என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேப்பனப்பள்ளி.

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் பகுதியில் வேப்பனப்பள்ளி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அந்த வழியாக இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த இருவரையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது இருசக்கர மோட்டார் வாகனத்தில் பையில் சுமார் 5 கிலோ கஞ்சாவை தெரியவந்தது. 

    இதையடுத்து விசாரணையில் அவர்கள் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னபத்தளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது37), தீர்த்தம் கிராமத்தை அஞ்ம்மா என்கின்ற குள்ளம்மா (52) ஆகியார் என்பது தெரியவந்தது. 

    ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல்  செய்தனர். 

    இதையடுத்து இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சூளகிரியில் பள்ளி மாணவி மாயமானார்
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் கடந்த 7ந்தேதி அன்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது குறித்து மாணவியின் பெற்றோர் சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
    சிங்காரப்பேட்டை அருகே தொழிலாளியை தாக்கிய வன ஊழியர் கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    சிங்காரப்பேட்டை அருகே உள்ள கொட்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் தர்மன் (வயது51). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (41). வன ஊழியர். உறவினர்கள். இந்த நிலையில் ரமேஷ் தர்மனின் மோட்டார்சைக்கிளை 2 நாட்களுக்கு முன்பு வாங்கி சென்றார். ஆனால் திரும்ப கொடுக்கவில்லை. இது குறித்து தர்மன் கேட்டார்.

    இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், தர்மனை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் காயம் அடைந்த தர்மன் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வன ஊழியர் ரமேசை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரியில்மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக கிருஷ்ணகிரி வட மேற்கு மண்டலம் சார்பில் பள்ளிகல்வித்துறையை மேம்படுத்த வலியுறுத்தி மண்டல அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. 

    இதற்கு மாவட்ட தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் பாபுசுந்தரம் (தர்மபுரி), சுதர்சனம் (திருப்பத்தூர்), ஜெயராஜ் சாமுவேல் (திருவண்ணாமலை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில சட்ட செயலாளர் சீனிவாசன், மேற்கு மண்டல செயலாளர் மாதேசன், மண்டல மகளிர் அணி செயலாளர் ஆனந்தி மாலா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்கும், மாணவர்களை நெறிப்படுத்தவும் புதிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிட வேண்டும். 

    அனைத்து பள்ளிகளுக்கும் அமைச்சு பணியாளர்களையும், அடிப்படை பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் நலதிட்டங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்திட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் தர்மபுரி மாவவ்ட பொருளாளர் அப்துல் அஜீஸ், அமைப்பு செயலாளர் நாகையா, தலைமையிட செயலாளர் சக்திவேல், மகளிர் அணி செயலாளர் கற்பகம், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சிவப்பிரகாசம், பொருளாளர் தமிழ்செல்வன், அமைப்பு செயலாளர் குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாலையை யானைகள் கூட்டம் கடந்து சென்றது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட் டை அருகே உள்ள   மரகட்டா காப்பு காட்டில் 10 யானைகள் முகாமிட் டுள்ளன. அவற்றில் 5 யானைகள் கூட்டத்தில இருந்து பிரிந்து அஞ்செட்டி சாலையை கடந்து சென்றது . இதை பார்த்த வாகன ஒட்டிகள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட் டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனதுறையில் விரைந்து வந்து தாரை, தப்பட்டை அடித்தும் அதிக ஒலியை எழுப்பியும் நீண்ட நேரம் போராடி தாவரக் கரை வனப் பகுதிக்குள் விரட்டி சென்றனர். இதனால் வாகன ஒட்டிகள் பெருமூச்சு விட்டு வாகனங்களில் சாலை யை கடந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பள்ளி மாணவ& மாணவிகள் தர்ணா போராட்டம் நடத் தினர்.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொரல் நத்தம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 350 மாணவர்கள் மாணவிகள் படித்து வருகின்றனர்.

