search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம்
    X

    தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம்

    • திருவண்ணாமலையில் 22ந்தேதி தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம் நடைபெறும் என்று மதியழகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
    • வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை அண்ணா அறிவா லயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா வை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின்படி கழகத்தில் மொத்தம் 2 கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாக சேர்த்து ஒவ்வெரு வாக்குசா வடியிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தலைமை கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது.

    தலைவர் அறிவுரைப்படி சரிபார்க் கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 17 மற்றும் செப்டம்பர் 24 ஆகிய தேதிகளில் மேற்கு மண்டல வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    அதைத் தொடர்ந்து வடக்கு மண்டலம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்ட மன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலை ஒன்றியம் அருணாசலம் நகரில் உள்ள கலைஞர் திடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு நேரில் விவரங்களை தெரிவித்து அனைத்து தகவல்களையும் தெரிவித்து அதன்படி அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களும் தவறாமல் 22-ந் தேதி காலை 5 மணிக்கு தங்களின் பயணத்தை புறப்பட திட்டமிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    காலை 8 மணிக்குள் திருவண்ணாமலை அருணாசலம் நகரில் கூட்டம் நடைபெறும் கலைஞர் திடலுக்கு சென்றடைய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் தவறாமல் அழைத்து கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×