என் மலர்
கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரியில் ரேஷன் கடை, மாணவர் விடுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
- வாசிப்பு திறன்களை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பழைய பேட்டை ஐஇஎல்சி நடுநிலைப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி போகனப்பள்ளி நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஐ.இ.எல்.சி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு கணிதம் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன்களை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுத்தினார்.
போகனப்பள்ளி நியாய விலைக்கடையில் பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டை தாரர்களின் விபரங்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர்,
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், குழந்தைகளின் உயரம், எடை மற்றும் கற்றல் திறன் குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கன்வாடி மையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியை நேரில் பார்வையிட்டு, விடுதியில் மாணவர்களுக்கு சமைக்கப் படும் உணவு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில் நடத்தப்படும் பாடத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
- அடுத்த ஆண்டு முதல் கர்நாடகா முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
- இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, கர்நாடக அரசு தலா ரூ. 5 லட்சம் தருவதாக உறுதியளித்தது.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப் பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7-ந் தேதி நடந்த வெடிவிபத்தில் 14 பேர் சம்பவத்தன்றும், மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் என இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை, கர்நாடக உள்துறை மந்திரி ஜி.பரமேஸ்வரா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் முழு விபரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பரமேஸ்வரா, "பட்டாசு கடை தீ விபத்தில் இன்றுடன் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம், பாடம் கற்றுத் தந்துள்ளது. இந்தாண்டு, தீபாவளி பண்டிகையின் போது, பெங்களூருவில் பட்டாசுக்கு தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல், டெல்லியைப் போன்று, கர்நாடக மாநிலம் முழுவதும் அனைத்து ரக பட்டாசுகளுக்கும் தடைவிதிக்கப்படும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, கர்நாடக அரசு தலா ரூ. 5 லட்சம் தருவதாக உறுதியளித்தது. அந்த தொகை விரைவில் வழங்கப்படும். விபத்து நடந்த பட்டாசு கடையின் உரிமம் கடந்த 2022-ஆம் ஆண்டு, லைசென்ஸ் தேதி காலாவதியானதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அதன் உரிமையாளர் நவீன் என்பவர் போலியான சான்றுகளை வைத்து பட்டாசு கடை நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். இந்த ஆய்வின்போது, தீயணைப்பு துறை ஏடிஜிபி கமல்நாத், ஐஜிபி ரவி காந்தே கவுடா, டி.ஐ.ஜி.ரவி சென்னன்னா,பெங்களூருரூரல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புருசோத்தம், ஆனேக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் குமார், அத்திப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா கவுடா, சப் இன்ஸ்பெக்டர் நாராயண் ராவ், ஆகியோர் உடன் இருந்தனர்.
- கிருஷ்ணகிரியில் பால் விலையை உயர்த்த கோரி உற்பத்தியாளர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
- 10 ஆயிரத் திற்கும் மேற்பட் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஆரம்ப சங்கங்கள் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது.
கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க கிருஷ்ணகிரி வட்டக்குழு சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கி னார். மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட துணை செயலாளர் ஜெய் சங்கர், வெங்கடாசலம், குணசேகரன், சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநிலத் தலைவர் முகமது அலி, மாநில துணைத் தலைவர் சிவாஜி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் அண்ணாமலை ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். இதில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து மாநில தலைவர் முகமது அலி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ளனர். இதே போல், 10 ஆயிரத்திற்கும் மேற்பட் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஆரம்ப சங்கங்கள் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. இதே நிலைமை நீடித்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப பால் உற்பத்தியாளர் சங்கங்கள் படிப்படியாக மூடக்கூடிய ஆபத்து ஏற்படும். ஆவினுக்கு பால் வராது.
தனியார் பாலை நம்பித் தான் பொதுமக்கள் இருக்க வேண்டும். ஆவின் நெருக்கடி நிலைக்கு, தமிழக அரசின் தவறான நடவடிக்கையே காரணமாகும். தனியார் பால் நிறுவனங்களை பாதுகாக்கக்கூடிய வகையில் இந்த ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே தான் தனியார் பால் கொள் முதல் விலையைவிட ஆவினில் 10 ரூபாய் குறைவாக விலை நிர்ணயித்துள்ளனர்.
