என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி தீப்பற்றி எரிவதை படத்தில் காணலாம்.
    X
    லாரி தீப்பற்றி எரிவதை படத்தில் காணலாம்.

    சிமெண்ட் மூட்டைகளுடன் தீப்பிடித்து எரிந்த லாரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சிமெண்டு மூட்டைகளுடன் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ராயக்கோட்டை, 

    அரியலூரில் இருந்து 25 டன் சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு கர்நாடகா மாநிலம் தாவனகரே பகுதிக்கு டாரஸ் லாரி சென்றது.  தருமபுரியை சேர்ந்த வேல்முருகன் (வயது 36) என்பவர் லாரியை ஓட்டி சென்றார். 

    கிருஷ்ணகிரி மாவட்டம்ராயக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் சாலையில் உள்ள உள்ளுகுறுக்கி பஸ் ஸ்டாப் அருகே நேற்று இரவு சென்ற போது திடீரென லாரியில் தீப்பிடித்தது. 

    ராயக்கோட்டைதீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி லாரியில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனால் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிமெண்ட்மூட்டைகள் எரிந்து நாசமானது. 

    இந்த தீ விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×