search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் கணினி பயன்பாட்டியியல் துறை சார்பில் கருத்தரங்கம்
    X

    கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முத்துமணி, சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கிய காட்சி.

    ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் கணினி பயன்பாட்டியியல் துறை சார்பில் கருத்தரங்கம்

    • தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார்

    ஓசூர்,

    ஓசூர் எம்ஜிஆர் கல்லூரியில் பி.காம். (கணினி பயன்பாட்டியியல்) துறை சார்பில் "இன்றைய நவீன யுகத்தில் வணிக நிலைப்புத் தன்மை மற்றும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். துறைத் தலைவர் வெங்கடே சன் வரவேற்று பேசினார். இதில் புதுச்சேரி பல்கலைக் கழகத்திலிருந்து, இணைப் பேராசிரியர் பாண்டு, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் வணிக நிலைத்தன்மை அதில் ஏற்பட்ட மாற்றங்கள் , புதிய தொழில் வாய்ப்புகள் , கண்டுபிடிப்புகள், தொழில் வளர்ச்சிப் பற்றி விளக்கி பேசினார்.

    மேலும் இதில், பிற கல்லூரியில் இருந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரை களைச் சமர்ப்பித்து பேசினர்.

    இந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை, கணினி பயன்பாட்டியியல் துறை உதவி பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.முடிவில் உதவி பேராசிரியர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.

    Next Story
    ×