என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாள் 10 நாட்கள் திருவிழாவாக வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாட்களில் வேளாங்கண்ணி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாகை மாவட்டத்துக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) அன்று தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த தருவாயில் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் திருவிழாவுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை புரிய தடை செய்யப்படுகிறது.

    மேலும் வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் ஆண்டு பெருவிழாவினை பொதுமக்கள் கண்டு களித்திடும் வகையில் மாற்று ஏற்பாடாக ஆலய ஆராதனையை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்திட வேளாங்கண்ணி பேரலாயத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதாலும், கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுத்திடவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாள் 10 நாட்கள் திருவிழாவாக வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நாட்களில் வேளாங் கண்ணி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாகை மாவட்டத்துக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) அன்று தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த தருவாயில் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் திருவிழாவுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை புரிய தடை செய்யப்படுகிறது.

    மேலும் வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் ஆண்டு பெருவிழாவினை பொதுமக்கள் கண்டு களித்திடும் வகையில் மாற்று ஏற்பாடாக ஆலய ஆராதனையை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்திட வேளாங்கண்ணி பேரலாயத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதாலும், கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுத்திடவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    நாகை அருகே கொரோனா ஊரடங்கால் தவணை தொகை செலுத்த முடியாமல் வாடகை கார் உரிமையாளர் ஒருவர் சைக்கிளில் சென்று டீ விற்று வருகிறார்.
    நாகூர்:

    நாகை அருக உள்ள நாகூர் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் முகமதுமைதீன் (வயது 45). வாடகை வீட்டில் வசித்து வரும் முகமதுமைதீன் கடந்த 20 ஆண்டுகளாக வாடகை கார் ஓட்டிவந்தார். இந்தநிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுக சிறுக தான் சேர்த்து வைத்திருந்த பணம் மற்றும் வங்கி கடனில் கார் வாங்கி ஓட்டி வந்தார். இந்தநிலையில் அவரது வாழ்வை புரட்டி போடும் வகையில் கொரோனா ஊரடங்கு வந்து சேர்ந்தது. இதனால் கார் ஓட்ட முடியாததால் வருமானமின்றி அவர் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், மாத தவணை கட்டுவதற்கு வங்கிகள் நெருக்கடி கொடுக்கவே, வேறு வழியின்றி தற்போது சைக்கிளில் தெரு தெருவாக சென்று டீ, வடை விற்று பிழைப்பு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். சென்னைக்கு ஒருமுறை சவாரி சென்று வந்தால், செலவுகள் போக ரூ.1500 லாபம் கிடைக்கும் என கூறும் முகமதுமைதீன், தற்போது டீ விற்பதன் மூலம் ஒரு நாளில் ரூ.500 கூட சம்பாதிக்க முடியவில்லை என வேதனையுடன் கூறுகிறார்.

    மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு மிகுந்த சிரமத்தோடு வாழ்ந்து வரும் முகமதுமைதீன் கடந்த 3 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் பல இன்னல்களை சந்திப்பதற்கு அரசின் திட்டமிடல் இல்லாத நடவடிக்கைகள்தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    எனவே முகமதுமைதீன் போல துயரை சந்தித்து வருபவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மணல்மேடு அருகே சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு பகுதிகளில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சின்ன இலுப்பப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 47), ஐவநல்லூர் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (24), அதிமான புருஷன் காலனி தெருவை சேர்ந்த ராஜதுரை ( 34), திருச்சிற்றம்பலம் மெயின்ரோட்டை சேர்ந்த சிவபெருமாள் (40), வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த பாலாஜி (39) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. 

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    மயிலாடுதுறை அருகே செல்போனுக்கு ‘ரீ-சார்ஜ் செய்ய வந்த பெண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பாலையூர்:

    மயிலாடுதுறை அருகே உள்ள அகரவல்லம் பகுதியில் முகமதுஅப்ரித்(வயது21) என்பவர் செல்போன் ‘ரீ-சார்ஜ்’ கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 23 வயது பெண் ஒருவர் தனது செல்போனுக்கு ‘ரீ-சார்ஜ்’ செய்துள்ளார். அந்த செல்போன் எண்ணை பதிவு செய்து கொண்ட முகமதுஅப்ரித், செல்போனில் தொடர்பு கொண்டு அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி உள்ளார். மேலும் வாட்ஸ்-அப்பில் ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக தெரிகிறது. 

    இதுகுறித்து அந்த பெண், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுஅப்ரித்தை கைது செய்தனர்.
    நாகை டாடா நகரில் கழிவு நீர் குளம்போல சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சிக்கு உட்பட்ட டாடா நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் பாதாள சாக்கடை மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த 2 வாரத்துக்கு மேலாக இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குளம்போல சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    டாடா நகரில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதை நகராட்சி ஊழியர்கள் வந்து சரி செய்வார்கள். இருப்பினும் தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவும் சூழலில் இந்த பாதாள சாக்கடை கழிவுநீரில் இருந்து ஏதேனும் தொற்றுநோய் பரவக்கூடுமோ என்கிற அச்சம் நிலவி வருகிறது. எனவே பாதாளச் சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். 

    இவ்வாறு அந்த பகுதி மக்கள் கூறினர்.
    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை அகல வேண்டி கோவில் உண்டியலில் மனு செலுத்தப்பட்டது.
    சீர்காழி:

    ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இதையொட்டி பல்வேறு வீதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை வீதிகளில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது.

    இந்த தடையை நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    ஆனால் அரசு தடையை நீக்கவில்லை. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான தடை அகல வேண்டும் விதமாக மயிலாடுதுறை அருகே சீர்காழியில் உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோவில் உண்டியலில் மனு செலுத்தும் நிகழ்ச்சி நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்தது.

