என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 40 பேர் கைது
- பணம் வைத்து சூதாடிய 46 பேர் பிடிபட்டனர்
- ரூ.3,500 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்த 40 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல பணம் வைத்து சூதாடியதாக 46 பேர் பிடிபட்டனர்.
லாட்டரி
மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி விற்பனை செய்த ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்க னிக்கோட்டை, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி பகுதிகளை சேர்ந்த 14 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா
இதே போல மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக ஊத்தங்கரை, சாமல்பட்டி, கல்லாவி, சிங்காரப்பேட்டை, நாகரசம்பட்டி, பர்கூர், கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, தளி, ராயக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா
மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா, என சோதனை நத்தினார்கள். இதில் கந்திகுப்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, பாகலூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,500 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சூதாட்டம்
அதே போல மாவட்டத்தில் எங்கும் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பணம் வைத்து சூதாடியதாக கல்லாவி, சிங்காரப்பேட்டை, பர்கூர், நாகரசம்பட்டி, வேப்பனப்பள்ளி, ஓசூர், பாகலூர், மத்திகிரி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 46 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.4,300 பறிமுதல் செய்யப்பட்டது.