     இந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு விரதம் நேற்று தொடங்கியது . இந்த நோன்பு இருந்ததால் பள்ளிக்கு வரும் முஸ்லிம் மாணவ &மாணவிகள் யாரும் உணவு உட்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மதிய உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் என்பவர் மாணவர்களை உணவு உட்கொள்ளுவும் தண்ணீர் அருந்தவும் வலியுறுத்தியுள்ளார். நோன்பு இருப்பதால் எதையும் உட்கொள்ள முடியாது என்று கூறினர்.

    இதையடுத்து மாணவ& மாணவிகளை  தலைமையாசிரியர் கலாவதி, ஆசிரியர் ஆங்கர் மற்றும்  உடற்கல்வி ஆசிரியர் செந்தில் ஆகியோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாலையில் சென்று தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.

     பள்ளி மாணவ மாணவிகள் கொரல்நாத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு 200&க்கும் மேற்பட்டவர்கள் பெற்றோர்களும் மாணவ-& மாணவிகளும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் பெற் றோர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 

    இந்த பேச்சுவார்த்தையில் பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்பதை உறுதி அளித்ததையடுத்து பெற்றோர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இதனால் அந்த பகுதியில் திடீரென 200&க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பொன்மொடி பேச்சுவார்த்தை நடத்தினார். விசாரணை முடிவில்  கணித ஆசிரியர் சங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் இருவரையும் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கி உத் தரவு பிறப்பித்தார். 

    இதை யடுத்து மீண்டும் பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில்  பரபரப்பு நிலவியது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை 2 மாத கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓசூர், 

    ஓசூர் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 20). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரும் 16 வயதுடைய சிறுமி ஒருவரும் உறவினர்கள் ஆவார். அந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் வாலிபர் சிதம்பரம் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். தற்போது 2 மாத கர்ப்பிணியாக அந்த சிறுமி உள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    வேப்பனப்பள்ளி அருகே ஒற்றை யானை தாக்கி பலியான விவசாயி குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.

    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி எப்ரி மகாராஜகடை ஆகிய வனப்பகுதிகளில் 12-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து விவசாய நிலங்களை நாசம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அந்த யானை, அங்கிருந்த விவசாய பயிர்களை நாசம் செய்து கொண்டிருந்தது.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி திம்மப்பா நாயுடு (வயது 70) என்பவர் தனது விவசாய நிலத்தை பார்வையிட சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு மறைந்து நின்ற ஒற்றை யானை, திம்மப்பா நாயுடுவை பார்த்ததும் விரட்ட தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், யானையிடம் இருந்து தப்பிக்க தலைத் தெறிக்க ஓடினார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து அங்கு வந்த ஒற்றை யானை திம்மப்பா நாயுடுவின் தலையில் மிதித்தது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் காலையில் வயலுக்கு சென்ற திம்மப்பா நாயுடு நீண்டநேரமாக வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தேடி பார்த்தனர். அப்போது விவசாய நிலத்தில் ஒற்றை யானை மிதித்து திம்மப்பா நாயுடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு அவரது உடலை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதையடுத்து வனத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், பலியான திம்மப்பாநாயுடு உடலை கைப்பற்றினர்.

    அப்போது விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசத்தால் உயிர்ப்பலிகள் அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

    இதையடுத்து வனத்துறை காப்பாளர் மகேந்திரன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காட்டு யானைகளை உடனடியாக விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து ஒற்றை யானை தாக்கி பலியான திம்மப்பா நாயுடு குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. திம்மப்பா நாயுடு உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நேர்லகிரி பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி 2 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் தற்போது மீண்டும் ஒரு விவசாயியை ஒற்றை காட்டு யானை கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள், கிராம மக்கள் பெரும் பீதியில் இருந்து வருகிறார்கள். 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே விவசாயியை தாக்கிய 3 பேரை கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மஜித் கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது45).  விவசாயியான இவரது நிலத்தில் உள்ள ஒரு மரத்தை அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (25), பாஞ்சாலி (49), வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து வெட்டியதாக கூறப்படுகிறது. 