    இதில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் நீங்கி, நல்ல விதமாக விழா நடைபெற அருள் புரிய வேண்டும் என்று மனுவாக எழுதப்பட்டு கோவில் உண்டியலில் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    நாகையில், ஊரடங்கால் வேலையிழந்த தனியார் பள்ளி ஆசிரியைகள், சாலையோரத்தில் மக்காச்சோளத்தை விற்பனை செய்து வருகிறார்கள். தங்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    கொரோனா நோய் பலருடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. பெரு நகரங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் ஊரடங்கால், வேலையிழந்து சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

    பள்ளிகளை திறக்காமலேயே ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன. பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரமான வேலையை இழந்து வருமானம் ஈட்ட வேறு வேலைகளை தேடும் நிலையில் உள்ளனர். நாகை மாவட்டத்திலும் வேலையிழப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    நாகை பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியைகள் 2 பேர் தங்கள் வேலையை இழந்து தற்போது வருமானத்துக்காக சாலையோரம் மக்காச்சோளத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரான மயிலாடுதுறையை சேர்ந்த காயத்ரி(வயது 38) கூறியதாவது:- ஆசிரியராக வேண்டும் என்பது எனது கனவு. அதற்காக பி.எட். கணிதம் படித்தேன். மயிலாடுதுறை பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி. பள்ளியில் கணித ஆசிரியை வேலையும் கிடைத்தது. இந்த நிலையில் எனது வாழ்வில் இடியாய் வந்து விழுந்தது இந்த கொரோனா. ஊரடங்கால் நான் பணிபுரிந்த பள்ளி மூடப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக எனக்கு வேலையில்லை. மாத வருமானம் பறிபோனது.

    கொத்தனாரான எனது கணவருக்கும் வேலையில்லாததால் வருமானம் இன்றி குடும்பத்தை நடத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனது பள்ளி தோழி செல்வியும் தனியார் பள்ளியில் ஆசிரியை வேலையை இழந்து தவிக்கிறார். அவரும், நானும் கலந்து பேசி எங்கள் வாழ்க்கையை நகர்த்த நேர்மையான முறையில் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். இதனையடுத்து நாகையில் சாலையோரத்தில் குறைந்த விலைக்கு மக்காச்சோளத்தை விற்பனை செய்து எங்களது நிலைமையை தற்காலிகமாக சமாளித்து வருகிறோம்
    சுதந்திர தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கடற்கரையோர கிராமங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு அருகில் கோடியக்கரை இருப்பதால் தீவிரவாதிகள் கோடியக்கரை கடலோரபகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதி வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் கடலோர போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை, மணியன்தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி, பெரியகுத்தகை, கோடியக்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடலோர காவல் குழுமம் போலீசார், வேதாரண்யம் சட்டம்-ஒழுங்கு போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம் கடற்கரை வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆட்கள் வந்தாலும் அல்லது வெளிநாட்டு படகு நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களிடம் போலீசார்் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் கோடியக்கரை, வேதாரண்யம், புஷ்பவனம், செம்போடை, மேலும் வேதாரண்யம் தாலுக்காவிலுள்ள 11 சோதணை சாவடிகளிலும் வாகன தணிக்கையும் தீவிரமாக நடைபெறுகிறது.

    சட்டம்-ஒழுங்கு போலீசார், கடலோர காவல்படை போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் என அனைத்து உளவுத்துறை போலீசார்களும், கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களால் `கீழை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் சிறப்புகள் வாய்ந்த இந்த பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் செப்.7ந்தேதி பெரிய தேர் விழாவும், செப்.8ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தாக்கம் காரணமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் தனிநபர் இடைவெளியை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    வாய்மேடு:

    தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் முத்துகண்ணு மற்றும் ஊழியர்கள் தனிநபர் இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தனிநபர் இடைவெளியை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். அதனை தொடர்ந்து தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என்று துண்டு பிரசுரம் அனைத்து கடைகளுக்கும் வழங்கப்பட்டன. ஆய்வின்போது பேரூராட்சி பணியாளர்கள் அன்பு, குமார், ஜெயச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    கொரோனா இருந்தாலும் மருத்துவமனையில் இடம் இல்லை என்றும், வீட்டிலேயே நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் பேசிய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்தவமனையில் ரூ.18 கோடியில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடம் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டு அதில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் 200 படுக்கைகளும் நிரம்பியது. இதனால் வேறு இடங்களில் சிகிச்சை மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்காக ரத்தம், சளி மாதிரி கொடுத்தவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்டு 14 நாட்கள் கழித்து மறுபரிசோதனைக்கு மாதிரி கொடுத்தவர்கள் பரிசோதனை முடிவுகள் எப்போது கிடைக்கும் என்று பணியில் இருந்த செவிலியரிடம் கேட்டனர்.

    அப்போது அந்த செவிலியர், பரிசோதனை முடிவுகள் வந்துவிடும் என்றும், தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 7 நாட்கள் மட்டுமே இங்கு (மருத்துவமனையில்) தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அதிக அளவில் நோயாளிகள் இருப்பதால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திகொள்ள வேண்டும் என்றும் கூறினார். இதனால் அங்கு பரிசோதனைக்கு கொடுத்தவர்கள் செவிலியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த செவிலியர் உயர் அதிகாரிகள் கூறியதை நான் உங்களிடம் தெரிவித்து விட்டேன். எந்த சந்தேகமாக இருந்தாலும் டாக்டரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

    தற்போது இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதனால் டாக்டர்கள் மற்றும் மருத்துவ துறை ஊழியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    ×