என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிளில்  சென்ற இளம்பெண்னிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு
    X

    மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண்னிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு

    • ஊத்தங்கரை அருகே மோட்டர் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லா வி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோழி நாயக்கன்பட்டியை சேர்ந்த வர் சேது. விவசாயி.

    இவருடைய மனைவி சுருதி (வயது 26). இந்த நிலையில் சம்ப வத்தன்று சுருதி காலை 11 மணி அளவில் தன்னுடைய வீட்டில் இருந் து மோட்டார் சைக்கிளில் கணவரை பார்க்க நிலத் திற்கு சென்று உள்ளார் .

    அப்போது அவர் பின்னால் இரு சக்கர வாக னத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் பின் தொ டர்ந்து வந்துள்ளார். அப் போது சுருதியின் மோட்டார் சைக்கிள் அருகே வந்த அவர் அவரிடம் ஏதோ பேசுவது போல பாவனை செய்து அருகில் வந்துள்ளார். இவர் என்ன என்று கேட்பதற்குள் அவரது கவனத்தை திசை திருப்பி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்கத் தாலி பறித்து கொண்டு இருசக்கர வாக னத்தில் தப்பியோடினார். இதில் மோட்டர் சைக்கிளி ருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த சுருதிக்கு கழுத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து சுருதி கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். பட்டப் பகலில் மோட்டர் சைக்கி ளில் வந்த பெண்ணிடம் தாலி பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×