என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பைக்கில் சென்ற போது மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளார்
    • 6 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள பாசிநாயனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி விஜயா. இவர் தனது தங்கை செல்வியுடன் கடந்த 22-ந்தேதி அன்று இருசக்கர வாகனத்தில் பர்கூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் விஜயாவின் கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தலில் பயன்படுத்திய 373 வாக்கு எந்திரங்கள், உபகரணங்கள்.
    • இரண்டு லாரிகளில் ஏற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, வேப்பனப் பள்ளி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்திய 373 வாக்கு எந்திரங்கள், உபகரணங்கள் தேர்தலுக்கு பயன்படுத்திய பின்பு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பூட்டி சீல் வைத்து காவலர் பாதுகாப்பில் இருந்தது.

    சூளகிரி தாசில்தார் தேன்மொழி தலைமையில் மண்டல துணை வட்டாச்சியர் தேர்தல் அலுவலர் அருள்மொழி, காவலர், அலுவலர், கட்சியினர் முன்நிலையில் அறையை திறக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு 373 தேர்தல் எந்திரங்கள், உபகரணங்கள் துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு லாரிகளில் ஏற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 

    • சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார்.
    • வட்ட வழங்கல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ரூ.2,21,400- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைப்பெற்றது.

    இந்த முகாமிற்கு, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கி, 41 பயனாளிகளுக்கு, சமூக பாதுகாப்பு திட்டம், தோட்டக்கலைத்துறை, வட்ட வழங்கல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ரூ.2,21,400- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும் இதில், ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர் தம்பிதுரை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கோவிலில் ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டது.
    • அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அடுத்த செங்கல்தோப்பு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று கோவில் புன்னியாதானம் செய்தல் மற்றும் அம்மன் அலங்காரம் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று பிற்பகல் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.

    இதில் துர்க்கை அம்மன் அலங்காரத்துடன், மேளதாளங்கள் முழங்க, கரகம் விளை யாடுதல் நிகழ்ச்சியுடன், மெட்பண்டா, மேல்சோ மார்பேட்டை, லைன்கொ ல்லை, கீழ்சோ மார்பேட்டை, மோட்டூர், பூசாரிப்பட்டி, சின்னதா ளாப்பள்ளி, கிருஷ்ணபுரம், கீழ்புதூர், மேல்புதூர், பெருமாள் நகர், மேல்பட்டி, சிப்பாயூர், பள்ளித்தெரு, லண்டன்பேட்டை நாயுடு தெரு, பாஞ்சாலியூர், ஒண்டியூர், எம்ஜிஆர் நகர் பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.

    அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவினையொட்டி 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டது. விழாவினையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்
    • புதிய ஒய்வூதியத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

     சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் புதிய ஒய்வூதியத் திட்டத்தை திரும்ப பெறுதல், உறுதியளித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப் பட்ட ஊதியம் வழங்கப்படாதது அதிருப்தியை விதைத்துள்ளது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் அன்பரசு, மண்கலப்பாண்டியன், வாசுகி, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மூன்று சிறிய மதகின் மூலமும், 3147 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
    • நீர்திறப்பால், தரைப்பாலத்தை மூழ்கடித்து இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் அணைக்கு 2299 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 2426 கன அடிநீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 2563 கன அடியாக மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    அணையில் உள்ள எட்டு பிரதான மதகுகளில், ஒரு மதகில் இருந்தும், மூன்று சிறிய மதகின் மூலமும், 3147 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 50.25 அடியாக நீர்மட்டம் இருந்தது.

    நீர்திறப்பால், தரைப்பாலத்தை மூழ்கடித்து இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால், அணைக்குள் வர பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு, பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ, துணி வைக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • போலீசார் மத்திகிரி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற ஒரு காரையும் கைப்பற்றினர்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையை தடுப்பதற்காக மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாக்கூர் உத்தரவுப்படி, ஓசூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் நேரடி மேற்பார்வையில் மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திகிரி சப்-இன்ஸ்பெக்டர்கள் சிற்றரசு, பூபதிராமராஜு மற்றும் போலீசார் மத்திகிரி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது குருபட்டியை சேர்ந்த அன்வர் அலி என்பவரது மகன் அரிப் அலி (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அம்ஜத் என்பவரது மகன்முஷ்ரப் (22) ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

    இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற ஒரு காரையும் கைப்பற்றினர். மேலும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

    • அளவுக்கு அதிகமாக மதுஅருந்தியதால் மாந்தோப்பில் பிணமாக கிடந்தார்.
    • இது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா பேரிகை அருகே நரசாபுரத்தை சேர்ந்தவர் குரப்பா (வயது50), இவரது மனைவி நரசம்மா. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளது. அனைவருக்கும் திருமணமாகி பல்வேறு பகுதியில் வசிக்கின்றனர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பை பெங்களுரை சேர்ந்த மஞ்சுநாதா என்பவர் வாங்கியுள்ளார். இந்த மாந்தோப்பில் காவலாளியாக குரப்பா வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாள் முன்பு குரப்பா அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது.இதனால் வீடு திரும்பாத அவரை தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது குரப்பா இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்த குரப்பாவின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தொடர்மழையால் மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்று பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    • மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரிகளுடன் பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ராம்நகர் பகுதிகளில் தொடர்மழையால் மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்று பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த மழைநீரை பழைய பெங்களூர் சாலையில் உள்ள பேருந்து பணிமனையிலிருந்து, கழிவுநீர் கால்வாய் மூலம் ஏ.எஸ்.டி.சி ஹட்கோ பகுதியில் கால்வாய்களுடன் இணைப்பதற்கான திட்டம் குறித்து மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரிகளுடன் பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, கட்சியினர், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • தப்பி ஓடிய ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • லாரியை பறிமுதல் செய்த போலீசார் கிருஷ்ணகிரி தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் டோல்கேட் பகுதியை அருகே வாகன சொஅதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த லாரியை ஒட்டி வந்த ஆசாமிகள் அதிகாரிகளை கண்டவுடன் லாரியைநிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து லாரியை சோதனை செய்தபோது அதில் அரசு அனுமதியின்றி வேலிக்கற்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் கிருஷ்ணகிரி தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்று தற்போது பேச்சு எழுந்துள்ளது.
    • காவேரிப்பட்டணம் நகரில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி தகுதியற்றவர் என்று சசிகலா ஆதரவாளர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    காவேரிப்பட்டணம், 

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்று தற்போது பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இருவருக்கும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் ஆதரவு அளித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

    இந்நிலையில் காவேரிப்பட்டணம் நகரில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி தகுதியற்றவர் என்று . சசிகலா ஆதரவாளர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 2024 ம் ஆண்டுக்குள் லைட் மெட்ரோ திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும்.
    • ஓசூரில், மக்கள் பயன்பாட்டுக்காக, உதான் திட்டத்தின் கீழ், விமான சேவை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.

    ஓசூர்,

    ஓசூரில், பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்காக பா.ஜ.க.வின் சார்பில் மத்திய மந்திரி மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசி 2024 ம் ஆண்டுக்குள் "லைட் மெட்ரோ" திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்ற, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    ஓசூரில், மக்கள் பயன்பாட்டுக்காக, உதான் திட்டத்தின் கீழ், விமான சேவை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து ,மத்திய மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியாவிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

    ஓசூர்-கிருஷ்ணகிரி -ஜோலார்பேட்டை வழியாக ஏற்கனவே அறிவித்த ரயில்வே திட்டம் கிடப்பில் உள்ளது. அதை மீண்டும் எடுத்து 2024- ஆம் ஆண்டிற்கு முன்பாக அந்தப் பணிகளையும் நடத்தி முடித்துக் கொடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவரும் விரைவில் இந்த பணிகளை மேற்கொள்வ தாக உறுதி அளித்துள்ளார்.

    ஓசூர் பகுதியில் தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்க ளுக்கு உதவு கின்ற வகையில் இந்தப் பகுதியில் முதலீடுகளை ஊக்குவிப்ப தற்காக வும் தொழிற்சாலை களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் பாஜ.க. சார்பில், ஒரு குழுவை அமைத்து செயல்படுத்தப் பட உள்ளது.

    இவ்வாறு அவர் நிருபர்க ளிடம் கூறினார்.

    பேட்டியின் போது, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×