என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது
    X

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது

    • கிருஷ்ணகிரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது செய்யப்பட்டார்.
    • கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் மஞ்சு என்கிற மஞ்சுநாத் (வயது 26). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, அடிதடி, பெட்ரோல் குண்டு வீச்சு என, 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, குருபரப்பள்ளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

    கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த மஞ்சுநாத்தை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். இவர்கள் மஞ்சுநாத் யார் யாரிடம் தொடர்பில் உள்ளார், என்ன திட்டம் போடுகிறார் என ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் போலீஸ் தன்னை நெருங்குவதை தெரிந்து கொண்ட மஞ்சுநாத் தனக்கு நெருக்கமானவர்களை தவிர யார் கண்ணிலும் படாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி அடுத்த மேல் சோமார்பேட்டைக்கு மஞ்சுநாத் வருவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மேல்சோமார்பேட்டையில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கண்காணித்த வண்ணம் இருந்தனர். நேற்று மதியம் மேல்சோ மார்பேட்டைக்கு வந்த மஞ்சுநாத்தை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதி களில் தொடர் கொள்ளையில் ஈடுபட முயன்றதும், கொள்ளைக்கு பின் வெளி மாநி லங்களுக்கு தப்ப முயன்றதும் தெரிந்தது. தொடர்ந்து மஞ்சுநாத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×