என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மதனகிரி முனீஸ்வர சுவாமி கோவில் தேர் திருவிழா நடந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சிக்குட்பட்ட அடவி சாமிபுரம் கிராமத்தில் மதனகிரி ஸ்ரீ முனீஸ்வர சுவாமி கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். 48ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் தேர் திருவிழா இந்த ஆண்டும் விமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தீர்த்தம் தெளித்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் உற்சவ மூர்த்தியை அமர்த்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க ஹர, ஹர மகாதேவ் என பக்தி கோஷத்துடன் பக்தர்கள் அனைவரும் தேரின் வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வலம் வந்து தேரை நிலை நிறுத்தினர். இதில் முன்னதாக தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், விழா குழு தலைவர் சம்பங்கிராம ரெட்டி , தண்டரை ஊராட்சி தலைவர் நீலம்மா ஜெயராமன், மல்லசந்திரம் ஊராட்சி தலைவர் சுரேகா முனிராஜ் ,தொழில் அதிபர் சுரேஷ் பாபு, விழா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு நீர் மோர், பானகம், அன்னதானம் வழங்கினர்
தொடர்ந்து இரவு நாடகம் மற்றும் வாணவேடிக்கைகளுடன் கிராம தேவதைகளின் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஆக்கிரமித்து கடடிய 14 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி மாதேப்பள்ளி கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.
அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணையில் மாதேப்பள்ளி கிராமத்தில் 14 குடியிருப்பு வீடுகள் சாலையை ஆக்கிரமித்து வீடுகளையும் சுவர்களையும் கட்டி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த மாதம் ஆக்கிரமிப்புகளை நீக்க கோரி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து தாசில்தார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் நேரில் வந்து கிராம மக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கோரி காலக்கெடு வைத்திருந்தனர்.
இந்த காலக் கெடுவை முடிவடைந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்புகளை யாரும் அகற்றபடாத நிலையில் தாசில் தார் சரவணன், துணை தாசில்தார் செந்தில்நாதன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், ஹேமலதா மற்றும் போலீசார் முன்னிலையில் வீடுகள் இடித்து அகற் றும் பணி நடந்தது.
இதைத்தொடர்ந்து 14 குடியிருப்பு வீடுகளின் சுவர்கள் மற்றும் சாலையை அமைத்து பகுதிகளையும் ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதையடுத்து குடியிருப்புவாசிகள் அவரவர் உடமைகளை பொருட்களையும் வீடுகளில் இருந்து அகற்றி கொண்டனர். இதையடுத்து கிராம மக்களிடம் யாரும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்ட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சம் கிடைத்தது
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
விழாவின்போது, பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை தொகை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்துசமய அறநிலைத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் உத்தரவின்பேரில், உதவி ஆணையர் பாஸ்கரன் மற்றும் கோவில் ஆய்வாளர்கள் ஓசூர் பிரபு, தேன்கனிக்கோட்டை நாசிம்மமூர்த்தி, சூளகிரி பூவரசன் ஆகியோர் முன்னிலையில், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், கல்லூரி மாணவர்கள், ஊர் மக்கள் காணிக்கை தொகை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், 7 உண்டியல்களிலும் மொத்தம் ரூ. 11 லட்சத்து 2 ஆயிரத்து 278 தொகையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி யிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி ஏரிக்கரையில் பிணமாக கிடந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லிங்கம்மா ஏரிக்கரை காலபைரவர் கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி வெங்கடாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏரிக்கரையில் இறந்து கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற கொள் ளையனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத் தனர்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள பக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது28). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திரும-ணமாகி மனைவி உள்ளார்.
இந்த நிலையில் இளவரசன் தனது சொந்த ஊருக்கு வந்து இருந்தார். பின்னர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று ஆம்பூரில் இருந்து பெங்களூருவிற்கு சென்று கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி பாஞ்சாலி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இளவரசன் இயற்கை உபாதை கழித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் இளவரசன் மனைவியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர்.
இதனை பார்த்த இளவரசன் ஒடி வந்து திருடர்களுடன் போராடினார். உடனே அவர்கள் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து செயின் திருடனை பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் பிடிப்பட்டான். அவனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இதையடுத்து அந்த திருடனை பிடித்து குருபரபள்ளி போலீசில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரி பழையபேட்டை தஞ்சாவூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்வா (வயது29) என்பது தெரியவந்தது. உடனே அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மற்றொரு திருடன் அதே பகுதியை சேர்ந்த பொன்னையன் (32) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நிலத் தகராறில் தொழி லாளியை அடித்து கொன்ற தாய்& மகனை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஆனந்தூர் அடுத்த ஏரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45), கூலித்தொழிலாளி.
இவர் லதா என்ற பெண் ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இருவரும் கடந்த 18 ஆண்டுகளாக கணவன்& மனைவி போல் வீட்டில் வசித்து வந்தனர். குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் சரவணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவனின் மனைவி ஜீவஜோதி (55), அவரது மகன் ஜெயபிரகாஷ் (35) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவ ஜோதி, ஜெயபிரகாஷ் ஆகி யோர் கொடு அரிவா ளால் சரவணனை தாக்கி வெட் டினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்தார். இதை யடுத்து ஜீவஜோதியும், ஜெய பிரகாசும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையே ரத்த வெள் ளத்தில் உயிருக்கு போராடிய சரவணனை, அக்கம் பக்கத் தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின் னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சரவணன் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே சரவண னை கொன்ற தாய் ஜீவஜோதி, அவரது மகன் ஜெயபிரகாஷ் ஆகியோரை போலீ சார் கைது செய்தனர்.
