search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.
    X
    புதிய சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.

    புதிய சாலை அமைக்க பூமிபூஜை

    திருமருகல் அருகே புதிய சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி வாழாமங்கலத்திற்கு செல்லும் சாலை கடந்த 15 ஆண்டுகளாக பழுத–டைந்து இருந்தது. 

    இதை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரி–களிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும்அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அப்போது தி.மு.க கூட்டணி கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட முகம்மது ஷாநவாஸ் மற்றும் தி.மு.க மாவட்ட பொறு ப்பாளர் கவுதமன் ஆகியோர் அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சு–வார்த்தையில் ஈடுபட்டு தேர்தல் புறக்கணிப்பில் இருந்து விடுபடுமாறு வலியுறுத்தினர். 

    மேலும் தாங்கள் வெற்றி பெற்றால் சாலை வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தனர். 
    அதன் பேரில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1250 மீட்டர் தொலைவிற்கு ரூ.47 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தனர். 

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி (கிராம ஊராட்சி), ஆத்மா திட்ட வட்டாரத் தலைவர் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக் குழு உறுப்பினர் மணிவண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், திட்டச்சேரி பேரூர் தி.மு.க செயலாளர் முகம்மது சுல்தான் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×