search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை அமைக்கும் பணியை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    X
    சாலை அமைக்கும் பணியை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சாலை அமைக்கும் பணி

    திருமருகல் அருகே ரூ.47.79 லட்சத்தில் வாளாமங்கலம்-வரதராஜபுரம் சாலை அமைக்கும் பணியை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் தொகுதி திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி வாளாமங்கலம் கிராமத்தில் சாலை வசதி இல்லை என்று கூறி, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அந்த கிராமமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

    அப்போது தி.மு.க. கூட்டணி வி.சி.க. வேட்பாளர் முகம்மது ஷா நவாஸ் மக்களை சந்தித்து தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை கைவிட்டு தனக்கு வாக்களிக்கும் படியும், தான் வெற்றி பெற்றால் சாலை வசதி செய்து தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து மக்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர். 

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதும் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ, அந்த கிராமத்திற்கு அதிகாரிகளுடன் சென்று சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து, விரைந்து சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதையடுத்து, மாநில ஊரகச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாளாமங்கலம்- வரதராஜபுரம் சாலை, ரூ.47.79 லட்சம் மதிப்பீட்டில் புதியசாலை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. 

    இதை இதில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் பங்கேற்று சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். 

    இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், வி.சி.க. ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×