என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
வேப்பனப்பள்ளி அருகே பள்ளி மாணவ- மாணவிகள் தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பள்ளி மாணவ& மாணவிகள் தர்ணா போராட்டம் நடத் தினர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொரல் நத்தம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 350 மாணவர்கள் மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு விரதம் நேற்று தொடங்கியது . இந்த நோன்பு இருந்ததால் பள்ளிக்கு வரும் முஸ்லிம் மாணவ &மாணவிகள் யாரும் உணவு உட்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மதிய உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் என்பவர் மாணவர்களை உணவு உட்கொள்ளுவும் தண்ணீர் அருந்தவும் வலியுறுத்தியுள்ளார். நோன்பு இருப்பதால் எதையும் உட்கொள்ள முடியாது என்று கூறினர்.
இதையடுத்து மாணவ& மாணவிகளை தலைமையாசிரியர் கலாவதி, ஆசிரியர் ஆங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் ஆகியோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாலையில் சென்று தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.
பள்ளி மாணவ மாணவிகள் கொரல்நாத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு 200&க்கும் மேற்பட்டவர்கள் பெற்றோர்களும் மாணவ-& மாணவிகளும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் பெற் றோர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்பதை உறுதி அளித்ததையடுத்து பெற்றோர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் திடீரென 200&க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பொன்மொடி பேச்சுவார்த்தை நடத்தினார். விசாரணை முடிவில் கணித ஆசிரியர் சங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் இருவரையும் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கி உத் தரவு பிறப்பித்தார்.
இதை யடுத்து மீண்டும் பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story






