என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தேன்கனிக்கோட்டை அருகே மதனகிரி முனீஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மதனகிரி முனீஸ்வர சுவாமி கோவில் தேர் திருவிழா நடந்தது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே  உள்ள தண்டரை ஊராட்சிக்குட்பட்ட அடவி சாமிபுரம் கிராமத்தில் மதனகிரி ஸ்ரீ முனீஸ்வர சுவாமி கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். 48ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் தேர் திருவிழா இந்த ஆண்டும் விமரிசையாக நடைபெற்றது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தீர்த்தம் தெளித்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் உற்சவ மூர்த்தியை அமர்த்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.  வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க ஹர, ஹர மகாதேவ் என பக்தி கோஷத்துடன் பக்தர்கள் அனைவரும் தேரின் வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வலம் வந்து தேரை நிலை நிறுத்தினர். இதில் முன்னதாக  தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். 

    தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், விழா குழு தலைவர் சம்பங்கிராம ரெட்டி , தண்டரை ஊராட்சி தலைவர் நீலம்மா ஜெயராமன், மல்லசந்திரம் ஊராட்சி தலைவர் சுரேகா முனிராஜ் ,தொழில் அதிபர் சுரேஷ் பாபு, விழா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு நீர் மோர், பானகம், அன்னதானம் வழங்கினர் 

    தொடர்ந்து இரவு  நாடகம் மற்றும் வாணவேடிக்கைகளுடன் கிராம தேவதைகளின் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×