என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமித்து கட்டிப்பட்ட வீடுகளை ஜெசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்ட போது எடுத்த படம்.
    X
    ஆக்கிரமித்து கட்டிப்பட்ட வீடுகளை ஜெசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்ட போது எடுத்த படம்.

    வேப்பனப்பள்ளி அருகே ஆக்கிரமித்து கட்டிய 14 வீடுகள் இடித்து அகற்றம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஆக்கிரமித்து கடடிய 14 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி மாதேப்பள்ளி கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. 

    அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணையில் மாதேப்பள்ளி கிராமத்தில் 14 குடியிருப்பு வீடுகள் சாலையை ஆக்கிரமித்து வீடுகளையும் சுவர்களையும் கட்டி இருப்பது தெரிய வந்தது. 

    இதையடுத்து கடந்த மாதம் ஆக்கிரமிப்புகளை நீக்க கோரி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து தாசில்தார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் நேரில் வந்து கிராம மக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கோரி காலக்கெடு வைத்திருந்தனர். 

    இந்த காலக் கெடுவை முடிவடைந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்புகளை யாரும் அகற்றபடாத நிலையில்  தாசில் தார் சரவணன், துணை தாசில்தார் செந்தில்நாதன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், ஹேமலதா மற்றும் போலீசார் முன்னிலையில்  வீடுகள் இடித்து அகற் றும் பணி நடந்தது.

    இதைத்தொடர்ந்து 14 குடியிருப்பு வீடுகளின் சுவர்கள் மற்றும் சாலையை அமைத்து பகுதிகளையும் ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதையடுத்து குடியிருப்புவாசிகள் அவரவர் உடமைகளை பொருட்களையும் வீடுகளில் இருந்து அகற்றி கொண்டனர். இதையடுத்து கிராம மக்களிடம் யாரும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்ட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர்.
    Next Story
    ×