என் மலர்
கிருஷ்ணகிரி
- அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓசூர் ஜுஜுவாடியில் நேற்று நடைபெற்றது.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே, பட்டாசு கடை என்ற பெயரில் வெடி மருந்துதான் கடைகளில் வைக்கப்படும்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓசூர் ஜுஜுவாடியில் நேற்று நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு, வடக்கு பகுதி செயலாளர் அசோகா தலைமை தாங்கினார். ஓசூர் தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன்,மேற்கு பகுதி செயலாளர் மஞ்சுநாத் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். கிழக்கு பகுதி செயலாளர் ராஜி வரவேற்றார்.
இதில், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதி களிலும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும். அடுத்து தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தான் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே போல், நாடாளுமன்ற தேர்தலிலும் 40 இடங்களிலும் இரட்டை இலை வெற்றி வாகை சூடும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கனவை, செயலை நனவாக்க இந்த 52 -வது ஆண்டு தொடக்க விழாவில் அனைவரும் உறுதி ஏற்போம்.
தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கஞ்சா விற்பனை கொடி கட்டி படிக்கிறது.கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே, பட்டாசு கடை என்ற பெயரில் வெடி மருந்துதான் கடைகளில் வைக்கப்படும். கிருஷ்ணகிரி, அரியலூர், போன்ற இடங்களில் நடந்த விபத்துகளுக்கு என்ன காரணம்? பட்டாசு என்ற பெயரில் வெடிமருந்துதான். தி.மு.க. ஆட்சியில் விலை வாசி உயர்ந்து விட்டது. தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றாத அரசாக, தி.மு.க. அரசு இருந்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை.
இவ்வாறு தம்பிதுரை எம்.பி. பேசினார்.
மேலும், மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பால கிருஷ்ணரெட்டி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் மதன், முன்னாள் நகர செயலா ளரும், மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான எஸ்.நாராயணன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மாநில, மாவட்ட மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கட்சி முன்னோடிகள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- மாணவிகள் பிரிவில் 3 பேர் 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.
- 27 பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கொங்கு சகோதயா சார்பில் கடந்த 14-ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள வெங்க டேஸ்வரா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நாளந்தா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில் தனிநபர் பிரிவில் 2 பேர் முதலிடமும், மாணவிகள் பிரிவில் 3 பேர் 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.
14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான தொடர் நீச்சல் 200 மீட்டர் பிரிவில் 2-ம் இடமும், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான ப்ரீ ஸ்டைல் 4x50 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும், 12 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 4x25 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும், 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 4x50 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும், 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான 4x50 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும் பிடித்தனர். மொத்தமாக 2 தங்கம், 4 வெள்ளி, 21 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சாதனை புரிந்த மாணவர் களை பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் முண்டீஸ்வரி கொங்கரசன், இயக்குனர்கள் வழக்கறிஞர் கவுதமன், மருத்துவர் புவியரசன் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள், ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
- சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தகவல்.
கிருஷ்ணகிரி,
மாவட்டத்தில் இந்த ஆண்டில் 1701 சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் ரூ.15 கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கூறினார். கிருஷ்ணகிரி நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் நேற்று, மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் காந்திமதி முன்னிலை வகித்தார்.
முகாமை தொடங்கி வைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு பேசியதயாவது:-
சைபர் கிரைம் குற்றங்கள்
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் சார்பில், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அக்டோபர் மாதம் சைபர் கிரைம் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்திலேயே முதன்முறையாக சைபர் கிரைம் சார்பில் ரத்த தான முகாம் கிருஷ்ணகிரியில் நடைபெறுகிறது.
அறிவியல் வளர்ச்சி மக்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவிற்கு குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆன்லைனில் புதுப்புது வழிகளில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம், பணம் இரட்டிப்பு, செயல்முறை கட்டணம் என பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. இந்த மோசடி கும்பல்களிடமிருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் 1701 புகார்கள் வரபெற்றுள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் ஆன்-லைனில் மூலம் ரூ.15 கோடியே 34 லட்சத்து 10 ஆயிரத்து 283-க்கு மோசடி நடந்துள்ளது. இதில் மோசடியில் ஈடுபட்ட நபர்களின் வங்கி கணக்குகள் மூலம் 14 கோடியே 87 லட்சத்து 40 ஆயிரத்து 888 முடக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.33 லட்சத்து 58 ஆயிரத்து 162 பணம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலும் பணத்தை இழந்தவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள், படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகும். பொது மக்கள், மோசடி களில் ஏமாறாமல் இருக்க செல்போன் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும் போது செயலின் நம்பகத்தன்மை, அதில் சுயவிவரங்களை கொடுக்கலாமா என ஆராய வேண்டும்.
