேலும் போதுமான அளவு இருப்பு இல்லாததால் இவை தொழில் நிறுவனங்களின் உப்பு தேவைகளில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்டு மீண்டும் கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி சிறப்பாக நடந்து வருகிறது. ஏற்றுமதியை தவிர்க்கும் பட்சத்திலும், குளிர் காலத்தில் உணவு பயன்பாட்டிற்கான உப்பின் பற்றாக்குறை அதிகமாக இருக்கும்.
அதுமட்டுமின்றி இந்த தட்டுப்பாடு உப்பு சார்ந்து தொழில் புரியும் நிறுவனங்களான கண்ணாடி, பாலியஸ்டர், பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் ஆகிய உற்பத்தி தொழில்களிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
பிற தொழில்களைபோன்று இல்லாமல் பருவ நிலையை மட்டுமே மூலதனமாகக்கொண்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட உப்பளங்களை மீண்டும் உற்பத்தி நிலைக்கு கொண்டு வருவதற்கு பெரும் பொருட்செலவு செய்து கடன் பட்டுள்ளோம். இந்த நிலையில் இதுபோன்ற உற்பத்தி காலத்தில் பெய்யும் பருவம் தவறிய மழை தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதித்துள்ளது.
இந்த பருவ நிலை மாற்றங்கள் இந்தியாவின் உப்பு உற்பத்தி மையமான குஜராத்திலும் 30 சதவீதம் அளவிற்கு உற்பத்தியை குறைந்துள்ளது. தற்போதைய அசானி புயலும் உற்பத்தியை மிகவும் மோசமாக பாதித்தது. உப்பின் தேவை அதிகமாக இருக்கும் நிலையிலும் உற்பத்தியாளர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் இல்லை என்று உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
வேதாரண்யத்தில் சூறை காற்று வீசுவதால் மீனவர்கள் நான்காவது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து கச்சன் காற்று எனப்படும் சூறை காற்று வீசுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
இதனால் மீனவர்கள் நான்காவது நாளாக கடலுக்கு செல்லவில்லை .ஆறுகாட்டுத்துறை, புஷ்ப வனம், வெள்ளபள்ளம், கோடியக்கரை, மணிய ன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குசெல்லவில்லை.
இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துவிட்டு மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களின்றி மீன் ஏலகூடம் மற்றும் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. இது குறித்து ஆறுகாட்டுதுறை கிராம பஞ்சாயத்தார் முருகையன் கூறுகையில் இந்த கச்சன் காற்று தொடர்ந்து ஒரு வாரம் வீசும்எனவும் அதுவரை மீன்பிடிக்க செல்ல இயலாது என்றும் தற்போது அதிக அளவில் மத்தி மீன் கிடைத்துவந்த நிலையில் இந்த சூறாவளி காற்றினால் மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது எனதெரிவித்தார்.
வேதாரண்யத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வட்டா ட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் துரைமு ருகன் தலைமை வகித்தார் தாசில்தார் ரவிச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் மற்றும். தோட்ட கலைதுறை அலுவலர் வைரவமூர்த்தி பொது பணிதுறை ஆய்வாளர் நகராஜன் விவசாயி சங்கத்தை சேர்ந்த கிரிதரன், ராஜன், ஒளிச்சந்திரன, பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், சோழன் உள்ளிட்ட ஏரளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கூட்டத்தில் ‘ சட்டமன்ற உறுப்பினருமான ஒ எஸ் மணியன் கலந்து கொண்டு தலைஞாயிறு பகுதியில் அரிச்சந்திர ஆற்றில் ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பில் ஆற்றில் கடல் நீர் உள்புகுமால் இருக்கவும் கற்று நீரை தேக்குவதற்க்காக ரூ.540 கோடியில் தடுப்பு அணை கட்டப்பட்டது இந்த தடுப்பு அணை கட்டிய பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் உப்பு நீர் நன்னீராக மாறி வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இறால் பண்ணைகளுக்கு தண்ணீர் இறைப்பதற்காக அணையின் கதவுகளை யாரோ திறந்து விட்டதால் கடல் நீர் உட்புகுந்து ஆற்று நீர் உப்பாக மாறி விட்டது இந்த சமூக விரோத செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மேலும் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் ஏழை எளிய மக்கள் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் பணிகளுக்கு சாதாரண மண் கூட எடுக்க முடியவில்லை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர் தொடர்ந்து தென்னையை தாக்கும் வெள்ளை ஈ நோய் மா மரங்களை தாக்கும் தேன் பூச்சி நீர்நிலைகளையும் ஆறுகளையும் தூர்வார வேண்டும்.
ஆற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் குறிப்பாக வேதாரண்யம் பகுதிகளில் மணல் எடுக்க அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் நீர்நிலை ஓரம் உள்ள யூகலிப்டிஸ்மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி வேலைகளில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டு ம்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து பேசினர்.அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து இருந்து விவசாயிகள் குறைகளுக்கு பதில் அளித்து பேசினார்.