நிலத்தகராறில் தொழி லாளியை தாயும், மகனும் சேர்ந்து அடித்தே கொன்ற சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே ஆந்திரா பஸ் மோதி வாலிபர் பலியானார்.
காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே நாட்டான் கொட்டாய் என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் ஆந்திர மாநில அரசு பஸ் திருப்பதியில் இருந்து தருமபுரிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டான் கொட்டாய் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரோட்டை கடக்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆந்திரா பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி யானார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து பற்றி தகவலறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப் பற்றி காவேரிப் பட்டணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து காவேரிப் பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் இறந்தவர் யார்? என்பது பற்றி விவரம் தெரியவில்லை. இதுபற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவேரிப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க லாம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 28 ஊராட்சிகளும் ஒவ்வொரு ஊராட்சிக்கு 6 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு நேற்று முதல் ஒரு வாரத்துக்கு பயிற்ச்சிகள் வழங் கப்படுகிறது.
முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி குழு கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், உழவர் உற்பத்தியாளர் குழு, சமுதாய வள பயிற்றுனர் குழு உள்ளிட்டவற்றுக்கு அரசு திட்டங்களை எவ்வாறு செயல் படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)கல்யாணசுந்தரம் மேற் பார்வையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோ.தமிழரசன், டி.ராமச்சந்திரன் முன்னிலையில் மாவட்ட அளவிலான பயிற்றுனர்கள் கௌதமி, லோகநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் உபகரணங்கள் அடங்கிய பேக் வழங் கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசமூர்த்தி, சீனிவாசராவ், மதியரசி, வளமைய அலுவலர் நிகோல பிரகாஷ் ஆகி யோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வாகனம் மோதியதில் வாலிபர் பலியானார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஒடையாண்டஅள்ளி கிராமத் தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). கார் டிரைவர். இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரகாசை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந் தார்.
இந்த நிலையில் பிரகாஷ், இன்று காலை காலை கடனை கழிப்பதற்காக அப் பகுதியில் சென்றார். பின்னர் ரோட்டில் நடந்து சென்ற போது அவர் மீது அடையாளம் தெரியாத வாக னம் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அருகில் இருந்த வர்கள் ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே எருது விடும் விழா நடந்தது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜி கொத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாரியம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நேற்று எருது விடும் விழா விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் சூளகிரி, பேரிகை, பாகலூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி, ராயக்கோட்டை காவேரிப்பட்டினம், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, பாலக்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து 300&க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த விழாவில் 100 மீட்டர் இலக்கை காளைகள் சீறிப்பாய்ந்து சென்றது.
இதில் இலக்கை வெகு விரைவில் கடந்த சூளகிரி அருகே உள்ள தீன்னூர் கிராமத்தை சேர்ந்த காலபைரவ காளைக்கு 55 ஆயிரம் முதல் பரிசையும் ,வேப்பனப்பள்ளி அருகே உள்ள மாதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜவுளி காளை 2 &ம் பரிசையும் தட்டி சென்றது.
விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கடன்தொல்லையால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தீர்த்த கிரிப்பட்டி ஏரியில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
நேற்று அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பட்லப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர செந்தில்குமாருக்கு தகவல் அளித்தனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகார்படி சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், டி.எஸ்.பி., தங்கவேலு, பர்கூர் இன்ஸ் பெக்டர் சவிதா ஆகியோர் விரைந்தனர்.
விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது25)என்பதும் அங்கு சொந்தமாக வாகனம் வைத்து ஓட்டி வந்ததும் தெரிந்தது. மேலும்தொழிலில் நஷ்டம் அடைந்ததால் 1 மாதத்திற்கு முன் தனது அக்கா வீடு உள்ள பட்லப்பள்ளியில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்ததும் தெரிந்தது.
ராஜசேகரின் அக்கா குடும்பத்தினர் அனைவரும் பெங்களூரில் தங்கியுள்ள நிலையில் பட்லப்பள்ளியில் உள்ள அக்கா வீட்டில் ராஜசேகர் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை தீர்த்தகிரிபட்டி ஏரியில் ராஜசேகர் சடலமாக கிடந் துள்ளார். இதையடுத்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள், வரவழைக் கப்பட்டு தடயங்கள் சேகரிக் கப்பட்டன.
அவர் இறந்து கிடந்த இடத்தின் அருகே மது பாட் டில்கள் மற்றும் சிகரெட் துண்டு உள்ளிட்டவை இருந்தது.
குடிபோதையில் நண்பர் களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய் தார்களா? கடன் தொல் லையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து பர்கூர் போலீசார் விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் ராஜசேகர், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
ராஜசேகரின் உடலை பிரேத பரிசோத னைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு பர்கூர் போலீசார் அனுப்பி வைத் தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சிமெண்டு மூட்டைகளுடன் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராயக்கோட்டை,
அரியலூரில் இருந்து 25 டன் சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு கர்நாடகா மாநிலம் தாவனகரே பகுதிக்கு டாரஸ் லாரி சென்றது. தருமபுரியை சேர்ந்த வேல்முருகன் (வயது 36) என்பவர் லாரியை ஓட்டி சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்ராயக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் சாலையில் உள்ள உள்ளுகுறுக்கி பஸ் ஸ்டாப் அருகே நேற்று இரவு சென்ற போது திடீரென லாரியில் தீப்பிடித்தது.
ராயக்கோட்டைதீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி லாரியில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனால் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிமெண்ட்மூட்டைகள் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