எனவே, உடனடியாக பால் கொள்முதலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்தி, பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ.45 எனவும், எருமைப்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.54 எனவும் கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். கால்நடை தீவனங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். எனவே தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களை அழைத்துச் பேச வேண்டும் அடுத்த கட்டமாக பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
- 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பாக்கு, பழம் மற்றும் பூ உள்ளிட்ட பொருட்கள் சடங்குகள் செய்து வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப் பள்ளி ஊராட்சி, சமுதாய கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதற்கு கலெக்டர் சரயு, டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்து குத்து விளக்கேற்றினார்கள். மேலும் மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நழுங்கு வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கி னார்கள்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றத்திற்காக வும், பெண்கல்வி ஊக்கப்படுத்திடவும் எண்ணற்ற பெண்கள் சார்ந்த நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களின் நலம் காக்கவும், தாய்சேய் நலனை மேம்படுத்து வதற்கும் சமுதாய வளைகாப்பு எனும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்வினை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை அங்கன்வாடியில் பயன்பெறும் பயணா ளிகளில் 1000 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலுங்கு வைத்து சீர் வரிசை பொருட்களான புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம் மற்றும் பூ உள்ளிட்ட பொருட்கள் சடங்குகள் செய்து வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து. புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் உள்ளிட்ட 5 வகையான உணவுகள் மற்றும் லட்டு பரிமாறப்பட்டது.
இன்றைய குழந்தைகள் தான் நாளைய சமுதாயம். ஒரு குழந்தையின் வளர்ச்சி அக்குழந்தையின் தாயின் கர்ப்ப பையில் உருவான போதே ஆரம்பமாகி விடுகிறது. ஒரு குழந்தை ஆரோக்கி யமான, அறிவான, உற்பத்தித் திறன் நிறைந்த குழந்தையாக உருவாக அந்த கர்ப்பிணி தாய்க்கு கர்ப்பமான நாளிலிருந்தே சிறப்பு கவனம் அளிக்க வேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் குறைந்தது 5 முறையாவது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பம் என்று தெரிந்த வுடன் அங்கன்வாடியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் மட்டுமே பிரசவம் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்பதால் தாய் மூன்று வேளை உணவுடன் ஒரு வேளை உணவை கூடுதலாகவும், அனைத்து ஊட்டச்சத்து களும் அடங்கிய உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அன்றாட உணவில் பச்சைக் கீரை வகைகள், காய்கறிகள் அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்கள், மீன், முட்டை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் கடினமான வேலைகளை தவிர்க்க வேண்டும். பகலில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும். மன மகிழ்ச்சியுடன் இருப்பது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். பெண் குழந்தைகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உட்கொண்டு அறிவுள்ள ஆரோக்கியமான குழந்தை களை பெற்றெ டுத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார்
ஓசூர்,
ஓசூர் எம்ஜிஆர் கல்லூரியில் பி.காம். (கணினி பயன்பாட்டியியல்) துறை சார்பில் "இன்றைய நவீன யுகத்தில் வணிக நிலைப்புத் தன்மை மற்றும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். துறைத் தலைவர் வெங்கடே சன் வரவேற்று பேசினார். இதில் புதுச்சேரி பல்கலைக் கழகத்திலிருந்து, இணைப் பேராசிரியர் பாண்டு, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் வணிக நிலைத்தன்மை அதில் ஏற்பட்ட மாற்றங்கள் , புதிய தொழில் வாய்ப்புகள் , கண்டுபிடிப்புகள், தொழில் வளர்ச்சிப் பற்றி விளக்கி பேசினார்.
மேலும் இதில், பிற கல்லூரியில் இருந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரை களைச் சமர்ப்பித்து பேசினர்.
இந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை, கணினி பயன்பாட்டியியல் துறை உதவி பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.முடிவில் உதவி பேராசிரியர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.
- சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
- 9 மாணவி கள் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் சென்ற 17 மற்றும் 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் மாணவிகளுக்கான கபடி போட்டியில் சூப்பர் சீனியர் எனப்படும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் மத்தூர் கலைமகள் கலாலயா பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாநில அளவிலான கபடி போட்டிக்கு வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் சூரிய மூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, கலைமகள் களாலயா பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மோகன் உள்ளிட்டோர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி னார்கள்.
கலைமகள் பள்ளியின் சூப்பர் சீனியர் கபடி குழுவின் கேப்டன் ரஞ்சனி மற்றும் துணை கேப்டன் பவித்ரா உள்பட 9 மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- ஊத்தங்கரை அருகே மோட்டர் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லா வி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோழி நாயக்கன்பட்டியை சேர்ந்த வர் சேது. விவசாயி.
இவருடைய மனைவி சுருதி (வயது 26). இந்த நிலையில் சம்ப வத்தன்று சுருதி காலை 11 மணி அளவில் தன்னுடைய வீட்டில் இருந் து மோட்டார் சைக்கிளில் கணவரை பார்க்க நிலத் திற்கு சென்று உள்ளார் .
அப்போது அவர் பின்னால் இரு சக்கர வாக னத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் பின் தொ டர்ந்து வந்துள்ளார். அப் போது சுருதியின் மோட்டார் சைக்கிள் அருகே வந்த அவர் அவரிடம் ஏதோ பேசுவது போல பாவனை செய்து அருகில் வந்துள்ளார். இவர் என்ன என்று கேட்பதற்குள் அவரது கவனத்தை திசை திருப்பி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்கத் தாலி பறித்து கொண்டு இருசக்கர வாக னத்தில் தப்பியோடினார். இதில் மோட்டர் சைக்கிளி ருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த சுருதிக்கு கழுத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.
இது குறித்து சுருதி கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். பட்டப் பகலில் மோட்டர் சைக்கி ளில் வந்த பெண்ணிடம் தாலி பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளாபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் 600 ஆண்டுகள் பழமையானது என தொல்லியல்த்துறை ஆய்வில் தகவல்
- இக்கோவிலின் சிறப்பு கருவறையைச் சுற்றி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களாகும்
கும்ளாபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என வரலாற்று ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது-
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்ப டுத்தும் குழுவும் இணைந்து இம்மா வட்டத்தின் பல்வேறு பகுதி களில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாறை ஓவியங்கள், கல்திட்டைகள், கல்வெட்டுகள், நடுகற்கள், கோவில்கள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றின் வரலாற்றுச் சிறப்பினை ஆராய்ந்து, ஆவணப்படுத்தி, பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளியிட்டும் வருகிறது.
அந்த வகையில் தளி அருகே கும்ளாபுரத்தில் மேற்கொண்ட ஆய்வி ன்போது அந்த ஊர் லட்சுமி நரசிம்மர் கோவில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது:
கும்ளாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியை ஆண்ட விஜயநகரர் காலத்தில் கட்டப்பட்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. கருவறை அர்த்தமண்டபம், முகமண்டபம் அனைத்தும் கருங்கல்லால் வேலைப்பா டுகளுடன் கூடியதாகக் கட்டப்பட்டுள்ளது. கருவ றைக்கு மேல் உள்ள விமானப்பகுதி அண்மைக் காலத்தைச் சேர்ந்தது.
இக்கோவிலின் சிறப்பு கருவறையைச் சுற்றி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களாகும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜய குமார், வரலாற்று ஆய்வாளர் சரவணக்குமார், ராமச்சந்திரன் மற்றும் அவ்வூரைச் சேர்ந்த சிக்கண்ணா மற்றும் பலர் உடனிருந்தனர்.
- கிருஷ்ணகிரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது செய்யப்பட்டார்.
- கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் மடக்கி பிடித்தனர்.
