என் மலர்
நாகப்பட்டினம்
- பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.
- பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் வீடுவீடாக மரக்கன்றுகள் வழங்கபட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட கல்வியாளர் பிரிவு துணைத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார் . மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக வேதாரண்யம் தெற்கு ஒன்றிய தலைவர் கரு.நாகராஜன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் 250 நபர்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன .பின்னர் பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் வீடுவீடாக மரக்கன்றுகள் வழங்கபட்டது.
- கோடியக்காடு அமிர்தகர சுப்பிரமணிய சுவாமி தனி சன்னதியில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வருகிற 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 14-ந் தேதி விசாக பெருவிழா தீர்தவாரி நிகழ்ச்சியும், 15-ந் தேதி மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது.
வேதாரண்யம் :
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டில் அமைந்துள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமி தனி சன்னதியில் அமைந்துள்ளது.
இந்த சுப்பிரமணிய சுவாமிக்கு வைகாசி மாதம் விசாகப் பெருவிழாவுக்கான கொடியேற்று விழா நடைப்பெற்றது. முன்னதாக சுப்பிமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம செய்யபட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதானை நடைபெற்றது.
பின்பு பல்லக்கில் முருகன் எழுந்தருளி கோடியக்காடு தியாகராஜ சிவச்சாரியர் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஒத திருக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் யாழ்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, வேதாரண்யஸ்வரர் கோயில் அலுவல்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
விழாவில் வரும் 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 14-ந் தேதி விசாக பெருவிழா தீர்தவாரி நிகழ்ச்சியும், 15-ந் தேதி மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், உபயதார்கள் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
- ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
இதேப்தபோல் செட்டிபுலம், பிராந்தியங்கரை, கத்திரிபுலம், கருப்பம்புலம் ஊராட்சிகளில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். மிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டபட்டது.
கோடியக்கரை ஊராட்சியில் ரூ. 40.80 லட்சம் மதிப்பீட்டிலும், வாய்மேடு ஊராட்சியில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலும் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடங்கள் திறக்கபட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த கொந்தகையில் ராமசாமி பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் 2-ம் நாளான நேற்று மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம், யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திட்டச்சேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் குத்துவிளக்கேற்றி ராமசாமி பெருமாள் வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- தங்கம், வெள்ளிப் பொருட்களும் விற்பனை செய்து வருகிறார்.
- அடகு கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி-ரூ.45 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
நாகப்பட்டினம்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோதிராம். இவர் நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் கடைத்தெருவில் நகை அடகு கடை வைத்துள்ளார். மேலும் இங்கு தங்கம், வெள்ளிப் பொருட்களும் விற்பனை செய்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்த மோதிராம் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பதறியடித்து கொண்டு பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.
கடையின் லாக்கரில் வைத்திருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், கல்லா பெட்டியில் இருந்த ரூ.45 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.35 லட்சம் நகைகள் தப்பியது.
இது குறித்து மோதிராம் வலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
அப்போது கொள்ளையர்கள் மாட்டி கொள்ளாமல் இருக்க அங்கு பொருத்தபட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்களையும் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி சென்று திரும்பி வந்தது. கைரேகை நிபுணர்கள் கடையில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