கூட்ட முடிவி ல்வேதா ரண்யம் கோட்டாட்சியர் துரைமுருகன் கூறியதாவது வேதாரண்யம் பகுதியில் சதராண மண் எடுப்பது போன்ற பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் துறை சார்ந்த கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆலத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
இதில் ஆலத்தூர், அருள்மொழிதேவன் பகுதியை சேர்ந்த 280 குடும்பத்தைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கப்பட்டது.இதில் ஊராட்சி செயலாளர் தமிழ்மணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருமருகல் அருகே ரூ.47.79 லட்சத்தில் வாளாமங்கலம்-வரதராஜபுரம் சாலை அமைக்கும் பணியை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் தொகுதி திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி வாளாமங்கலம் கிராமத்தில் சாலை வசதி இல்லை என்று கூறி, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அந்த கிராமமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
அப்போது தி.மு.க. கூட்டணி வி.சி.க. வேட்பாளர் முகம்மது ஷா நவாஸ் மக்களை சந்தித்து தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை கைவிட்டு தனக்கு வாக்களிக்கும் படியும், தான் வெற்றி பெற்றால் சாலை வசதி செய்து தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து மக்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதும் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ, அந்த கிராமத்திற்கு அதிகாரிகளுடன் சென்று சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து, விரைந்து சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, மாநில ஊரகச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாளாமங்கலம்- வரதராஜபுரம் சாலை, ரூ.47.79 லட்சம் மதிப்பீட்டில் புதியசாலை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதை இதில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் பங்கேற்று சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், வி.சி.க. ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் பகுதியில் இயற்கை உரத்திற்காக வயல்களில் ஆடு, மாடு கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் இயற்கை உரத்துக்கு வயல்களில் ஆடு மாடு கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் இதன் மூலம் மண்ணின் வளத்தைப் பெருக்கி இயற்கையான நஞ்சில்லா உணவு தானியங்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முயற்சி செய்து வருகின்றார்கள் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் மூலக்கரை மருதூர் தகடூர் பிராந்தியங்கரை தென்னடார் உம்பளச்சேரி வாட்டாகுடி தலைஞாயிறு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் விளை நிலங்கள் உள்ளன.
இதில் ஆண்டுதோறும் மழையை மட்டுமே நம்பி ஒரு போக சம்பா சாகுபடி நடைபெறும் வயல்கள் 11,000 ஹெக்டரும் ஆற்றுப் பாசனத்தை நம்பி 14 ஆயிரம் ஹெக்டரும் நெல்சாகுபடி வயல்கள் உள்ளன.
இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை உரத்தை மட்டுமே வயலுக்கு பயன்படுத்தி வந்தனர் சமீபகாலமாக முற்றிலும் மாறுபட்டு செயற்கை உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றனர் நாளடைவில் ரசாயன உரங்கள் மண்ணுக்கும் மனிதனுக்கும்கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்த விவசாயிகள் மீண்டும் பழையபடி இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.
இயற்கை உரத்திற்காக வயல்களில்ஆடு மாடுகளை கொண்டு கிடை போடுவதில் தற்போது இப்போது விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் மூலம் மண்ணின் வளத்தையும் பெருக்கும் மனிதர்களுக்கு நஞ்சில்லா உணவு தானியங்கள் கிடைக்க இப்பகுதி விவசாயிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூன்று முறை மாடுகளையும் இரண்டு முறை ஆடுகளையும் விவசாயிகள் கடை போட்டு வருகிறார்கள் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறுவதால் தரமான உணவு தானியங்கள் கிடைக்கும் என இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கொரசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன் (எ) வேல்ராஜ் (வயது 50). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி. மார்ச் 18ம் தேதி இவரது வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் கொள்ளை போனது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நாகப்பட்டினம் செக்கடி தெருவைச் சேர்ந்த சேகர் என்கிற கொரசேகர் (வயது 50) கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் இருந்து வந்தார். கொரசேகர் மீது நாகை, வெளிப்பாளையம், நாகூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட இடங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கொரசேகர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து கொர சேகரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கீழ்வேளூர் போலீசார் நாகை மாவட்ட சிறையில் இருந்த கொரசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நாகை அருகே வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் பகுதியை சேர்ந்தவர்கள் தியாகராஜன் - மல்லிகா தம்பதியினர். கணவன்- மனைவி இருவரும் நேற்று இரவு வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த நல்ல பாம்பு ஒன்று மல்லிகாவை கடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தியாகராஜன் வலியால் துடித்த மல்லி காவை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மல்லிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யத்தில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் காற்று அதிகமாக விசுவதாலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மூன்றாவது நாளாககடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. கடலின் உள்ள பகுதியில் காற்று பலமாக வீசுவதாலும் நீரோட்டம் மாற்றத்தினால் மீன்கள் கிடைக்கவில்லை
இதனால் பைபர் படகு மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை இதனால்மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
திருமருகல் அருகே புதிய சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி வாழாமங்கலத்திற்கு செல்லும் சாலை கடந்த 15 ஆண்டுகளாக பழுத–டைந்து இருந்தது.
இதை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரி–களிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும்அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
அப்போது தி.மு.க கூட்டணி கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட முகம்மது ஷாநவாஸ் மற்றும் தி.மு.க மாவட்ட பொறு ப்பாளர் கவுதமன் ஆகியோர் அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சு–வார்த்தையில் ஈடுபட்டு தேர்தல் புறக்கணிப்பில் இருந்து விடுபடுமாறு வலியுறுத்தினர்.
மேலும் தாங்கள் வெற்றி பெற்றால் சாலை வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தனர்.
அதன் பேரில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1250 மீட்டர் தொலைவிற்கு ரூ.47 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி (கிராம ஊராட்சி), ஆத்மா திட்ட வட்டாரத் தலைவர் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக் குழு உறுப்பினர் மணிவண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், திட்டச்சேரி பேரூர் தி.மு.க செயலாளர் முகம்மது சுல்தான் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