    இதனை லட்சுமணன் சென்று தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் கடந்த 5&ந்தேதி அன்று தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் உள்பட 3 பேரும் சேர்ந்து லட்சுமணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த லட்சமணனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    இது குறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சக்திவேல் (25), பாஞ்சாலி (49), வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலை விரக்தியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர், 

    சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு போக்குவரத்து டெப்போ பின்புறம் பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது26). இவரது மனைவி பிரியா (22). இவர்களுக்கு திரும ணமாகி 5 வருடம் ஆகிறது.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பிரியா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தனிமையில் இருந்த ரமேஷ் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் அருகேயுள்ள கொல்லக் கொட்டாய் பகுதியில் உள்ள தனது அக்கா சித்ரா வீட்டில்  தங்கி வேலை பார்த்து வந்தார். 

    இந்த நிலையில்கடந்த சில தினங்களாக வேலை இல்லாமல் தவித்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவரை சித்ரா ஆறுதல் கூறினார். 

    இதையடுத்து இன்றுகாலை இயற்கை உபாதை கழிக்க செல்வதாக அக்காவிடம் கூறி சென்றார்.  வேலை கிடைக் காத விரக்தியில் மனமுடைந்து காணப்பட்ட ரமேஷ் அங்குள்ள மாந்தோப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுபற்றி அவரது அக்காவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக கிடந்த ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளுடன், 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    மத்திகிரி,
     
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரியில் டைட்டான் டவுன்ஷிப் உள்ளது. இந்த பகுதியில் உள்ள எம்.ஜி. நகரில் நேற்று காலை 2 கார்கள் கேட்பாரற்ற நிலையில் இருந்தன. அந்த காருக்குள் கட்டைகள் இருந்தன. 

    இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீசார் காரை திறந்து பார்த்த போது ஒரு காரில் 11 செம்மரக்கட்டைகளும், மற்றொரு காரில் 8 செம்மரக்கட்டைகளும் என மொத்தம் 19 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை எடையிட்டு பார்த்த போது 658 கிலோ இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். 

    2 கார்களும் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார்கள் ஆகும். அதன் உரிமையாளர் ஓசூரைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. செம்மரக்கட்டைகளையும், கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    ஆந்திர மாநிலம் திருப்பதி சுற்று வட்டார பகுதியில் செம்மரங்கள் அதிக அளவில் உள்ளன. அந்த பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதும், அவை பிடிக்கப்படுவதும் தொடர்ந்து வருகின்றன. இதனால் தற்போது பிடிபட்டுள்ள செம்மரக்கட்டைகள் அனைத்தும் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திகிரி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    இந்த நிலையில் செம்மரக்கட்டைகளுடன் பிடிபட்ட 2 கார்களுக்கு அருகில் மேலும் 3 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் யாரும் அங்கு வரவில்லை. அந்த கார்கள் செம்மரக்கட்டை கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா? அல்லது வேறு யாரும் அங்கு நிறுத்தி சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
    சூளகிரி:

    குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர தாலுகா லால் பகதூர் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற அப்புகான் (வயது 60). இவரது மனைவி சவுதம்மா (50). மணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. 

    அடிக்கடி மது குடித்து வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் சவுதம்மா அவரை பிரிந்தார். அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா காமன்தொட்டி அருகே உள்ள கோபசந்திரத்தில் தங்கி, அருகில் உள்ள உஸ்தலப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
    இந்த நிலையில் கடந்த 6ந் தேதி சவுதம்மா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணி தனது மனைவியை மாலூருக்கு வருமாறு அழைத்தார். ஏற்கனவே வாழ்ந்த காலத்தில் தன்னை கொடுமைப்படுத்திய கணவருடன் இனியும் வாழ வேண்டாம் என முடிவு செய்த சவுதம்மா தான் வர மாட்டேன் என தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணி, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சவுதம்மாவின் உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து உடலில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். பின்னர் சவுதம்மாவை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பலத்த தீக்காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது தொடர்பாக தோட்ட உரிமையாளர் ஜெயசங்கர் என்பவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி, மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மணி என்கிற அப்புகானை கைது செய்தார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×