என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
    X

    அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

    • தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்
    • பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. கட்சி தொடங்கி 52 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர் பையூர் பெ.ரவி, நகர செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே. அசோக்குமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பி.டி. சுந்தரேசன், முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், பால்வளத் தலைவர் குப்பு சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன் , மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    Next Story
    ×