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் மஞ்சு என்கிற மஞ்சுநாத் (வயது 26). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, அடிதடி, பெட்ரோல் குண்டு வீச்சு என, 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, குருபரப்பள்ளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த மஞ்சுநாத்தை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். இவர்கள் மஞ்சுநாத் யார் யாரிடம் தொடர்பில் உள்ளார், என்ன திட்டம் போடுகிறார் என ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் போலீஸ் தன்னை நெருங்குவதை தெரிந்து கொண்ட மஞ்சுநாத் தனக்கு நெருக்கமானவர்களை தவிர யார் கண்ணிலும் படாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அடுத்த மேல் சோமார்பேட்டைக்கு மஞ்சுநாத் வருவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மேல்சோமார்பேட்டையில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கண்காணித்த வண்ணம் இருந்தனர். நேற்று மதியம் மேல்சோ மார்பேட்டைக்கு வந்த மஞ்சுநாத்தை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதி களில் தொடர் கொள்ளையில் ஈடுபட முயன்றதும், கொள்ளைக்கு பின் வெளி மாநி லங்களுக்கு தப்ப முயன்றதும் தெரிந்தது. தொடர்ந்து மஞ்சுநாத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் காப்பீடு வழங்க கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
- திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை வைக்க நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பான பட்டாசு விற்பனை குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
சமீபத்தில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட வெடி விபத்துக்கள், மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடை வைப்பவர்கள், அரசின் விதிமுறைகள், நிபந்தனைகள் கட்டாயம் பின்பற்றிட வேண்டும். பட்டாசு கடைகளில் அலங்கார விளக்குகள், சீரியல் லைட் ஆகியவற்றின் மூலம் எளிதில் தீப்பெறி ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அதனை பயன்படுத்த கூடாது.
மேலும், பட்டாசு கடைக்குள் ஏசி, யுபிஎஸ், லெட் ஆசிட் பேட்டரி, டீசல் ஜெனரேட்டர்கள், அகர்பத்திகள், எண்ணெய் விளக்குகள் பயன்படுத்த கூடாது. மது போதையில் உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றவர்களை பட்டாசுகள் இறக்குவதிலோ, கொண்டு செல்வதிலோ ஈடுபடுத்த கூடாது. பட்டாசு கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் காப்பீடு செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உரிமம் வழங்கப்பட மாட்டாது.
சென்னை போன்ற பெருநகரங்களில் இருப்பது போல், திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு கடைகள் வைப்பதற்கான உரிமம் பெற்ற பிறகே, பட்டாசுக்கள் கொள்முதல் செய்ய வேண்டும். அதிகளவில் பட்டாசுக்கள் கொள்முதல் செய்து இருப்பு வைத்தால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், தடை செய்யப்பட்ட சீன பட்டாசுக்கள் விற்பனை செய்யக் கூடாது.
லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் பட்டாசு கடைக்கு அருகில் நிறுத்தபடுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும், குழந்தைகளை பட்டாசு கடைகளுக்கு அழைத்து செல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, தனி தாசில்தார் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
- குழந்தைகள் இல்லாத காரணத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு
ஓசூரில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி களின் மாணவ,மாண விகளை அழைத்து செல்ல பயன்படுத்தும் வேன் மற்றும் பேருந்துகள் போக்கு வரத்து விதிமு றைகளை மீறி அதிக வேகமாக செல்கின்றன.
இந்த நிலையில் ஓசூர் பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியில் நேற்று தனியார் பள்ளி வேன் ஒன்று மின்கம்பத்தில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, அதில் மாணவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்கம்பம் மற்றும் வீட்டின் சுவர் மீது மோதி நின்ற இந்த பள்ளி வாகனத்தில், குழந்தைகள் இருந்திருந்தால் மின்சாரம் பாய்ந்து பெரும் அசம்பா விதம் ஏற்பட்டிருக்கும்.
பள்ளி வாகனங்களில் வேக கட்டுபாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவை அதிக வேகத்துடன் செல்கிறது. மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தனியார் பள்ளி வாக னங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்களும், ,பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
- மேயர் சத்யா வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 7 ந்தேதி முதல் 9-ந் தேதி வரை ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான மாணவ, மாணவிகளுக்காக வாலிபால் போட்டி நடைபெற்றது.
இதில் மாணவியருக்கான வாலிபால் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
இதையடுத்து , சாதனை படைத்த பள்ளி மாணவி களை ஓசூர் மேயர் எஸ். ஏ. சத்யாவை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களை பாராட்டிய மேயர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பயிற்சியாளர் மாணிக்கவாசகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.






