என் மலர்
உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை கலெக்டர் சரயு, மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் சீர்வரிசை பொருட்களை வழங்கிய போது எடுத்த படம்.
கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உண்ண வேண்டும், கலெக்டர் கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை
- 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பாக்கு, பழம் மற்றும் பூ உள்ளிட்ட பொருட்கள் சடங்குகள் செய்து வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப் பள்ளி ஊராட்சி, சமுதாய கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதற்கு கலெக்டர் சரயு, டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்து குத்து விளக்கேற்றினார்கள். மேலும் மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நழுங்கு வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கி னார்கள்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றத்திற்காக வும், பெண்கல்வி ஊக்கப்படுத்திடவும் எண்ணற்ற பெண்கள் சார்ந்த நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களின் நலம் காக்கவும், தாய்சேய் நலனை மேம்படுத்து வதற்கும் சமுதாய வளைகாப்பு எனும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்வினை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை அங்கன்வாடியில் பயன்பெறும் பயணா ளிகளில் 1000 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலுங்கு வைத்து சீர் வரிசை பொருட்களான புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம் மற்றும் பூ உள்ளிட்ட பொருட்கள் சடங்குகள் செய்து வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து. புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் உள்ளிட்ட 5 வகையான உணவுகள் மற்றும் லட்டு பரிமாறப்பட்டது.
இன்றைய குழந்தைகள் தான் நாளைய சமுதாயம். ஒரு குழந்தையின் வளர்ச்சி அக்குழந்தையின் தாயின் கர்ப்ப பையில் உருவான போதே ஆரம்பமாகி விடுகிறது. ஒரு குழந்தை ஆரோக்கி யமான, அறிவான, உற்பத்தித் திறன் நிறைந்த குழந்தையாக உருவாக அந்த கர்ப்பிணி தாய்க்கு கர்ப்பமான நாளிலிருந்தே சிறப்பு கவனம் அளிக்க வேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் குறைந்தது 5 முறையாவது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பம் என்று தெரிந்த வுடன் அங்கன்வாடியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் மட்டுமே பிரசவம் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்பதால் தாய் மூன்று வேளை உணவுடன் ஒரு வேளை உணவை கூடுதலாகவும், அனைத்து ஊட்டச்சத்து களும் அடங்கிய உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அன்றாட உணவில் பச்சைக் கீரை வகைகள், காய்கறிகள் அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்கள், மீன், முட்டை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் கடினமான வேலைகளை தவிர்க்க வேண்டும். பகலில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும். மன மகிழ்ச்சியுடன் இருப்பது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். பெண் குழந்தைகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உட்கொண்டு அறிவுள்ள ஆரோக்கியமான குழந்தை களை பெற்றெ டுத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