ஆன்லைனில் முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் உண்மை தன்மையை அறிய வேண்டும். ஆன்லைனில், 99 சதவீத நிறுவனங்கள் போலியாக உள்ளன. நாம் செலுத்தும் பணத்திற்கு முதலில் லாபம் தருவது போல் பணம் கொடுத்து, முதலீடு செய்யும் பெரிய தொகையை ஏமாற்றி விடுவார்கள். எனவே ஆன்லைன் முதலீட்டை தவிர்ப்பது நல்லது. பான்கார்டு' விவரங்களை பதிவு செய்ய செல்போனுக்கு எந்த வங்கியும் குறுஞ்செய்தி அனுப்புவதில்லை.
அவ்வாறு வருபவை அனைத்தும் போலியானது. ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட வகைகளில் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்தால், 1930 என்கிற இலவச எண்ணில் புகார் அளிக்கவும். மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேரிலும் புகார் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04343 -294755 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு கூறினார்.
இந்த ரத்த தான முகாமில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் ரத்த தானம் செய்தனர்.
- பணம் வைத்து சூதாடிய 46 பேர் பிடிபட்டனர்
- ரூ.3,500 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்த 40 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல பணம் வைத்து சூதாடியதாக 46 பேர் பிடிபட்டனர்.
லாட்டரி
மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி விற்பனை செய்த ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்க னிக்கோட்டை, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி பகுதிகளை சேர்ந்த 14 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா
இதே போல மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக ஊத்தங்கரை, சாமல்பட்டி, கல்லாவி, சிங்காரப்பேட்டை, நாகரசம்பட்டி, பர்கூர், கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, தளி, ராயக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா
மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா, என சோதனை நத்தினார்கள். இதில் கந்திகுப்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, பாகலூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,500 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சூதாட்டம்
அதே போல மாவட்டத்தில் எங்கும் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பணம் வைத்து சூதாடியதாக கல்லாவி, சிங்காரப்பேட்டை, பர்கூர், நாகரசம்பட்டி, வேப்பனப்பள்ளி, ஓசூர், பாகலூர், மத்திகிரி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 46 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.4,300 பறிமுதல் செய்யப்பட்டது.
- திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
- பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. 6 வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மாதம் செப்டம்பர் 26-ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிலையில், ஒரு வாரத்திலேயே வகுப்பறையின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைக்கு வெளியில் வராண்டாவில் மேற்கூரையிலும் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று 3-வது முறையாக வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில், கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.
திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
நேற்று, பள்ளி வராண்டாவில் ஓவியப் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிய அளவில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து. அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால், நல்வாய்ப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் எந்தவித காயமின்றி தப்பினர்.
பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- 1 கோடியே 20 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் கட்டிடம் கட்டுவதற்கான பணி துவங்கியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நி லைப்பள்ளியில் குருபரப் பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாண விகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய வகுப்பறை வசதி இல்லாமல் இருந்தனர். இதையடுத்து நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 20 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 8 வகுப்ப றைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணி நேற்று துவங்கியது.
இந்த கட்டிடத்தின் கட்டு மான பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்த லைவர் தட்ரஅள்ளி நாகராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், குருபரப்பள்ளி தலைவர் கோவிந்தன், பெத்த னப்பள்ளி தலைவர் பழனி, ஓட்டுனர் அணி மாணிக்கம், கவுன்சிலர் சந்திரன், முன்னாள் தலைவர் கேபிள்.மணி, விவசாய அணி மோகன், சென்றாயன், சேகர், காந்திஜிலானி, திருப்பதி, வெங்கடாசலம், சிவாஜி, முருகன், தலைமை ஆசிரியர் ஆரோக்கியம், சுரேஷ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்
- பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. கட்சி தொடங்கி 52 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் பையூர் பெ.ரவி, நகர செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே. அசோக்குமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பி.டி. சுந்தரேசன், முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், பால்வளத் தலைவர் குப்பு சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன் , மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
- 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- மாணவர்கள், ஆசிரியர்கள் எந்தவித காயமின்றி தப்பினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. 6 வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மாதம் செப்டம்பர் 26-ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிலையில், ஒரு வாரத்திலேயே வகுப்பறை யின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைக்கு வெளியில் வராண்டாவில் மேற்கூரையிலும் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று 3-வது முறையாக வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில், கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.
திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். நேற்று, பள்ளி வராண்டாவில் ஓவியப் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிய அளவில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து. அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால், நல்வாய்ப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் எந்தவித காயமின்றி தப்பினர்.
பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- பட்டாசு கடை நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது.
- யாராவது அனுமதியின்றி விற்பனை செய்கிறார்களா? என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஓசூர்:
தமிழக-கர்நாடகா மாநில எல்லையான பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அத்திப்பள்ளியில் ஒரு பட்டாசு கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர்.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பட்டாசு கடை நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது.
மேலும், விதிமுறைகளை மீறி யாராவது பட்டாசுகளை பதுக்கி விற்பனை செய்தல், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
மேலும் மாவட்டத்தில் யாராவது அனுமதியின்றி விற்பனை செய்கிறார்களா? என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே ஜுஜுவாடி திருவள்ளுவர் நகரில் முறையான அரசு அனுமதியின்றி, 85 அட்டைப் பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது40) என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்து, பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், நேற்று தொடர் நடவடிக்கையாக அதே பகுதியில், போலீசார் அதிரடி ஆய்வு செய்து, தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 32 அட்டைப்பெட்டிகளில் பட்டாசுகளை அனுதியின்றி பதுக்கிவைத்திருந்ததாக வெங்கட விஜயன் (28) என்பவரை போலீசார் கைது செய்து, பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
- அக்கம் பக்கத்தினர் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- யாராவது அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகை பக்கம் கோட்ட சாதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா.
இவரது மகன் பாலாஜி (வயது 35). டிரைவரான இவருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவியும், விஷ்னு,ஜோதி மூர்த்தி என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவியும் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் பாலாஜி தனியாக வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பாலாஜி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீடு வெளிப்புறம் பூட்டிருந்த நிலையில், உறவினர்கள் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாலாஜி பாதி அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனே பாலாஜியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை வேறு யாராவது அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- பெண்ணை தாக்கிய சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மஜீத்கொல்ல அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயி. இவரது மகள் வெண்பா (வயது20).
அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் வித்யசாகர் (25), அவரது நண்பர் சந்தோஷ் (25). இருவரும் ராணுவ வீரர்கள் ஆவர்.
இந்நிலையில் மூர்த்திக்கும், வித்யசாகருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே சந்தோஷ், வித்யசாகர் ஆகிய 2 பேரும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வித்யசாகருக்கும், மூர்த்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த வெண்பா அதனை தட்டிக்கேட்டார்.
உடனே வித்யசாகரும், சந்தோஷூம் சேர்ந்து மூர்த்தியையும், வெண்பாவையும் சரமாரியாக தாக்கினர். இதில் தந்தை, மகள் 2 பேரும் காயமடைந்தனர். உடனே அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து வெண்பா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராணுவ வீரர்களான வித்யசாகர், சந்தோஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
பெண்ணை தாக்கிய சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஊத்தங்கரை அருகே தரைப்பாலத்தில தேங்கும் நீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டியில் ரெயில் வே தரைப்பாலம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அ.தி.மு.க., ஆட்சி யில் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் மழைக்கா லங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தேங்கிய தண்ணீரை கடந்த செல்லும் பொழுது பழுதாகி நிற்பதும், போக்குவரத்து தடையும் ஏற்படுகிறது.
காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தத் தரை பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நிரந்தர மான நடவடிக்கை எடுக்க கோரி சாமல்பட்டி பொது மக்கள் மற்றும் வணிகர்கள் அனைத்து கடைகளையும் இன்று அடைத்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திமுகவினர், அதிமுகவினர், வணிகர் சங்க அமைப்பினர் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன், ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் மறியலில் ஈடுப்பட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.






