என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெங்களூர்-ஓசூர் வரை மெட்ரோ ரெயில் திட்டம் 2024-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும்,   பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி
    X

    பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் பேட்டியளித்தபோது எடுத்தப்படம்.

    பெங்களூர்-ஓசூர் வரை மெட்ரோ ரெயில் திட்டம் 2024-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும், பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி

    • 2024 ம் ஆண்டுக்குள் லைட் மெட்ரோ திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும்.
    • ஓசூரில், மக்கள் பயன்பாட்டுக்காக, உதான் திட்டத்தின் கீழ், விமான சேவை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.

    ஓசூர்,

    ஓசூரில், பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்காக பா.ஜ.க.வின் சார்பில் மத்திய மந்திரி மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசி 2024 ம் ஆண்டுக்குள் "லைட் மெட்ரோ" திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்ற, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    ஓசூரில், மக்கள் பயன்பாட்டுக்காக, உதான் திட்டத்தின் கீழ், விமான சேவை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து ,மத்திய மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியாவிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

    ஓசூர்-கிருஷ்ணகிரி -ஜோலார்பேட்டை வழியாக ஏற்கனவே அறிவித்த ரயில்வே திட்டம் கிடப்பில் உள்ளது. அதை மீண்டும் எடுத்து 2024- ஆம் ஆண்டிற்கு முன்பாக அந்தப் பணிகளையும் நடத்தி முடித்துக் கொடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவரும் விரைவில் இந்த பணிகளை மேற்கொள்வ தாக உறுதி அளித்துள்ளார்.

    ஓசூர் பகுதியில் தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்க ளுக்கு உதவு கின்ற வகையில் இந்தப் பகுதியில் முதலீடுகளை ஊக்குவிப்ப தற்காக வும் தொழிற்சாலை களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் பாஜ.க. சார்பில், ஒரு குழுவை அமைத்து செயல்படுத்தப் பட உள்ளது.

    இவ்வாறு அவர் நிருபர்க ளிடம் கூறினார்.

    பேட்டியின் போது, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×