என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது
வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பனப்பள்ளி.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் பகுதியில் வேப்பனப்பள்ளி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த இருவரையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது இருசக்கர மோட்டார் வாகனத்தில் பையில் சுமார் 5 கிலோ கஞ்சாவை தெரியவந்தது.
இதையடுத்து விசாரணையில் அவர்கள் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னபத்தளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது37), தீர்த்தம் கிராமத்தை அஞ்ம்மா என்கின்ற குள்ளம்மா (52) ஆகியார் என்பது தெரியவந்தது.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story






